டிசம்பர் மாதம் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

sivan astrology
- Advertisement -

ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகங்களின் பெயர்ச்சியும் 12 ராசிக்கும் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில் டிசம்பர் மாதத்தில் கிரகங்களில் சஞ்சாரத்தாலும் பெயற்சியாலும் சில ராசிகளுக்கு கெடு பலன்களாக அமைந்துள்ளது. அந்த ராசிக்காரர்கள் யார் அதிலிருந்து எப்படி தப்பித்துக் கொள்ள வேண்டும். என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை எல்லாம் ஜோதிடம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

டிசம்பர் மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

ஒவ்வொரு ராசிக்கான பலன் கிரகங்களின் மாற்றத்தை வைத்து கணிக்கப்படுகிறது. எந்த ஒரு கிரகத்தின் மாறுதலும் மற்ற கிரகங்களுக்கு நிச்சயம் ஏதேனும் ஒரு பலனை அளிக்கும். அது நன்மையாகவும் இருக்கலாம். தீமையாகவும் இருக்கலாம். அந்த வகையில் டிசம்பர் மாதத்தில் கிரகத்தின் சஞ்சாரத்தால் ரிஷபம், சிம்மம் விருச்சிகம் மகரம், கும்பம் இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கும் பாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

- Advertisement -

இந்த ராசிக்காரர்கள் இந்த மாதத்தை வெகு கவனத்துடன் கடக்க வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் சொல்கிறது. எந்த ஒரு செயலிலும் யோசித்து இறங்க வேண்டும் .வீண் விவாதங்களை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது. குடும்பத்திற்குள் தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் உருவாகும் சூழ்நிலை வந்தால் முடிந்த வரையில் அதையும் தவிர்த்து விடுவது நல்லது.

அதுமட்டுமின்றி இந்த மாதத்தில் கடன் வாங்குவதை குறைத்துக் கொள்வது நல்லது. முடிந்தால் தவிர்த்து விடுங்கள் தவிர்க்க முடியாத காரணத்தினால் வாங்குபவர்கள் கவனமாக யோசித்து வாங்குங்கள். இந்த மாதத்தில் இவர்கள் கடன் வாங்கும் போது அது திருப்பி அடைக்க கூடிய சூழ்நிலை உருவாகலாம் என்று சொல்லப்படுகிறது. மிகவும் எச்சரிக்கை உணர்வுடன் முன்னெச்சரிக்கை யாக செயல்பட வேண்டிய காலம் இது.

- Advertisement -

இந்த ராசிக்காரர்களுக்கு ஏற்படக் கூடிய கெடுபலன்களை பற்றி தெரிந்து கொண்டோம். இவற்றில் இருந்து இவர்கள் தப்பிக்க என்ன பரிகாரம் என்பதையும் பார்த்துக் கொள்வோம். இந்த ராசிக்காரர்கள் சிவ வழிபாட்டை செய்வது சிறந்த பரிகாரமாக கருதப்படுகிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அருகில் உள்ள சிவாலயத்திற்கு செல்லுங்கள். அதே போல் சிவாய நம என்ற நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

வீட்டில் கோமதி சக்கரம், வலம்புரி சங்கு போன்றவை இருந்தால் அதற்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தாலும் இந்த கிரகப்பெயர்ச்சியின் தாக்குதலிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். வீட்டில் லிங்கம் வைத்திருப்பவர்கள் வழிபாடு செய்வதன் மூலமும் இந்த பெயர்ச்சியின் பாதிப்பிலிருந்து விலகலாம். இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருப்பதுடன் இந்த எளிய பரிகாரத்தையும் செய்யும் போது இந்த மாதத்தை முடிந்த வரையில் பிரச்சனைகள் இல்லாமல் கடந்து விடலாம்.

இதையும் படிக்கலாமே: டிசம்பர் மாதத்தில் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள்

ஜோதிடம் குறித்த இந்த பதிவில் உள்ள தகவல்கள் ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது. இந்த கருத்துக்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனில் பயன்படுத்தி பலன் அடையலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -