- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகோடீஸ்வர யோகம் தரும் குபேர காலம்

கோடீஸ்வர யோகம் தரும் குபேர காலம்

- Advertisement -

கஷ்டப்பட வேண்டும் என்று யாருமே ஆசைப்படுவது கிடையாது. நாம் ஒவ்வொருவரும் சிறப்பான வாழ்க்கை வாழ வேண்டும், பணக்கார வசதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். பணக்கார வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைக்காவிட்டாலும் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு நம்முடைய வாழ்வாதாரம் இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். இப்படி பணம் தொடர்பான எந்த ஒரு வேண்டுதலாக இருந்தாலும் அந்த வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு உதவக்கூடிய நாளாக தான் வியாழக்கிழமை திகழ்கிறது.

வியாழக்கிழமை குரு பகவானுக்குரிய கிழமையாக இருந்தாலும் மாலை நேரமான 5 மணியிலிருந்து 7 மணிக்குள் குபேரருக்குரிய காலமாக திகழ்கிறது. அந்த நேரத்தில் நாம் செய்யக்கூடிய வழிபாட்டு முறைகள் குபேரரின் அருளையும் மகாலட்சுமியின் அருளையும் பெற்றுத் தருவதோடு பணம் தொடர்பாக இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களை நீக்கும் என்றே கூறலாம். அந்த குபேர கால வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

குபேர காலம் வழிபாடு

இந்த வழிபாட்டை வளர்பிறையில் வரக்கூடிய வியாழக்கிழமை அன்று தொடங்க வேண்டும். மாலை 5 மணியிலிருந்து 7 மணிக்குள் இருக்கக்கூடிய நேரமான குபேர நேரத்தில் இந்த வழிபாட்டை நாம் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை பூஜை அறையில் தான் செய்யப் போகிறோம் என்பதால் பெண்கள் சுத்தமாக இருக்கும் பட்சத்தில் தான் இந்த வழிபாட்டை செய்ய முடியும். இதற்கு நமக்கு ஒரு கண்ணாடி கிண்ணம் ஒன்று வேண்டும். அதேபோல் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் அல்லது ஐந்து ரூபாய் இந்த மூன்று நாணயங்களில் ஏதாவது ஒரு நாணயத்தை 36 எண்ணிக்கையில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதில் 5 ரூபாய் நாணயத்தை எடுத்து வைப்பது என்பது மிகவும் சிறப்பு. ஏனென்றால் குபேரருக்கு உகந்த எண்ணாக ஐந்து திகழ்கிறது. இந்த நாணயங்களை சேகரித்து மஞ்சள் கலந்த தண்ணீரில் சுத்தமாக கழுவி ஈரம் இல்லாமல் துடைத்து தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

வீட்டில் லட்சுமி குபேரரின் படம் இருக்கும் பட்சத்தில் அந்த படத்தை சுத்தம் செய்து பச்சை நிற குங்குமத்தை வைக்க வேண்டும். ஒருவேளை லட்சுமி குபேரர் படம் இல்லை என்பவர்கள் மகாலட்சுமி படத்திற்கு முன்பாக இந்த வழிபாட்டை செய்யலாம். அதே போல் பச்சை நிற குங்குமம் இல்லை என்பவர்கள் சிவப்பு நிற குங்குமத்தை வைத்துக் கொள்ளலாம். ஆனால் குபேரருக்கு உகந்த நிறமான பச்சை நிற குங்குமத்தை வைத்து நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வழிபாட்டின் பலனை விரைவிலேயே பெற முடியும்.

- Advertisement -

அடுத்ததாக லட்சுமி குபேரருக்கு முன்பாக வடக்கு பார்த்தவாறு ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து வாசனை மிகுந்த மலர்களை சாற்றி ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். ஒரு விரிப்பை விரித்து வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு கண்ணாடி கிண்ணத்தை முன்பாக வைத்துக்கொண்டு 36 நாணயங்களையும் கையிலோ அல்லது வேற ஏதாவது ஒரு கிண்ணத்திலோ வைத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது பின்வரும் குபேர லட்சுமியின் மந்திரத்தை கூற வேண்டும். ஒரு நாணயத்தை வலது கையில் எடுத்து அதை நம்முடைய நெஞ்சில் வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை கூறி அந்த கிண்ணத்தில் போட வேண்டும். இப்படி ஒவ்வொரு நாணயமாக மந்திரத்தை கூறி கிண்ணத்தில் போட வேண்டும். இப்படி 36 முறை செய்து முடித்த பிறகு அந்த கிண்ணத்தில் இருக்கக்கூடிய நாணயங்களை நன்றாக குளுக்கி விட்டு சாம்பிராணி தூபம் கற்பூரம் காட்டி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய வியாழக்கிழமையில் குபேர காலத்தில் இந்த முறையில் நாம் வழிபாடு செய்வதன் மூலம் லட்சுமி குபேரரின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும்.

- Advertisement -

மந்திரம்

“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் லட்சுமி குபேராய நமஹ”

இதையும் படிக்கலாமே:அடகு நகையை திருப்ப செலவில்லாத வழிபாடு

எளிமையான வழிப்பாடாக இருந்தாலும் இந்த வழிபாட்டை முழு மனதோடு முழு நம்பிக்கையோடும் யார் ஒருவர் செய்கிறார்களோ அவர்களுக்கு லஷ்மி குபேரரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று செல்வ செழிப்புடன் கோடீஸ்வர யோகத்துடன் வாழும் வாய்ப்பு உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்