ஓய்வினை எடுக்க தனிவிமானத்தில் பறந்த கோலி மற்றும் அனுஷ்கா – பதிவு உள்ளே

virat-anushka

நியூசிலாந்து அணிக்கெதிரான கடைசி இரண்டு ஆட்டங்களில் அணியில் இருந்து ஓய்வு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அதன்படி கோலி நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் இருந்து விலகினார்.

இந்த ஓய்வு நேரத்தினை கண்டிப்பாக இந்தியாவில் கழிக்கமாட்டேன் என்று ஏற்கனவே கோலி அறிவித்திருந்தார். அதன் காரணம் யாதெனில், இந்தியாவில் கோலி மற்றும் அனுஷ்கா எளிதில் அடையாளம் காணப்படுவார்கள். அதனால் அவர்களால் எளிதாக வெளியே செல்ல மற்றும் நடந்து செல்ல முடியாது.

இதனால் தங்களை அடையாளம் காண முடியாத ஒரு இடத்திற்கு சென்று தங்களது ஓய்வினை எடுக்க கோலி முடிவு செய்தார். அதன்படி தற்போது அவர்கள் இருவரும் தனிவிமானத்தில் இருந்து இறங்கிவரும் புகைப்படத்தை கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு உங்களுக்காக :

திருமணமாகி ஒரு ஆண்டு முடிந்த நிலையில் மனைவியுடன் சிறிது நாட்களே கழித்த கோலி கிடைக்கும் சமயங்களில் தனது மனைவியை இதுபோன்று வெளியிடத்திற்கு அழைத்துச்சென்று சர்ப்ரைஸ் செய்து மகிழ்கிறார். வாழ்த்துக்கள் கிங் கோலி, குயின் அனுஷ்கா

இதையும் படிக்கலாமே :

நேருக்கு நேர் .உலககோப்பையினை வெல்ல இந்தியாவிற்கு இந்த அணி பெரும் சவாலாக இருக்கும் – டூபிளசிஸ்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்