ஹோட்டல் அறையில் பெண்கள். தோனியா கோலியா. சச்சினா ?

team

சென்ற வாரத்திலிருந்து ராகுல் மற்றும் பாண்டியாவின் செயல் குறித்து சர்ச்சைகள் வெளிவந்து வைரலாக பரவிவருகின்றன. இதனால் பாண்டியா மற்றும் ராகுல் அணியில் இருந்தும் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்ககளையும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பி உள்ளது. அவர்கள் இருவரது உலகக்கோப்பை இடமும் கேள்விக்குறியாகி உள்ளது.

rohit-koli

பாண்டியா மற்றும் ராகுல் ஆகியோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி ஏற்கனவே பல இந்திய கிரிக்கெட் வீரர்களை வைத்து நிகழ்ச்சியினை நடத்திவந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஒரு எபிசோடில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் கோலியிடம் கேட்கப்பட்ட கேள்விகள் பின்வருமாறு விவரித்துள்ளோம்.

தொகுப்பாளர் கோலியிடம் கேட்ட கேள்விகள் : இந்திய வீரர்கள் ஹோட்டல் அறைக்கு பெண்களை அழைத்து வருவதை நீங்கள் விரும்புவீர்களா? கோலி – நிச்சயம் நான் அனுமதிக்கமாட்டேன். நமது பணி நாட்டிற்காக போட்டிகளில் பங்கேற்பது மட்டுமே அதனால் உங்களுடைய தனிப்பட்ட விடயங்களை நீங்கள் அணிக்குள் புகுத்தக்கூடாது என்பதே என்று பதிலளித்திருந்தார் கோலி.

lose-1

மேலும் சச்சினா ? நீங்களா ? யார் சிறந்தவர். கோலி – நான் சிறுவயதிலிருந்து வளரும் போதே என் அறையில் சச்சினின் புகைப்படத்தை வைத்து வளர்ந்தவன் எனவே, என்னை அவருடன் நான் என்றும் ஒப்பிட்டது கிடையாது. யார் சிறந்த கேப்டன்? நீங்களா தோனியா? நான் தோனி அளவிற்கு இன்னும் எந்த சாதனையும் நிகழ்த்தவில்லை எனவே, நிச்சயம் தோனி பாய் என்றும் என்னுடைய சிறந்த கேப்டன் என்றே கூறுவேன் என்று கூறி இருந்தார் விராட் கோலி.

இதையும் படிக்கலாமே :

ஹார்டிக் பாண்டியா இப்படி பட்டவர் தான். இப்படித்தான் பேசுவார் – பாண்டியாவின் தந்தை பேட்டி

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்