வீட்டின் வாசலை அலங்கரிக்க போடப்படும் கோலத்தை நிச்சயமாக இந்த மூன்று நாட்களில் மட்டும் தவிர்த்து விட வேண்டும். இல்லை என்றால் நமக்கு தான் பாவம் வந்து சேரும்

kolam5
- Advertisement -

நமது தாத்தா பாட்டி காலத்தில் எல்லாம் வீட்டில் இருக்கும் பெண்மணிகள் காலை எழுந்ததும் முதலில் செய்வது, வீட்டின் வாசலை திறந்து, வாசல் பெருக்கி தண்ணீர் தெளித்து, கோலம் இடுவது. பின்னர் அந்த கோலத்திற்கு காவி வண்ணம் தீட்டி அலங்காரம் செய்து, நடுவில் சாணி உருண்டை வைத்து, அதன்மீது பூசணி மலர்களை வைத்து விடுவர். இவ்வாறு மற்றவர்கள் எழுந்திருக்கும் முன்னரே காலையிலேயே இந்த வேலைகளை எல்லாம் முடித்து விடுவார்கள். வீட்டில் இருக்கும் மற்றவர்கள் எழுந்து வந்து வெளியில் நின்ற உடன் நமது கண்களுக்கு அழகாக இந்த கோலம் காட்சியளிக்கும். காலையில் பார்க்கும் காட்சி மிகவும் அழகாகவும், எதிர்மறை உடையதாகவும் இருந்தால் அன்றைய நாள் முழுவதுமே மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். இப்படி சிறப்புகள் வாய்ந்த இந்த கோலத்தை நிச்சயமாக இந்த மூன்று நாட்களில் மட்டும் தவிர்த்து விட வேண்டும். அப்படி அவை எந்தெந்த நாட்கள் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kolam1

இப்படி வாசல் தெளித்து கோலம் இடுவது வெறும் அலங்காரத்திற்காக மட்டுமல்ல. இதன் பின்னால் பல ரகசியங்கள் புதைந்து இருக்கின்றன. நம் முன்னோர்கள் எதைச் செய்தாலும் அதில் பல அர்த்தங்கள் இருந்துள்ளன. மேலோட்டமாகப் பார்ப்பதற்கு அவை சாதாரணமாகத் தான் தெரிகின்றன. ஆனால் இவற்றின் அர்த்தத்தை ஆராய்ந்து பார்த்தோம் என்றால் நம்மையும் அறியாமல் நம் கண்களும் விரிகின்ற வகையில் பலவித ஆச்சர்யங்களை கொண்டுள்ளன.

- Advertisement -

கோலம் போடுவதற்கு என்று அவர்கள் பயன்படுத்தும் மாவு வெறும் சுண்ணாம்புக்கல் கிடையாது. அன்றைய காலத்தில் எல்லாம் அவர்கள் பச்சை அரிசியை உரலில் அரைத்து, அந்தப் பொடியை வைத்து தான் கோலம் இடுவார்கள். இந்த அரிசி மாவை சிறு சிறு உயிரினங்களான எறும்பு, வண்டு போன்றவை உண்டு தங்களின் பசியைப் போக்கிக் கொள்கின்றன. அதுமட்டுமல்லாமல் சுப தேவதைகள் உலா வரும்பொழுது அனைவரது வீட்டின் வாசலையும் பார்த்துச் செல்வார்கள்.

Kolam

அப்படி அவர்கள் பார்த்துக் கொண்டே வரும் பொழுது எந்த வீடு மிகவும் அழகாக மங்களகரமாக இருக்கின்றதோ அந்த வீட்டிற்குள் தங்களையும் அறியாமல் நுழைந்து விடுவார்களாம். இப்படி சுப தேவதைகள் வீட்டுக்குள் நுழைந்து விட்டால் போதும். அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும் என்ற பழமொழிக்கு ஏற்ப அவர்களது இல்லத்தில் செல்வ செழிப்புகள் பெருக ஆரம்பிக்கும்.

- Advertisement -

ஆனால் இவ்வாறு கோலம் போடுவதை பித்ருக்களுக்கு பூஜை செய்யும் நாட்களான அமாவாசை மற்றும் தவசம் செய்யும் நாட்களில் நிச்சயமாக தவிர்த்துவிட வேண்டும். அமாவாசை அன்று ஒரு நாள் மட்டும் கோலம் போடுவதை தவிர்க்க வேண்டும். ஆனால் தவசம் செய்யும் பொழுது தவசம் செய்யும் முதல் நாளில் இருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் கோலமிட கூடாது.

amavasai

அடுத்ததாக ஒருவரின் தந்தை, தாயோ அல்லது மாமனார், மாமியாரோ அல்லது பங்காளிகளோ இறந்து விட்டால் அந்த வீட்டில் ஒரு வருடத்திற்கு கோலம் போடுவதை தவிர்க்க வேண்டும். வாசல் பெருக்கி தண்ணீர் தெளிக்கலாம். ஆனால் கோலம் மட்டும் இடக்கூடாது. இவ்வாறு கோலம் விடுவதை தவிர்ப்பது என்பது பித்ருக்களின் வரவேற்ப்பை குறிப்பதற்கும், இதனால் சுப தேவதைகளும், தேவர்களும் நமது வீட்டிற்குள் அன்றைய தினம் வராமல் பித்ருக்களுக்கு படைக்கும் உணவை சாப்பிடாமல் இருப்பதற்கும் தான். இவ்வாறு பித்ருக்களுக்கு செய்யப்படும் உணவை இவர்கள் ஏற்றுக் கொண்டால் இவர்களுக்கு தான் தோஷம் வந்து சேரும். அது மட்டுமல்லாமல் இதற்கு காரணமான நம்மையும் தான் அந்த தோஷம் பாதிக்கும். எனவே அன்றைய தினங்களில் வாசலில் கோலம் போடுவதை நிச்சயம் தவிர்த்து விடுங்கள்.

- Advertisement -