தோனி இந்திய அணியை என்னிடம் ஒப்படைத்த போது நான் நினைத்தது இதுதான் – கோலி நெகிழ்ச்சி

dhoni
- Advertisement -

இந்திய அணியை சேர்ந்த அதிரடி வீரரும் முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி கடந்த 2015ஆம் ஆண்டு சிட்னி நகரில் நடந்த டெஸ்ட் போட்டியோடு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் நட்ச்சத்திர ஆட்டக்காரரான கோலி கேப்டன் பொறுப்பை ஏற்று இன்று வரை அணியை வழிநடத்தி வருகிறார்.

koli 2

தோனி ஓய்வு பெற்றபோது இந்திய அணி தரவரிசையில் பின்தங்கி இருந்தது. அதும் இல்லாமல் இளம் வீரர்களை கொண்ட ஒரு அணியாக இருந்தது. அந்த தருணம் குறித்து கோலி பேட்டி ஒன்றினை அளித்தார். அவர் கூறியதாவது : தோனி ஓய்வு முடிவினை தீடிரென்று அறிவித்தார். அந்த இளம் அணியை வழிநடத்தும் பொறுப்பு எனக்கு வந்தது.

- Advertisement -

அந்த சமயத்தில் இருந்த இந்திய அணியை கட்டுக்கோப்பாக வடிவமைத்து இந்திய அணியை தரவரிசையில் முன்னுக்கு கொண்டுவர திட்டமிட்டேன். அதன் படி அவ்வோப்போது அணியில் மாறுதல்களை செய்தேன். எனது அனைத்து முயற்சிக்கும் வெற்றி கிடைத்தது. தென்னாபிரிக்கா,இங்கிலாந்து, நியூசிலாந்து என்று பல அணிகளை டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தினோம்.

team

இப்போது தரவரிசையில் நாம் முதலிடத்தில் உள்ளோம்.இதனைத்தான் நான் அன்றே முடிவு செய்தேன். இந்திய அணியை முதலிடத்தில் கொண்டுவரவேண்டும் என்று கடினமாக உழைத்தோம். இன்று நமது அணி தொடர்ந்து பல்வேறு நாடுகளில் வெற்றியை குவிக்கிறது. ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடர் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைக்க ஆவலோடு உள்ளோம் என்று நெகிழ்ந்தார் கிங் கோலி.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

ஆஸ்திரேலிய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட ஆஸி கேப்டன்! ஏன் தெரியுமா?

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -