கொண்டைக்கடலையில் இப்படி சுவையான ஒரு டிஷ் செய்யுங்க. இதை வைத்து இப்படி சுவையான சைவ கறி மசாலா செய்ய முடியுமா என்று மற்றவர்கள் ஆச்சரியப்படும் வகையில் இதன் சுவை அவ்வளவு அற்புதமாக இருக்கும்

eeral
- Advertisement -

உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை அதன் சுவையின் காரணமாக பலரும் விரும்பி சாப்பிடுவதில்லை. மருந்து என்பது சற்று கசப்பாகத்தான் இருக்கும். அது போல உடலில் ஊட்டச்சத்து அளிக்க கூடிய உணவுகள் நாம் விரும்பி சாப்பிடும் வகையில் இருப்பது சற்று கடினம் தான். இருப்பினும் இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். எனவே புரதச் சத்து அதிகம் நிறைந்த உணவுகளை உணவுடன் சேர்த்துக் கொள்வதற்கு அதனை எப்படி சுவைமிக்கதாக செய்ய வேண்டும் என தெரிந்து கொண்டு, அவ்வாறு வீட்டில் உள்ளவர்களுக்கு சமைத்துக் கொடுத்தால் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து விடும். இவ்வாறு கொண்டைக்கடலை வைத்து ஒரு சுவையான சைவ கறி மசாலா கிரேவியை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:
கருப்பு கொண்டைக்கடலை – ஒரு கப், மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன், தனியா தூள் – ஒன்றரை ஸ்பூன், கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், பூண்டு – 6 பல், இஞ்சி சிறிய துண்டு – 2, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 3, பச்சை மிளகாய் – 6, பூண்டு – 10 பல், உப்பு – ஒன்றரை ஸ்பூன், எண்ணெய் – 5 ஸ்பூன், ஏலக்காய் – 2, கிராம்பு – 2, பட்டை சிறிய துண்டு – 1, கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதல் நாள் இரவே ஒரு கப் கொண்டைக் கடலையை தண்ணீர் ஊற்றி கழுவி, மறுபடியும் அதில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றிக் ஊற வைக்க வேண்டும். பிறகு மறுநாள் காலை அந்தத் தண்ணீரை வடிகட்டி, கொண்டைக்கடலையை மட்டும் மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும்.

பிறகு அதனுடன் ஒரு ஸ்பூன் சீரகம், 3 பச்சைமிளகாய், 5 பல் பூண்டு மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு 5 ஸ்பூன் விழுதை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொண்டு, ஒரு தட்டையான கிண்ணத்தில் எண்ணெய் சேர்த்து முழுவதுமாக தடவிக் கொண்டு, இந்த விழுதை அதில் தட்டையாக பரப்பி வைக்கும்படி சேர்க்க வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி அதன் அடியில் ஒரு சிறிய கிண்ணத்தை வைத்து, அதன் மீது மசாலா வைத்துள்ள பாத்திரத்தை வைத்து, மூடி போட்டு 20 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும். பின்னர் மீதமுள்ள விழுதில் மறுபடியும் 5 பல் பூண்டு, அரை ஸ்பூன் சீரகம், இஞ்சி மற்றும் வெங்காயம், தக்காளியை நறுக்கி சேர்க்க வேண்டும். பிறகு இதனையும் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, ஏலக்காய், கிராம்பு, பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள விழுதை ஊற்றி வதக்க வேண்டும். பின்னர் இவற்றுடன் மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். பின்னர் வேக வைத்த மசாலாவை வெளியே எடுத்து உங்களுக்கு வேண்டிய வடிவத்தில் கட் செய்து, இந்த மசாலாவுடன் சேர்த்து கொதிக்க வைத்து இறுதியாக கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்ந்தால் போதும். சுவையான சைவ கறி மசாலா தயாராகிவிடும்.

- Advertisement -