- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதிருமணம் நடக்க சித்தர் சொன்ன வழிபாடு

திருமணம் நடக்க சித்தர் சொன்ன வழிபாடு

- Advertisement -

அந்த காலத்திலேயே மனித இனத்திற்கு என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதைப் பற்றியும், அதற்கு உண்டான பரிகாரங்களை பற்றியும் சித்தர்கள் சிந்தித்து உள்ளார்கள். இந்த கலியுகத்தில் நிறைய பேருக்கு ஜாதகத்தில் இருக்கும் தோஷம் காரணமாக, திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.

உங்களுக்கு எத்தனை வயதை கடந்திருந்தாலும் சரி, திருமணம் நடக்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்களா, நல்ல மணமகன், நல்ல மணமகள் அமையவில்லையா. உங்களுக்கு சீக்கிரமே திருமணம் நடக்க இந்த எளிய பரிகாரம் கை கொடுக்கும். இந்த பரிகாரத்தை தெரிந்து கொள்வதற்கு முன்பு, இந்த கொங்கணர் சித்தர் யார் என்பதை சுருக்கமாக ஓரிரு வரிகளில் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

கேரளத்தில் கொங்கண தேசத்தில் பிறந்ததால் இவரை கொங்கண சித்தர் என்று சொல்கின்றோம். இவருடைய நிஜமான பெயர் என்ன என்பது நமக்கு தெரியாது. இவர் கொங்கண இனத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 18 சித்தர்களில் இவரும் முக்கியமான சித்தராக கருதப்படுகின்றார். இவருடைய சமாதி திருப்பதியில் இருக்கிறது. திருப்பதி இன்று புகழ்பெற்ற இடமாக விளங்குவதற்கு இவரும் ஒரு காரணம். இவ சொன்ன பரிகாரத்தை பார்த்து விடுவோம்.

திருமணம் நடக்க பரிகாரம்

உங்களுக்கு திருமணம் விரைவில் நடக்க வேண்டுமா. நேராக திருப்பதி கிளம்பி செல்லுங்கள். அங்கு அலமேலு மங்கையையும், பெருமாளையும் தரிசனம் செய்யுங்கள். திருப்பதியில் விளக்கு ஏற்றுவதற்காக தனியாக ஒரு இடம் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும். அந்த இடத்தில் விளக்கு போட வேண்டும்.

- Advertisement -

உங்களுக்கு எத்தனை வயது ஆகிறது, அத்தனை மண் அகல் விளக்குகளில் நல்லெண்ணெயோ அல்லது நெய்யோ ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, கொங்கண சித்தரை மனதார நினைத்துக் கொள்ளுங்கள். பெருமாளையும் தாயாரையும் மனதார நினைத்துக் கொண்டு, சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

நீங்கள் பிறந்த நட்சத்திரம், நீங்கள் பிறந்த திதி, உங்களுக்கு தெரிந்தால் அந்த நாளில் இந்த விளக்கு ஏற்றுவது சிறப்பு. அப்படி இல்லை என்றால் வெள்ளிக்கிழமை, செவ்வாய் கிழமை, திங்கட்கிழமை, அமாவாசை, பௌர்ணமி நாட்களில் இந்த விளக்கை ஏற்றுவது சிறப்பான பலனை தரும். இந்த வழிபாட்டை முடித்துக் கொண்டு திருப்பதியில் இருக்கும் கொங்கணர் சித்தர் ஜீவசமாதிக்கு சென்று அந்த இடத்தில் சிறிது நேரம் அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்து கொள்ளுங்கள். கொங்கணர் சித்தரையும் வேண்டிக் கொள்ளுங்கள். நிச்சயமாக உங்களுக்கு சீக்கிரமே திருமணம் நடக்கும்.

இதையும் படிக்கலாமே: பாவம் போக்கும் சிவ மந்திரம்

இந்த வழிபாட்டை முடித்துவிட்டு உங்கள் வீடு திரும்பியதும், உங்களுடைய வீட்டில் யாரேனும் சிறுவயதில் இருந்திருந்தாலோ, அதாவது குழந்தை பிறந்துத்தில் இருந்திருந்தாலும் சரி, அல்லது கன்னி பெண்ணாக இருந்து இறந்திருந்தாலும் சரி, சிறுவயதிலேயே யாராவது அகால மரணம் அடைந்திருந்தாலும் சரி, அவர்களை நினைத்து வீட்டில் சின்னதாக ஒரு பூஜை செய்து வழிபாடு செய்யுங்கள். மேல் சொன்ன வழிபாட்டை முறைப்படி நம்பிக்கையோடு செய்தாலே திருமணத்தடை நீங்கி சீக்கிரம் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. தேவைப்படுபவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறவும்.

சற்று முன்