சிவ சிவ! சிவ சிவ! என்று சொல்லிக் கொண்டே ஒரு நாளை நாம் துவங்கும் போது அந்த நாள் நமக்கு வெற்றிகரமான நாளாக அமையும். சிவசிவ மந்திரத்திற்கு அத்தனை சக்தி. ஓம் நமசிவாய மந்திரத்தை மனதிற்குள் சொல்லிக்கொண்டே இருந்தால் நம்முடைய மனதில் எந்த கெட்ட எண்ணமும் எழாது. அந்த சிவபெருமானே வந்து நம்முடைய மனதில் குடி கொள்வார்.
அந்த எம்பெருமான் ஈசனின் அருள் ஆசியைப் பெற பிரதோஷ நேர வழிபாடு நமக்கு கை கொடுக்கும். நாளைய தினம் 04-06-2024 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையில் பிரதோஷம் வரவிருக்கின்றது. நாளைய தினம் செய்ய வேண்டிய சிவ வழிபாட்டை பற்றியும் 1 வரி மந்திரத்தை பற்றியும் தான் இந்த ஆன்மீகம் பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
பொதுவாகவே செவ்வாய் என்றால் கடன். கடன் பிரச்சனையில் இருந்து வெளி வருவதற்கு, செவ்வாய் கிழமை பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும். 27 வில்வ இலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ‘சிவ சிவ’ நாமத்தை எழுத வேண்டும்.
விபூதியில் கொஞ்சமாக பன்னீர் ஊற்றி கரைத்து, அந்த விபூதியை உங்கள் வலது கை ஆள்காட்டி விரலால் தொட்டு வில்வ இலையில் இந்த மந்திரத்தை எழுதி, இந்த இலையை சிறிது நேரம் காய வைத்து விட்டு, அப்படியே சுருட்டி மாலையாக தொடுத்து எம்பெருமானே என்னுடைய கடனை தீர்த்து வை என்று சொல்லி சிவன் கோவிலுக்கு எடுத்துச் சென்று, பிரதோஷ நேரத்தில் இந்த மாலையை சிவபெருமானுக்கு அணிவித்தால் உங்கள் கடன் பிரச்சனை படிப்படியாக குறையும்.
பிரதோஷ நேரத்தில் சிவன் கோவிலில் கூட்டமாகத்தான் இருக்கும். கூட்டத்தில் அடித்துப் பிடித்து எப்படியாவது சிவபெருமானை பார்த்து விட வேண்டும் என்று எல்லோரையும் தள்ளி விட்டு முன்னுக்கு சென்று முந்தியடித்து, இறைவனை வழிபாடு செய்யாதீர்கள். நீங்கள் பிரதோஷ நேரத்தில் கோவிலுக்குள் இருந்தாலே போதும்.
சிவபெருமான் சன்னிதானத்திற்குள் நீங்கள் நுழைந்து விட்டால், நீங்கள் சிவபெருமானை பார்க்க வேண்டாம், அந்த சிவபெருமான் உங்களை பார்த்து விடுவார். கோவிலில் ஏதாவது ஒரு இடத்தில் ஓரமாக அமர்ந்து கொள்ளுங்கள். ‘ஓம் ஆம் ஹவும் சவும்’ என்ற இந்த மந்திரத்தை மனதிற்குள்ளேயே ஜெபியுங்கள். மூடி இருக்கும் கண்களுக்கு முன்னே சிவலிங்கம் தெரிய வேண்டும்.
சிவபெருமானின் மனதார நினைத்து இந்த மந்திரத்தை மட்டும் உச்சியுங்கள். பிறகு உங்களுடைய நல்லது கெட்டதை அந்த சிவபெருமான் பார்த்துக் கொள்வார். என்ன வரம் கேட்டீர்களோ அதை தவறாமல் கொடுத்து விடுவார். பிறகு கூட்டம் எல்லாம் குறைந்த பிறகு சிவபெருமானை தரிசனம் செய்யுங்கள். சிவபெருமான் ஆலயத்தில் கொடுக்கும் பிரசாதத்தை வாங்கிக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே: 04-06-2924 பிரதோஷ நாளில் செய்ய வேண்டிய நரசிம்மர் வழிபாடு.
நிம்மதியாக வீடு திரும்புங்கள். வாழ்க்கையில் உங்களை பின்தொடரும் கஷ்டங்களை முற்றுப்புள்ளி வைத்து உங்கள் கர்மாவை குறைத்து, கடனை குறைத்து நல்லது தானாக நடக்க தொடங்கும். நாளைய தினம் அனைவரும் இந்த சிவன் வழிபாட்டை பின்பற்றி பலன் பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.