நாம் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு விநாயகருக்கு நாம் இந்த ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்தாலே போதும்.. சகல காரிய வெற்றியும் நமக்கு அருள்வார்.

vinayagar favourite food
- Advertisement -

முழு முதற் கடவுளாக திகழக்கூடியவர் விநாயகப் பெருமான். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை நாம் நினைத்து வழிபட்டோம் என்றால் அவர் நமக்கு வேண்டிய வரங்கள் அனைத்தையும் அருள்வார் என்று கூறப்படுகிறது. திரும்பிய திசை எங்கும் அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த விநாயகப் பெருமானின் அருளை நாம் பரிபூரணமாக பெறுவதற்கு எந்த பொருளை அவருக்கு படைத்து வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தெய்வங்களை வழிபடுவதற்கு பல வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு முறையில் நாம் வழிபாடு மேற்கொள்வோம் அதில் மிகவும் எளிமையாக செய்யக்கூடிய வழிபாடுகளை உடையவர் தான் விநாயகப் பெருமான். மூன்று தோப்புக்கரணமும் தலையில் கொட்டும் கொட்டிக் கொண்டாலே அவர் உள்ளம் மகிழ்ந்து விடுவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

பொதுவாக நாம் எந்த ஒரு வேண்டுதலை எந்த தெய்வத்திடம் வைத்தாலும் இந்த வேண்டுதல் நிறைவேறிவிட்டால் இதை செய்கிறோம் அதை செய்கிறோம் இப்படி செய்கிறோம் அப்படி செய்கிறோம் என்று வேண்டிக் கொள்வோம். அந்த மாதிரி நாம் விநாயகரிடம் வைக்கக்கூடிய கோரிக்கைகள் நிறைவேறுவதற்கு எந்த பொருளை நெய்வேத்தியமாக தர வேண்டும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

எந்த ஒரு வேண்டுதலை நாம் விநாயகரிடம் வைத்தாலும் அந்த வேண்டுதல் நிறைவேறிய பிறகு 54 அல்லது 108 என்ற எண்ணிக்கையில் மோதகம் செய்து நெய்வேத்தியமாக படைக்கிறேன் என்று வேண்டிக் கொண்டால் கண்டிப்பான முறையில் அந்த காரியம் வெற்றி அடையும் என்பது அனுபவபூர்வமான உண்மையாகும்.

- Advertisement -

முடிந்த அளவு இந்த கொழுக்கட்டையை நாமே நம் வீட்டில் சொந்தமாக தயார் செய்து விநாயகருக்கு வைத்து வழிப்பட்டோம் என்றால் அதன் முழு பலனை நம்மால் முழுமையாக பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

விநாயகருக்குரியக் கிழமையான திங்கட்கிழமையன்று அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அவருக்கு பிடித்தமான அருகம்புல் மற்றும் ஒற்றை செம்பருத்தியை மாலையை அவருக்கு அணிவித்து, அவரிடம் நம்முடைய வேண்டுதலை வைத்து இரண்டு நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு தொடர்ந்து 5 வாரங்கள் திங்கட்கிழமை தோறும் விநாயகர் பெருமானே வழிபட்டு நம்முடைய வேண்டுதலை வைத்தோம் என்றால் அவர் நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றுவார். அவர் நிறைவேற்றிய பிறகு அடுத்து வரும் திங்கட்கிழமை அன்று மோதகத்தை நம் வீட்டிலேயே செய்து அவருக்கு நெய்வேத்தியமாக படைத்துவிட்டு கோவிலுக்கு வருபவர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: அட்சய பாத்திரமே உங்கள் கையில் வந்ததை போல அள்ள அள்ள குறையாத செல்வத்தை பெற, அங்காரக சங்கடஹர சதுர்த்தியான இன்று மாலை விநாயகருக்கு செம்பருத்தி இலையை வைத்து இப்படி செய்தால் போதும்.

இத்தகைய எளிமையான வழிபாட்டை மேற்கொண்டு நம் காரியங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக நடத்தி காட்டுவோம்.

- Advertisement -