இயற்கையாக மை தயாரிப்பது எப்படி? 10 பைசா செலவில்லாமல் வீட்டிலேயே 10 நிமிஷத்தில் கண் மை இப்படித்தான் தயாரிக்கணுமா?

kan-mai-coir
- Advertisement -

அந்த காலம் முதல் இந்த காலம் வரை குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் அழகு சேர்ப்பது இந்த கண் மை! கண்களிலும், கன்னத்திலும் கண் மை வைத்து எவருடைய கண்ணேறுகளும் நம்மை அண்டாமல் இருக்க நம் முன்னோர்கள் வழி வகுத்து சென்ற ஒரு நல்ல விஷயம் ஆக இருக்கிறது. இந்தக் கண் மையை எளிதாக 10 பைசா செலவில்லாமல் நம்முடைய வீட்டிலேயே எப்படி தயார் செய்யலாம்? என்பதை தான் இந்த வீட்டு குறிப்பு சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

கண் மை தயாரிக்க முதலில் நம்முடைய வீட்டில் தேவை இல்லை என்று தூக்கி எறிய கூடிய இந்த பொருளை சேகரித்து கொள்ள வேண்டும். தேங்காயை உரித்து விட்டு அதன் நாரை நாம் கீழே குப்பையில் எரிந்து விடுகிறோம். ஆனால் இந்த நாரில் எவ்வளவு விஷயங்களை செய்யலாம் தெரியுமா? தேங்காய் நார் செடிகளுக்கு நல்ல ஒரு உரமாக இருக்கிறது. இது பல உரக்கடைகளில் விற்பனைக்கும் உள்ளன. இதை நம் வீட்டிலேயே சேகரித்து மண் தொட்டியில் போட்டு வைத்தால் கொஞ்ச நாளில் சூப்பரான உரம் தயார்!

- Advertisement -

இந்த உரத்தை கொண்டு நீங்கள் எந்த செடியை வைத்தாலும் அது செழிப்பாக சூப்பராக வளரும். அது போல நம்முடைய வீட்டில் கண் மை தயாரிக்க இந்த தேங்காய் நாரை பயன்படுத்தலாம். சிறிதளவு தேங்காய் நாரை எடுத்து ஒரு மண்சட்டி அல்லது ஏதாவது ஒரு தேவையில்லாத பாத்திரத்தில் போட்டு நெருப்பில் எறிய விட வேண்டும். கொழுந்துவிட்டு தேங்காய் நார் எரிந்து முழுவதுமாக சாம்பல் ஆகிவிடும். சாம்பல் ஆன பின்பு நன்கு ஆற விட்டு விடுங்கள்.

ஆறியதும் உங்களுடைய கைகளால் இதை தேய்த்து கொடுத்தால் அது பவுடர் போல ஆகிவிடும். இந்த பொடியை கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் நான்கைந்து சொட்டுக்கள் தேங்காய் எண்ணெயை சேர்த்து மை போல கரைக்க வேண்டும் அல்லது நீங்கள் மிக்ஸியில் அல்லது உரலில் இட்டு இடித்தும் இது போல எண்ணெய் ஊற்றி மை செய்து கொள்ளலாம். இந்த மையை நீங்கள் மூடி போட்டு பாத்திரத்தில் சேகரித்து வைத்துக் கொண்டால் இயற்கையான மை தயார்!

- Advertisement -

இந்த மையை குழந்தைகளுக்கு வைத்தால் எந்த விதமான அலர்ஜி தொந்தரவுகளும் இருக்காது. மேலும் தீய சக்திகளும், கண் திருஷ்டிகளும் அண்டாது. பச்சிளம் குழந்தைகளுக்கு கெமிக்கல் கலந்த மை வைப்பதை விட இது போல நம் வீட்டிலேயே தயார் செய்து வைக்கும் பொழுது பாதுகாப்பானதாக இருக்கும். குழந்தைகளுக்கு மட்டும் அல்லாமல் பெண்கள் கண்களில் கூட இதை தாராளமாக தடவிக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு வைக்கும் பொழுது உள்ளங்காலிலும், உள்ளங்கையிலும், கண்ணம் மற்றும் நெற்றி பகுதியிலும் வைப்பது நல்லது.

இதையும் படிக்கலாமே:
கறுத்து போன பழைய கவரிங் நகைகளை பாலிஷ் போட்டு புதிது போல மாற்ற இனி அதிக பணம் செலவழிக்க தேவையில்லை இந்த சிம்பிள் டெக்னிக்கை ஃபாலோ பண்ணுங்க. எவ்வளவு பழைய நகையாக இருந்தாலும் நிமிடத்தில் பளிச்சென்று மாறி விடும்.

இயற்கையான முறையில் தயார் செய்வதால் இதை அழிப்பதும் சுலபமானது. சிறிதளவு தேங்காய் எண்ணெயை தடவி ஈரத்துணியால் துடைத்து எடுத்தால் சுலபமாக அழிந்து விடும். இலகுவாக இல்லாமல் சற்று கெட்டியாக தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த கண் மை ஒரு வாரம் வரை வைத்து பயன்படுத்தலாம். மீண்டும் மறுவாரம் நீங்கள் புதிதாக தயார் செய்வது நல்லது.

- Advertisement -