மாலை 6 மணிக்கு படை எடுத்து வீட்டிற்குள் வரும் கொசுவை, அடியோடு ஒழித்துக் கட்ட இந்த சாம்பிராணி வத்தியை ஏற்றி வையுங்கள் போதும்.

kosu
- Advertisement -

கடையிலிருந்து வாங்கிய சாம்பிராணி வத்தி அல்ல இது. நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து நம் கையாலேயே செய்யக்கூடிய சாம்பிராணி உருண்டை என்று வைத்துக் கொள்ளுங்கள். இதை ஏற்றி மாலை ஆறு மணிக்கு வாசலில் வைத்து விட்டால் போதும். இதன் வாசத்திற்கு கொசுக்கள் நம் வீட்டிற்குள் நுழையாது. வீட்டிற்குள் இருக்கும் கொசுவும் மயங்கிவிடும். வாங்க நேரத்தை கடத்தாமல் இந்த எளிமையான சூப்பரான வீட்டு குறிப்பை நாமும் தெரிந்து கொள்வோம்.

இந்த சாம்பிராணி தயார் செய்ய நமக்கு காய்ந்த வேப்பிலை 2 கைப்பிடி அளவு, பூண்டு தோல் 2 கைப்பிடி அளவு, காய்ந்த புதினா இலைகள் 20, காய்ந்த கற்பூரவள்ளி இலை 20, கற்பூரம் 10, ஜவ்வாது 2 சிட்டிகை, தசாங்கம் 3 இந்த பொருட்கள் எல்லாம் தேவை. முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கோங்க. அதில் காய்ந்த வேப்பிலைகளையும் பூண்டு தோல், காய்ந்த புதினா, காய்ந்த கற்பூரவள்ளி இலைகளை போட்டு முடிந்தவரை அரைத்துக் கொள்ளுங்கள். (இந்த பொருட்கள் எல்லாம் ஓரளவுக்கு கொரகொரப்பாக அரைபட்டால் கூட போதும்.) பூண்டு காம்பு இருந்தால் கூட அதை இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

அடுத்து கற்பூரம் தசாங்கம் ஜவ்வாது இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக போட்டு மிக்ஸியில் ஒரு ஓட்டு ஓட்டி எடுத்துக்கோங்க. இது நைஸ் பவுடராக நமக்கு கிடைக்கும். இப்ப இந்த எல்லா பொருட்களையும் ஒரு பௌலில் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு போலவே பிசைய வேண்டும். ரொம்பவும் கட்டியாக வராது. எடுத்து கையில் உருண்டை பிடித்தால் உதிராமல் இருக்க வேண்டும். அந்த அளவிற்கு மாவை தயார் செய்து கொள்ளுங்கள். சிறிய சிறிய உருண்டைகளாக எடுத்து உருண்டைகளாக உருட்டி சிலிண்டர் வடிவத்தில் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

அதாவது கம்ப்யூட்டர் சாம்பிராணி வத்தி எந்த ஷேப்பில் இருக்கும். அந்த மாதிரி தயார் செஞ்சுக்கோங்க. இல்லையா உருண்டையாவே பிடிச்சுக்கோங்க. அது உங்களுடைய சவுகரியம். பிடித்த இந்த உருண்டைகளை அப்படியே ஒரு தட்டில் அடுக்கி நல்ல வெயிலில் ஒரு நாள் காயவைத்து கொள்ள வேண்டும். காய்ந்த இந்த உருண்டைகளை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு மூடி வைத்துக் கொண்டால் தினமும் ஒன்று என்ற கணக்கில் எடுத்து நம் விருப்பம் போல பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

ஒரு சிறிய மண் அகல் விளக்கில் நாம் தயார் செய்த இந்த சாம்பிராணி கட்டியை வைத்து இதன் மேலே ஒரு கற்பூரத்தை வைத்து கொளுத்தி விடுங்கள். இது அப்படியே எரிய தொடங்கும். ஐந்து நிமிடத்தில் எரிந்து முடிந்துவிடும். எரிந்து முடிந்த பிறகு இதிலிருந்து லேசான புகையும் வாசனையும் நமக்கு வெளிவரும். இதுதான் நம் வீட்டில் இருக்கும் கொசுக்களை விரட்டி அடிக்கக்கூடிய புகை வாசனை.

இதையும் படிக்கலாமே: சில்வர் வாட்டர் பாட்டிலில் கெட்ட வாடை வீசுதா? இந்த 1 பொருளை வாட்டர் கேனில் போட்டு வைத்தால் எந்தவித துர்நாற்றமும் வீசாது.

இந்த சாம்பிராணி தயார் செய்ததில் நாம் தசாங்கம் ஜவ்வாது எல்லாம் சேர்த்திருக்கின்றோம் இந்த புகை வெளிவரும்போது உங்களுடைய வீடு தெய்வ கடாட்சத்துடனும் இருக்கும். (இந்த சாம்பிராணியை வீட்டிற்குள்ளேயும் கூட ஏற்றலாம். ஜாக்கிரதையாக ஏற்றி வையுங்கள்.) உங்களுக்கு மேலே சொன்ன வாசனை பொருட்களில் பிடிக்காதது ஏதாவது இருந்தால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் கட்டாயமாக காய்ந்த வேப்பிலை, பூண்டு தோல், கற்பூரம், புதினா, கற்பூரவள்ளி இலைகளை சேர்த்துதான் இந்த கொசுவிரட்டியை தயார் செய்ய வேண்டும். பிடிச்சிருந்தா இந்த ஐடியாவை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -