சில்வர் வாட்டர் பாட்டிலில் கெட்ட வாடை வீசுதா? இந்த 1 பொருளை வாட்டர் கேனில் போட்டு வைத்தால் எந்தவித துர்நாற்றமும் வீசாது.

waterbottle
- Advertisement -

பெரும்பாலும் இப்போது நம்முடைய வீடுகளில் பிளாஸ்டிக் வாட்டர் கேன் பயன்படுத்துவதை விட, இந்த எவர்சில்வர் வாட்டர் பாட்டிலை தான் பயன்படுத்தி வருகின்றோம். இந்த வாட்டர் கேனை நாம் பயன்படுத்த பயன்படுத்த அதன் உள்ளே லேசாக ஒரு துர்நாற்றம் வீச தொடங்கிவிடும். அந்த துர்நாற்றம் வராமல் சில்வர் வாட்டர் கேனை எப்படி சுத்தம் செய்வது என்பதை பற்றிய குறிப்பும், அதே சமயம் பயன்படுத்தாமல் மூடி வைத்திருக்கும் வாட்டர் கேனுக்கு உள்ளே எந்த பொருளை போட்டு வைத்தால், அந்த வாட்டர் பாட்டில் துர்நாற்றம் வீசாமல் இருக்கும் என்பதை பற்றிய பயனுள்ள குறிப்பையும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

இந்த வாட்டர் கேனை சுத்தம் செய்வதற்கு நமக்கு வெதுவெதுப்பான தண்ணீர், எலுமிச்சைப்பழச் சாறு, தூள் உப்பு, விம் லிக்விட், இந்த நான்கு பொருட்கள் தேவைப்படும். வாரத்தில் இரண்டு நாட்கள் இப்படி எவர்சில்வர் வாட்டர் கேனை சுத்தம் செய்தால் அதிலிருந்து துர்நாற்றம் நிச்சயமாக வீசாது. உள்ளே இருக்கும் கறைகளும் சுத்தமாக நீங்கிவிடும்.

- Advertisement -

முதலில் வாட்டர் கேனுக்கு உள்ளே எலுமிச்சை பழச்சாறு 1ஸ்பூன் பிழிந்து கொள்ளுங்கள். சிறிதளவு தூள் உப்பு போட்டுக் கொள்ளுங்கள். சிறிதளவு விம் லிக்விடை ஊற்றி விடுங்கள். (வேறு பாத்திரம் தேய்க்கும் லிக்விட் கூட ஊற்றிக் கொள்ளலாம்.) இதில் வெதுவெதுப்பான தண்ணீரை கேன் முழுமையாக ஊற்றி, அப்படியே அரை மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். அதன் பின்பு வாட்டர் கேன் சுத்தம் செய்யும் பிரஷ்ஷை இதன் உள்ளே விட்டு நன்றாக தேய்த்து கழுவினால், உள்ளே இருக்கும் கறைகள் அனைத்தும் நீங்கிவிடும். கெட்டவாடை வீசாமலும் இருக்கும். குறிப்பாக குழந்தைகள் வாய் வைத்து குடிக்க கூடிய அந்த பகுதியை நன்றாக நார் வைத்து தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். இறுதியாக இரண்டு மூன்று முறை நல்ல தண்ணீரை வாட்டர் கேனுக்கு உள்ளே ஊற்றி குலுக்க கீழே ஊற்ற வேண்டும்.

வாட்டர் கேன் மூடியையும் நாம் தனியாக அக்கறை எடுத்து சுத்தம் செய்ய வேண்டும். ஒரு அகலமான பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி, அதில் எலுமிச்ச பழச்சாறு, விம் லிக்விட் போட்டு, அதில் இந்த வாட்டர் கேன் மூடிகளை போட்டு அரை மணி நேரம் ஊற வைத்து அதன் உள்ளே பிரஷை விட்டு நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். வாட்டர் கேன் மூடி உள் பக்கம் வட்ட வட்டமாக இருக்கும் அல்லவா. அதன் உள்ளே ஒரு பிரஷை வைத்து தேய்த்து கழுவுங்கள்.

- Advertisement -

கூடுமானவரை வாட்டர் கேனை எடுத்து ஸ்டோர் செய்வதற்கு முன்பு உள்ளே இருக்கும் தண்ணீர் நன்றாக காய்ந்து இருக்க வேண்டும். தண்ணீரோடு மூடி போட்டு வைக்கக்கூடாது. கேனை கவிழ்த்து நன்றாக காய வைத்து அதன் பின்பு மூடி போட்டு ஸ்டோர் செய்து வைக்க வேண்டும். முடிந்தால் பயன்படுத்தாமல் எடுத்து வைக்கக்கூடிய வாட்டர் கேனை இரண்டு மணி நேரம் நல்ல வெயிலில் வைத்து காய வைப்பது நல்லது. வெயிலில் வைத்து நன்றாக ஈரம் போக காய்ந்த வாட்டர் கேனுக்கு உள்ளே 1 ஸ்பூன் சர்க்கரையை போட்டு மூடி வைத்தால் அந்த வாட்டர் கேன் கெட்ட வாடை வீசாது.

மேலே சொன்ன எந்த பொருட்களுமே உங்கள் வீட்டில் இல்லை என்றால் பல் தேய்க்கும் பேஸ்டை வாட்டர் கேனில் போட்டுக்கோங்க. தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து அதன் பின்பு ஒரு வாட்டர் கேன் கழுவும் பிரஷை வைத்து, கேனை சுத்தம் செய்தாலும் உடனடியாக கேனக்கு உள்ளே இருக்கும் கறைகள் நீங்கும் துன்னாற்றம் வீசாமல் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: 40 நாள் வர்ற காஸ் சிலிண்டர் 60 நாளுக்கு மேலே வரணுமா? அப்டின்னா இதெல்லாம் மறக்காம தெரிஞ்சி வெச்சிக்கோங்க!

கேன் எவ்வளவு நீளமாக இருக்கிறதோ அதன் அடிபாகத்தை தொடும் வரை ப்ரஷ் நீளம் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அந்த கேனுக்கு உள்ளே ஒரு பாத்திரம் தேய்க்கும் நார் போட்டு, பெரிய கரண்டியின் பின் பக்கத்தை வாட்டர் கேனுக்கு உள்ளே விட்டு, சுத்தம் செய்ய வேண்டும். அப்போது தான் வாட்டர் கேன் அடி பக்கத்தில் இருக்கும் கறை சுத்தமாக நீங்கும்.

- Advertisement -