கோவில் புளியோதரை பிரியர்களா நீங்க! இந்த ‘கோவில் புளி சாதம்’ ரெசிபி உங்களுக்காக மட்டும்.

puli-sadam
- Advertisement -

வீட்டில் எவ்வளவு தான் முயற்சி செய்து பக்குவமாக புளியோதரை செய்தாலும் அது கோவிலில் கொடுக்கப்படும் ஒரு தொன்னை புளியோதரைக்கு ஈடு இணையாக இருக்காது. கோவில் பிரசாதத்திற்கு எப்போதுமே தனி மகிமை உண்டு. கோவில் கொடுக்கப்படும் அந்த சுவையான புளி சாதத்தை நம்முடைய வீட்டில் எப்படி செய்வது. தெரிந்துகொள்வோம் வாருங்கள். முதலில் ஒரு பெரிய எலுமிச்சம்பழம் அளவு புளியை தண்ணீரில் போட்டு ஊற வைத்து கரைத்து, புளிக்கரைசலை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

puli-sadam3

தேவையான அளவு சாதத்தை உதிர் உதிராக வடித்து ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி ஆற வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். சாதம் குழையாமல் வடிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக மிளகு – 2 ஸ்பூன், எள்ளு – 2 ஸ்பூன், கடுகு – 2 ஸ்பூன், வெந்தயம் – 1/2 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், உளுந்தம்பருப்பு – 1 ஸ்பூன், இந்த பொருட்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக தனி தனியாக கடாயில் போட்டு பக்குவமாக சிவக்க வைத்து எடுக்க வேண்டும். எண்ணெய் ஊற்றாமல் டிரை ரோஸ்ட் தான் செய்ய வேண்டும். எந்த பொருளும் கருதி விடக்கூடாது. அதேசமயம் வராமலும் இருக்கக் கூடாது. குறிப்பாக வெந்தயம் பிரவுன் கலரில் வறுபட்டு இருக்க வேண்டும். எல்லாப் பொருட்களையும் ஒரே ஸ்பூனில் அளந்து எடுத்துக் கொள்ளுங்கள். (எல்லா பொருட்களையும் மொத்தமாக போட்டு கட்டாயமாக வறுக்கக் கூடாது. அது சரியான பக்குவத்தில் வருபடாது. புளியோதரைக்கு சுவை தராது.)

puli-sadam4

வறுத்த இந்த எல்லாப் பொருட்களையும் நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பொடி புளியோதரைக்கு போடப்போகும் பொடி. இதை மொத்தமாக நாம் அப்படியே புளியோதரையில் சேர்க்கப் போவதில்லை. தேவையான அளவு மட்டும் சேர்த்துக் கொண்டால் போதும். மீதியை பாட்டிலில் போட்டு ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். புளிக்கரைசலை தாளிக்க வேண்டும். நல்லெண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன், கடுகு – 1 ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், உளுந்தம்பருப்பு – 1 ஸ்பூன், இந்த பொருட்கள் அனைத்தும் பொன்னிறமாக வறுபட்டதும் வறுத்த வேர்க்கடலை – 1 கைப்பிடி, முந்திரி பருப்பு – 10, கருவேப்பிலை – 1 கொத்து, இந்த 3 பொருட்களை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து முந்திரி பொன்னிறம் வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.

puli-sadam2

அடுத்தபடியாக கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை கடாயில் ஊற்றுங்கள். புளி கரைசலுடன் மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், மிளகாய்தூள் – 1 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை சேர்த்து நன்றாக கலந்து விட்டு அடுப்பை சிம்மில் வைத்து புளியின் பச்சை வாடை நீங்கும் வரை, புளி நன்றாக சுண்டி ஊற்றிய எண்ணெய் மிதந்து வரும் வரை புளியை காய்ச்ச வேண்டும். புளி தொக்கு பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள்.

puli-sadam1

இந்த புளிக் கரைசலையும் நாம் மொத்தமாக பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நல்ல ஆறிய பின்பு ஒரு பாட்டிலில் சேகரித்து பிரிட்ஜில் வைத்துக் கொண்டால் 15 நாட்களுக்கு கூட கெடாமல் இருக்கும். இப்போது நமக்கு புளிக்கரைசல் தயாராக உள்ளது. புளியோதரைக்கு தேவையான பொடியும் தயாராக உள்ளது.

puli-sadam5

வடித்த சாதத்தை ஒரு அகலமான பேஸினில் போட்டு கொள்ளுங்கள். இந்த சாதத்திற்கு தேவையான புளிக்கரைசல், சாதத்துக்கு தேவையான புளியோதரை பொடி, இந்த இரண்டு பொருட்களையும் சாதத்தோடு சேர்த்து பக்குவமாக கலந்து மேலே பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி தழைகளைத் தூவி, 5 நிமிடங்கள் அப்படியே தம் போட்டு வைத்து விட்டு, பிறகு பரிமாறி பாருங்கள். அட்டகாசமான கோவில் சுவையில் புளியோதரை தயாராக இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்து இருந்தால் உங்களுடைய வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -