கோவிலில் கிடைக்கும் இந்த பொருள் வீட்டிற்கு கொண்டு வந்தால் வேண்டிய வேண்டுதல் நிறைவேறும்! அது என்ன பொருள்?

temple-prayer

கோவில் கிடைக்கும் பல்வேறு பொருட்கள் பிரசாதமாக நாம் வீட்டிற்கு கொண்டு வருவது உண்டு. வேத பண்டிதர் கொடுக்கும் விபூதி முதல் புனித தீர்த்தங்களில் இருந்து கொண்டு வரப்படும் தண்ணீர் வரை அத்தனையும் தேவ பிரசாதமாக நினைத்து வீட்டிற்கு கொண்டு வந்து பூஜை அறையில் வைப்போம். அப்படி கொண்டு வந்து வைக்கப்படும் பொருட்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த ஒரு பொருளும் கோவிலில் இருந்து வீட்டிற்கு கொண்டு வந்து முறையாக வழிபாடு செய்தால் வேண்டிய வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். அது என்ன பொருள்? என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

lemon

பல்வேறு கோவில்களில் கொடுக்கப்படும் எலுமிச்சை பழங்களை வீட்டிற்குள் கொண்டு வந்து வைத்து பூஜைகள் செய்வர். கோயிலில் கொடுக்கப்படும் எலுமிச்சைக்கு மிகுந்த சக்தி இருப்பதால் அதனை வீணாக்காமல் ஜூஸ் போட்டு குடித்து விடலாம். கோவில் எலுமிச்சை பழத்தை ஜூஸ் போட்டு குடிக்கலாமா? என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கும். உண்மையில் கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதங்களை ஒரு பொழுதும் வீணாக்கக் கூடாது. அதற்கு பதிலாக அதனை பயன்படுத்தி விடுவது நல்லது. ஆனால் கோவில் பிரசாதங்களை மீண்டும் பூஜையில் வைக்க கூடாது என்பது தான் சாஸ்திர நியதி.

ஒரு சிலர் எல்லாம் கோவிலில் கொடுக்கப்படும் தேங்காய், பூ, பழங்கள் முதலானவற்றை மீண்டும் பூஜையில் வைத்து பூஜை செய்வார்கள். இது போல் ஒரு பொழுதும் செய்யக் கூடாது. கோவிலில் கொடுக்கப்படும் எந்த ஒரு பொருளும் மீண்டும் பூஜையில் வைக்க கூடாது என்பது மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அதை வீணாக்க கூடாது என்பதால் பயன்படுத்தி விடுவது நல்லது. தேங்காய் கொடுத்தால் அதனை சமையலில் தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இது போல் எல்லாவற்றையும் பயனுள்ளதாக செய்து கொள்ளலாம்.

theertham1

அது போல் புண்ணிய தீர்த்தங்களில் இருந்து கொண்டு வரப்படும் தண்ணீர் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் வீடு முழுவதும் தெளித்து விடலாம். இதனால் துஷ்ட சக்திகள் எதுவும் அண்டாமல் இருக்கும். அது போல் கோவிலில் கொடுக்கப்படும் துளசி தீர்த்தம் முதலானவற்றை சிறிதளவு கேட்டு வாங்கிக் கொண்டு வந்து பூஜை அறயில் வைத்து விடலாம். இதனை தினமும் வீட்டில் தெளித்து வந்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்பது ஐதீகம்.

கோவிலில் இருக்கும் ஸ்தல விருட்சம் என்பது மூலவருக்கு இணையான சக்தி பெற்றுள்ளது. தல விருட்சத்தை வணங்குபவர்களுக்கு நோய் நொடி இல்லாத வாழ்வு அமையும். அத்தகைய ஸ்தல விருட்சம் இருக்கும் இடத்தில் சுற்றி இருக்கும் மண்ணை ஒரு கைப்பிடி அளவிற்கு எடுத்துக் கொண்டு வாருங்கள். அதனை வீட்டில் வைத்து வணங்குவது சகல, சௌபாக்கியங்களையும் பெற்று தருமாம்.

sand

ஒரு சிறிய வெள்ளை காட்டன் துணியில் இந்த மண்ணை முடிந்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் உங்களுக்கு தீராத பிரச்சினைகள் இருக்கும் பொழுது அதனை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு, இஷ்ட தெய்வத்தை வணங்கி தேவையான வரங்களை கேட்டால் உடனே வாரி வழங்குவார்கள். கேட்கும் வரத்தை தரும் சக்தி ஸ்தல விருட்ச மண்ணிற்கு இருப்பதாக புராண குறிப்புகள் கூறி உள்ளன. உங்களுடைய குலதெய்வ கோவிலில் இருக்கும் மண்ணை இது போல் எடுத்து வந்து செய்வது இன்னும் கூடுதல் பலன்களை கொடுக்கும்.