கோவிலுக்கு சென்று வந்த பிறகு செய்யக் கூடாதவை

gopuram kunkumam
- Advertisement -

கோவிலுக்கு செல்வதே நம்முடைய கஷ்டங்கள் தீரவும் மன நிம்மதி அடையவும் நம் வாழ்க்கையில் அடுத்தடுத்து நல்லவையாக நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளவும் தான். அப்படி கோவிலுக்கு செல்லும் போதும் கோவிலில் இருந்து திரும்ப நம் வீட்டிற்கு வரும் பொழுதும் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று நம்முடைய சாஸ்திரங்கள் சொல்கிறது. அதை சரியான முறையில் பின்பற்ற வைத்தால் கோவிலுக்கு சென்று வந்ததற்கான கிடைக்காமல் போய் விடும்.

பெரும்பாலானோர் கோவிலுக்கு செல்வது ஒரு கடமையாகவும் அன்றைய தினம் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக செல்பவர்களா இருக்கிறார்கள். கோவிலுக்கு செல்வதும் சென்ற பிறகு வீட்டிற்கு வந்து நாம் செய்யும் சில விஷயங்களை ஆளும் இறையருள் நம்முடன் நிரந்தரமாக தங்குமென்று சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கோவிலுக்கு சென்று வந்த பின் செய்யக் கூடாதவை

கோவிலுக்கு சென்று வந்த பிறகு செய்யக் கூடாதவைகளில் முக்கியமானதாக சொல்லப்படுவது வீட்டிற்கு வந்தவுடன் கை கால் முகம் அலம்பி சுத்தம் செய்வது பொதுவாக வெளியில் சென்று வீட்டிற்கு வந்தால் உடனே கை கால் முகம் அளந்துவது வழக்கம். ஆனால் ஆலயத்திற்கு சென்று வந்தால் இதை செய்யக் கூடாது. இதனால் ஆலயத்திலிருந்து நம்முடன் வீடு வரை வந்து இறை சக்தி திரும்ப சென்று விடும்.

அதேபோல் ஆலயத்திற்கு சென்று நேராக நாம் வீட்டிற்கு தான் திரும்பி வரவேண்டும் வழியில் தெரிந்தவர் உறவினர் என யார் வீட்டிற்கு செல்லக்கூடாது. தொலைதூர கோவில்களுக்கு செல்லும்போது வழியில் உணவருந்த செல்வம் அது கணக்கில் வாராது. விருந்தாளியாக நாம் யார் வீட்டிற்கும் செல்லக் கூடாது.

- Advertisement -

அதே போல் ஆலயத்தில் கொடுக்கும் விபூதி குங்குமம் பிரசாதத்தை நாம் அப்படியே கொண்டு வந்து கண்ட இடத்தில் வைக்க கூடாத. அதை பூஜை அறையில் தான் வைக்க வேண்டும. அதேபோல் விபூதி குங்குமத்தை நாம் மடித்துக் கொண்டு வந்திருக்கும் பேப்பரில் இருந்து எடுத்து மாற்றி வைத்து விட வேண்டும். கோவிலுக்கு சென்று வந்தவுடன் அசைவம் சாப்பிடுவதை அறவே தடுத்துவிட வேண்டும்.

ஒரு வேளை சாப்பிட வேண்டிய சூழ்நிலை வந்தாலும் சிறிது நேரம் கழித்து சாப்பிடுவது நல்லது. அதே போல் பலரும் என்று வீட்டிற்குள் நுழையும் போதே டிவியை ஆன் செய்யும் பழக்கம் உள்ளது. ஆனால் ஆலயத்திற்கு சென்று வந்த பிறகு இதை செய்யக் கூடாது. கோவிலுக்கு சென்று வந்த பிறகு பூஜை அறையில் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கொடுத்த பணம் திரும்ப பெற பரிகாரம்

இப்படி செய்வதன் மூலம் ஆலயத்திலிருந்து வந்து இறை சக்தி நம்முடன் தங்குவது நம் உடலும் உள்ளமும் தூய்மை அடையும். ஆலயத்திற்கு சென்று வந்த பிறகு நாம் செய்யக் கூடாத தவறுகளை பற்றி தெரிந்து கொள்ள ஆன்மீகம் குறித்த இந்த பதிவு உதவியாக இருக்கும். நீங்களும் இதை பின்பற்றி கோவிலுக்கு சென்று வந்ததற்கான பலனை முழுமையாக அமைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -