கோவிலில் இருந்து கொண்டு வரும் இந்த பொருளை மட்டும் பிறருக்கு தரவே கூடாது. இதனால் உங்களுடன் வீட்டிற்கு வந்த தெய்வம் வெளியேறி விடும்.

kovil
- Advertisement -

நம்மில் பெரும்பாலானருக்கு கோவிலுக்கு செல்லும் போது என்னவெல்லாம் செய்ய வேண்டும் சென்று வந்த பிறகு என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதை பற்றி பல கேள்விகள் இருக்கிறது. சில காரியங்களை நாம் கோவிலுக்கு சென்று வந்தவுடன் செய்வதால், நாம் கோவிலுக்கு சென்ற பலனை இல்லாமல் போய் விடுகிறது. அது என்னவென்று இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கோவிலுக்கு சென்று வந்தவுடன் செய்யக் கூடாதவை:
கோவிலுக்கு சென்று வந்தவுடன் நம்முடைய கை கால்களை சுத்தம் செய்வது, அதேபோல வெளியூரில் இருக்கும் கோவில்களுக்கு சென்று வீட்டிற்கு வந்தவுடன் குளிப்பது போன்றவற்றை எப்போதும் செய்யக் கூடாது. இதனால் நாம் கோவிலில் இருந்து கொண்டு வந்திருக்கும் நல்ல ஆற்றலானது நம்மிடம் தங்காமல் சென்று விடும்.

- Advertisement -

அடுத்தது கோவிலில் இருந்து வாங்கி வரும் விபூதி, மஞ்சள், குங்குமம், மாலை போன்றவற்றை எல்லாம் அப்படியே தரையில் வைக்காமல் பூஜையறையில் ஒரு தட்டில் போட்டு வைக்க வேண்டும். கோவில் இருந்து கொண்டு வரும் மாலை, பூ போன்றவைகளை யார் காலிலும் படாதவாறு வைத்திருந்து காய்ந்த பிறகு பசு மாட்டிற்கு கொடுத்து விடலாம்.

அடுத்து நாம் செய்யும் மிகப் பெரிய தவறு கோவிலில் நமக்கென கொடுக்கும் பிரசாதத்தை நாம் பிறருக்கு கொடுப்பது. கோவில் இருந்து வீட்டிற்கு கொண்டு வரும் விபூதி, குங்குமம் போன்றவற்றை நாம் பிறருக்கு கொடுக்கலாம். ஆனால் எலுமிச்சை பழம், பூ, மாலை போன்றவை கோவிலிலிருந்து அவர்களாக நமக்கு பிரசாதமாக தந்தால், அதை நாம் பிறருக்கு கொடுக்கும் போது நம்மிடம் இருக்கும் தெய்வ ஆற்றல் நீங்கி விடும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

அடுத்து கோவில் இருந்து வீட்டிற்கு வந்தவுடன் அபசகுணமாக பேசுவது பிறரை திட்டி பேசுவது போன்றவை எல்லாம் செய்யவே கூடாது. நம் ஆலயத்தில் சிறிது நேரம் அமரும் நேரத்தில் அந்த இடத்தில் இருக்கும் நல்ல ஆற்றல் நம்மில் தங்கி இருக்கும். நாம் வீட்டிற்கு வந்த பிறகு செய்யும் இது போன்ற காரியங்களால் நமக்கே அந்த வார்த்தைகள் பலித்து துன்பம் ஏற்படும்.

காலையில் கோவிலுக்கு சென்று வந்த பிறகு மாலை வேளையில் முடி சவரம் செய்வது, பெண்கள் அழகு நிலையம் செல்வது போன்றவற்றை செய்யக் கூடாது. கோவிலுக்கு காலையில் சென்று வந்து விட்டால் அன்றைய தினம் குளிப்பதே கூடாது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அதே போல் சிலர் ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்வார்கள் அங்கெல்லாம் சென்று வந்த பிறகு வீட்டிற்கு வந்தவுடன் அன்றைய தினமே துக்க நிகழ்வுகளுக்கு செல்வதோ தீட்டு வீடுகளுக்கு செல்வது போன்றவற்றையும் செய்ய கூடாது.

இதையும் படிக்கலாமே: ஓடி ஓடி தேடியும் கிடைக்காத வேலை தானாக உங்களைத் தேடி வரும். கை நிறைய சம்பள பணத்தை வாங்க, இந்த பொருளை மட்டும் உங்கள் கையால் தானம் கொடுத்து விடுங்கள்.

இவையெல்லாம் கோவிலுக்கு சென்று வந்தவுடன் நாம் செய்யக்கூடாதவைகளாக ஆன்மீகம் சொல்கிறது. நாம் நம்முடைய துன்பத்தை நீக்கிக் கொள்வதற்காகவே இறைவனை நாடி கோவிலுக்கு செல்கிறோம் சென்று வந்த பிறகு நாம் செய்யும் இது போன்ற சில தவறுகளால் துன்பம் தீருவதற்கு பதிலாக மேலும் பெருக்கிக் கொள்கிறோம்.

- Advertisement -