அழகான முடி நீளமாக, அடர்த்தியாக கடகடவென வளர கொய்யா இலையை எப்படி பயன்படுத்தலாம்?

hair18
- Advertisement -

அழகாக அடர்த்தியாக முடி வைத்திருப்பவர்களை பார்த்தால், நமக்கு ஒரு ஏக்கம். கூடவே ஒரு ஆசையும் இருக்கும். இதேபோல நமக்கும் முடி வளர்ந்தால் எவ்வளவு அழகாக இருக்கும். ஆனால், என் முடி என்ன செய்தாலும் வளர மாட்டேங்குது என்பவர்களுக்காக இந்த அழகு குறிப்பு. எளிமையான அழகு குறிப்பு தான். மலிவான அழகு குறிப்பு தான். இந்த குறிப்பை முயற்சி செய்து வாருங்கள். எலிவால் போல இருக்கும் உங்களுடைய முடி குதிரைவால் போல அடர்த்தியாக மாறும். ஆனால் எந்த குறிப்பாக இருந்தாலும் தொடர்ந்து மூன்று மாதம் முயற்சி செய்த பிறகு தான் நல்ல ரிசல்ட் கிடைக்கும். அதையும் நினைவில் வைத்துக் கொண்டு குறிப்பை படிக்க தொடருங்கள்.

அடர்த்தியாக முடி வளர கொய்யா இலை அழகு குறிப்பு:
இதற்கு பத்து கொய்யா இலைகள் தேவை. அதை முன்கூட்டியே எடுத்து கழுவி சுத்தம் செய்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக நமக்கு தேவையான பொருள் வெந்தயம். அடுத்த நாள் இந்த குறிப்பை நீங்கள் செய்யப் போவதாக இருந்தால் முந்தைய நாள் இரவே தண்ணீரில் 2 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை போட்டு ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 24 மணி நேரம் அந்த வெந்தயம் தண்ணீரில் ஊறினால் கூட எந்த தவறும் கிடையாது.

- Advertisement -

ஊற வைத்த வெந்தயம் நமக்கு இப்போது தேவை. சரி, நம்முடைய தலையில் அப்ளை செய்யப்போகும் அந்த சீரமை தயார் செய்ய தொடங்கிவிடலாம். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து ஒரு பெரிய சொம்பு அளவு தண்ணீரை அதில் ஊற்றுங்கள். எடுத்து வைத்திருக்கும் கொய்யா இலைகளை உங்கள் கையால் கிழித்து தண்ணீரில் போடுங்கள். ஊற வைத்திருக்கும் வெந்தயத்தையும், அந்த ஊற வைத்த தண்ணீரோடு கொட்டி,  கொதிக்க விடுங்கள்.

தண்ணீரின் நிறம் முழுசாக மாற வேண்டும். கொய்யா இலையில் உள்ள சத்து அந்த தண்ணீரில் இறங்கட்டும். ஒரு சொம்பு தண்ணீர், அரை சொம்பு தண்ணீர் அளவு சுண்டி வந்ததும். அடுப்பை அணைத்துவிட்டு, இதை வடிகட்டிக் கொள்ளுங்கள். இந்த சீரம் தான் நமக்கு தேவை. இதை பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் கூட ஸ்டோர் செய்யலாம். தினம் தினம் இந்த ஸ்பிரேவை வேர்க்கால்களில் படும்படி அடித்து, மசாஜ் செய்து 20 நிமிடம் ஊற வைக்கவும்.

- Advertisement -

20 நிமிடம் கழித்து தலையை நன்றாக காய வைத்து விடுங்கள். அவ்வளவுதான். தலைக்கு கூட குளிக்க வேண்டாம். அப்படியே பின்னிக் கொள்ளலாம். எண்ணெய் வைத்த முடி, எண்ணெய் வைக்காத முடி, இப்படியாக உங்கள் தலைமுடி எப்படி இருந்தாலும் இந்த ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீரை வேர்க்கால்களில் படும்படி ஸ்ப்ரே செய்து வர தலைமுடி ஊட்டச்சத்தோடு போஷாக்கோடு அடர்த்தியாக வளர தொடங்கும். உங்களுக்கு இந்த அழகு குறிப்பு பிடிச்சிருந்தா ஒருமுறை ட்ரை பண்ணி பார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே: தலைமுடிக்கு வெந்தயம் சேர்த்தால் சளி பிடிக்கிறதா? அப்படின்னா வெந்தய கீரையை இப்படி சேர்த்து பாருங்கள் காடு மாறி உங்க முடி கருகருன்னு அடர்த்தியாக வளருமே!

இந்த குறிப்போடு சேர்த்து கருவேப்பிலையை தினமும் உணவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். பத்து கருவாப்பிள்ளைகளை பொடி செய்து சாப்பிடலாம். பச்சையாகவும் சாப்பிடலாம். மிக்ஸி ஜாரில் போட்டு மோர் ஊற்றி அடித்தும் வடிகட்டி குடிக்கலாம். ஏதாவது ஒரு வகையில் 10 கருவாப்பிள்ளைகள் உணவோடு உள்ளுக்கு செல்ல வேண்டும். நிச்சயம் உங்க முடி போஷாக்கோடு வளர்வதை மூன்றே மாதத்தில் பார்ப்பீங்க.

- Advertisement -