வேண்டுதல் உடனே நிறைவேற, கஷ்டங்கள் உங்களை விட்டு உடனடியாக விலக, கிராம்பு மாலை கட்டும் சரியான முறை இது தான்.

krambu

கிராம்பை வைத்து பல வகையான பரிகாரங்கள், பல முறையில் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. ஒரே ஒரு கிராம்பை பணம் வைக்கும் பெட்டியில் வைத்தால் கூட அந்த வாசத்திற்கு பணம் ஈர்க்கப்படும் என்பது நம்பிக்கை. இது உண்மையும் கூட. இப்படிப்பட்ட பரிகாரங்களை நம்பிக்கையோடு செய்த பல பேர் பலன் அடைந்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த கிராம்பை மாலையாக கட்டி போடும் பட்சத்தில் நம்முடைய வேண்டுதல் உடனடியாக நிறைவேறும். கஷ்டங்கள் உடனடியாக தீரும். நமக்கு இருக்கும் கஷ்டங்கள் உடனடியாக நம்மை விட்டு விலகிச் செல்ல, கிராம்பு மாலையை சரியான முறையில் எப்படி கட்ட வேண்டும், என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

krambu1

இந்த கிராம்பை 11, 21, 51, 101, இப்படியாக ஒற்றைப்படையில் கட்டுவது மிகவும் நல்லது. எத்தனை கிராம்பு என்பதை நீங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம். அது அவரவருடைய இஷ்டம்தான். மஞ்சள் நிற நூலில் தான் கிராம்பு மாலையை கட்ட வேண்டும். ஒவ்வொரு கிராம்பையும் எடுத்து, மஞ்சள் நூலில் சுற்றி கட்டுவதற்குத் தேவையான சுருக்கை போடும் போது, உங்களது வேண்டுதலை வைக்க வேண்டும். சுருக்குப் போட்டு கையை இழுத்து, இருக்கும்போது உங்களுடைய வேண்டுதலை ஒருமுறை மனதாரவும் உச்சரிகலாம். வாய்விட்டும் சொல்லலாம்.

இப்படியாக உங்களது கஷ்டங்களையும், வேண்டுதலையும் சொல்லி அந்த மாலையை எடுத்து பூஜை அறையில் வைத்து மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அந்த கிராம்பை கட்டும்போது சந்தோஷமான வேண்டுதல் வைத்து கட்டி இருந்தால், அதாவது திருமணம் நடக்க வேண்டும், பணவரவு வேண்டும், நல்ல தொழில் அமைய வேண்டும், என்றால் அந்த மாலையை அம்மன் சன்னதிக்கு கொண்டு கொண்டுபோய் போடலாம். கோவிலில் கொண்டு போட முடியாதவர்கள், உங்கள் வீட்டில் இருக்கும் அம்மனின் திருவுருவ படத்திற்கு போடலாம்.

kamatchi-amman

உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் கரைந்து போக வேண்டும். கடன் தொல்லை தீர வேண்டும். உடல் இருக்கும் நோய் தீர வேண்டும். எதிரிகள் தொல்லை நீங்க வேண்டும். இப்படி ஏதாவது கெடுதலான பலன் உங்களை விட்டு விலக வேண்டும் என்றால், அந்த மாலையை கொண்டு போய் ஏதாவது கரையான் புற்றில் போட்டுவிடவேண்டும். உங்கள் கஷ்டம் கரைந்து போய்விடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

இறுதியாக நீங்கள் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால், முடிச்சு போடும்போது வைக்கக்கூடிய வேண்டுதலை சரியாக வையுங்கள். உங்களுடைய மனதில் எந்த ஒரு தடு மாற்றமும் இருக்கக்கூடாது. ஏதாவது ஒரு வேண்டுதலை உறுதியோடு எடுத்து பிரார்த்தனை செய்துகொண்டு, மாலையை சரியான முறையில் போட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

putru

நீங்கள் சொல்வதை அந்த கிராம்பு கிரகித்துக்கொள்ளும். கிராமில் இருக்கக்கூடிய பிசுபிசுப்பு தன்மைக்கு ஈர்க்கக் கூடிய சக்தி அதிகமுண்டு. மன உறுதியோடும் மன ஒருமைப்பாட்டோடும் செய்யும்பட்சத்தில் உங்களுடைய வேண்டுதல் நிச்சயமாக நிறைவேற, இந்த கிராம்பு உங்களுக்கு துணை நிற்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
இந்தப் பொருட்களை உங்களுடைய வீட்டில், இப்படி வைத்தால் சுபிட்சம் பொங்கி வழியும். லட்சுமி கடாட்சம் போதும் போதும் என்ற அளவிற்கு நிறைவாக கிடைக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.