கரப்பான் பூச்சி தொல்லையிலிருந்து விடுபட வீட்டு குறிப்பு.

cockroach
- Advertisement -

சமையலறை என்றால், மளிகை பொருட்களும் சமையலுக்கு தேவையான மற்ற பொருட்களும் இருக்குதோ இல்லையோ, இந்த கரப்பான் பூச்சி, எறும்பு, பல்லி, ஈ கண்டிப்பா இருக்குது. இந்த பிரச்சனையிலிருந்து வெளிவருவதற்கு பெண்கள் எத்தனையோ செயற்கையான முறைகளை கையாளுவார்கள்.

ஆனால் கரப்பான் பூச்சி ஒரு வாரம் கழித்து மீண்டும் மீண்டும் வந்து கொண்டே தான் இருக்கும். அதுமட்டுமல்லாமல் செயற்கையான பூச்சிக்கொல்லி மருந்துகளை சமையலறையில் நேரடியாக பயன்படுத்துவதில் நமக்கு கொஞ்சம் பயம் இருக்கும். இதில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றால் முதலில் நாம் என்ன செய்வது. கரப்பான் பூச்சி தொல்லைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க எளிமையான வீட்டு குறிப்பு இதோ இந்த பதிவில் உங்களுக்காக.

- Advertisement -

முதலில் கரப்பான் பூச்சி எறும்பு தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால், சமையல் அறையை சுத்தமாக வச்சுக்கணும். சிங்க்கை சுத்தமாக வச்சுக்கணும். இதுதான் முதல் வீட்டு குறிப்பு. இதை பின்பற்றினால் நம்முடைய சமையலறையில் கரப்பான் பூச்சிகள் வராது. அதுவும் இரவு தூங்க செல்வதற்கு முன்பு சிங்கிள் சமையல் குப்பைகளை எல்லாம் சுத்தம் செய்துவிட்டு செல்ல வேண்டும்.

அந்த சிங்க் தண்ணீர் போகும் ஓட்டையிலிருந்து தான் பெரும்பாலும் கரப்பான் பூச்சி வரும். அதன் மேலே ஒரு பிளாஸ்டிக் தட்டு போட்டு மூடிடுங்க. சிக்கில் இருந்து தண்ணீர் வெளியேறக்கூடிய அந்த பிளாஸ்டிக் பைப் போகும் இடத்தில் ஏதாவது துவாரம் இருந்தால் அதை அடைத்து வையுங்கள். சிங்குக்கு அடியில் இதை செக் பண்ணி பாக்கணும்.

- Advertisement -

கரப்பான் பூச்சியை விரட்டி அடிக்கும் பேஸ்ட் தயார் செய்யும் முறை

அடுத்து நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே கரப்பான் பூச்சிகளை துரத்தி அடிக்க ஒரு பேஸ்ட் தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருள் இரண்டு. பல் தேய்க்கும் பேஸ்ட், பூஜைக்கு பயன்படுத்தும் கற்பூரம், சூடம். மெழுகு கற்பூரத்தை தவிர்த்து விட்டு கட்டியாக இருக்கும் அந்த கற்பூரத்தை வாங்கிக்கோங்க. அதில் வரும் வாசம் இன்னும் கூடுதலாக கிடைக்கும்.

1/2 ஸ்பூன் பேஸ்ட், 2 சின்ன துண்டு கட்டி கற்பூரத்தை நசுக்கி தூள் செய்து கலந்தால் பேஸ்ட் போல நமக்கு ஒரு கலவை கிடைக்கும். சமையலறை அலமாரி, சமையலறை மேடை திண்ணைக்கு அடியில் சிங்குக்கு அடியில் எல்லாம் இந்த பேஸ்ட்டை விரலாலேயே ஆங்காங்கே தடவி விட்டு விடுங்கள். சின்ன சின்ன புள்ளிகள் போல் தடவினால் போதும். இந்த வாசத்துக்கு கரப்பான் பூச்சி வராது என்று சொல்லப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: மழைக்காலத்திற்கு ஏற்ற அருமையான டிப்ஸ்

முயற்சி செய்து பாருங்கள். உங்களுடைய சமையல் அறையில் இந்த குறிப்பு வொர்க் அவுட் ஆச்சுன்னா இதை நீங்கள் தொடர்ந்து பின்பற்றலாம். இரண்டு வாரத்துக்கு ஒரு முறை பழைய பேஸ்டை துடைத்து எடுத்து விட்டு புது கலவை கலந்து, பேஸ்டா வச்சா கரப்பான் பூச்சி பிரச்சனையிலிருந்து நிரந்தர விமோசனம் கிடைக்கும். தேவைப்படுபவர்கள் முயற்சி செய்து பார்த்து பலன் பெறுங்கள்.

- Advertisement -