கிருத்திகை, அஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி ஒரே நாளில் வருவதால் என்ன பலன் தெரியுமா ?

Murugan and Krishnar
- Advertisement -

“என்னையே எப்போதும் நினைப்பவர்கள் இறுதியில் என்னையே அடைகின்றனர்” என்று குருச்சேத்திர யுத்தத்தின் போது அர்ஜுனனுக்கும், இந்த உலகத்திற்கும் தந்த கீதோபதேசத்தில் “ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா” கூறுகிறார். அந்த கிருஷ்ண பகவான் அவதரித்த தினம் “கோகுலாஷ்டமியாக” இந்துக்கள் அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

Krishnar

மகாவிஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமான கிருஷ்ணர் “ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில், தேய்பிறை அஷ்டமியில்” அவதரித்தார். இத்தினம் கோகுலாஷ்டமி மற்றும் கிருஷ்ண ஜெயந்தி என கொண்டாடப்படுகிறது. இந்த கோகுலாஷ்டமி தினம் சில சமயங்களில் ரோகிணி நட்சத்திர தினத்தன்று வராமல் அதற்கு முந்தைய தினமான கிருத்திகை நட்சத்திர தினத்தன்று வருகிறது.

- Advertisement -

“கிருத்திகை” என்பது “முருகப்பெருமான்” அவதரித்த நட்சத்திரமாகும். கிருஷ்ணருக்கும் முருகருக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதை காணலாம். இருவரும் அதர்ம வழியில் நடந்தவர்களை அழிப்பதற்காகவே அவதரித்தனர். இருவரும் மாற்றான் தாயாலேயே வளர்க்கப்பட்டனர். இருவரும் அவர்களின் பெற்றோர்களுக்கு இரண்டாவது மகனாக இருந்தனர். சிவனுக்கு பிரணவ மந்திரத்தின் ரகசியத்தை கூறி “சிவகுருநாதன்” என பெயர் பெற்றான் முருகன். மனிதர்களின் இறைதேடல் மற்றும் அனைத்திற்குமான விடையில் தனது கீதோபதேசத்தில் கூறி “கீதாச்சாரியன்” “ஜகத்குரு” என பெயர் பெற்றான் கண்ணன். இறுதியில் பார்க்கும் போது முருகனின் தாயான சக்திக்கு மகாவிஷ்ணு சகோதரன் முறையாவதால் முருகனுக்கு கிருஷ்ணர் தாய்மாமன் என்றே கருத வேண்டியிருக்கிறது. ஆக கிருத்திகை அன்று வரும் கோகுலாஷ்டமி தினம் மாமனாகிய கண்ணனுக்கும் மருமகனாகிய முருகனுக்கும் உரிய சிறப்பான நாளாக வருகிறது.

Lord Murugan

அதேபோன்று பைரவ மூர்த்தி என்பவர் சிவபெருமானின் அம்சமாக கருதப்படுகிறார். மொத்தம் 64 வகையான பைரவர்கள் சிவபெருமானிடமிருந்து தோன்றினாலும் எட்டு வகையான பைரவர்கள் அனைவராலும் வழிபடப்படுகின்றனர். பைரவ மூர்த்தியின் வழிபாட்டிற்குரிய தினங்களான மாதந்தோறும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி தினங்கள் பெருமாளின் பத்தினியான மகாலட்சுமி தாயார் வழிபாட்டிற்குரிய தினங்களாகவும் இருக்கிறது. எனவே மகாலட்சுமியின் பதியான பெருமாளின் அவதாரமான கிருஷ்ண பகவானுக்குரிய கோகுலஷ்டமி எனப்படும் ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபடுவதால் கிருஷ்ண பரமாத்மா மற்றும் லட்சுமி தேவியின் அருளும் பைரவரை வணங்குபவர்களுக்கு கிடைக்கிறது.

- Advertisement -

kalabairavar

கிருஷ்ண பகவானின் அவதாரத்தைக் கொண்டாடும் கோகுல அஷ்டமி தினத்தன்று முருகப்பெருமானுக்குரிய கிருத்திகை நட்சத்திரமும், காக்கும் கடவுளான பைரவ மூர்த்திக்குரிய தேய்பிறை அஷ்டமி தினமும் வருவது ஒரு அபூர்வ நிகழ்வாக கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பான தினத்தில் மேற்கூறிய மூன்று தெய்வங்களையும் வழிபடுபவர்களுக்கு அனைத்துவகையான நன்மைகள் உண்டாகும். பொதுவாக இத்தகைய சிறப்பான தினத்தில் உணவு ஏதும் உட்கொள்ளாமல் விரதம் அனுஷ்டித்து கிருஷ்ணபகவான், பைரவர், முருகப்பெருமான் ஆகியோரை வழிபாடு செய்வதே சிறப்பு. அப்படி உண்ணாநோன்பு இருக்க முடியாதவர்கள் வெறும் பால், பழம் மட்டும் அருந்தி விரதம் மேற்கொள்வது விரும்பிய பலன்களை கொடுக்கவல்லதாக இருக்கிறது.

மாதந்தோறும் வரும் கிருத்திகை, அஷ்டமி நட்சத்திர தினங்களை காட்டிலும் இந்த நாள் மிகவும் சிறப்புவாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்றைய தினத்தில் நாம் கண்ணனையும், முருகனையும், பைரவரையும் வழிபடுபவர்களுக்கு எண்ணங்கள் ஈடேறும். விரும்பிய காரியங்கள் கைகூடும். முயற்சிகள் அனைத்தும் சிறப்பான வெற்றியை பெறும். குடும்பத்தில் இருக்கின்ற பொருளாதார சிக்கல்கள், வறுமை நிலை நீங்கி வளமை பெருகும். அழுகு, அறிவு, திறமை, குழந்தை பேரு, செல்வம், செல்வாக்கு, தலைமை பண்பு இப்படி அனைத்தையும் பெற இன்று நாம் மூன்று தெய்வங்களையும் வணங்குவது அவசியமாகிறது.

இதையும் படிக்கலாமே:
குரு பகவானால் நன்மை அடைய பரிகாரம்

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் மற்றும் மந்திரங்களை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -