ஒருவரை கோடீஸ்வரனாக மாற்றும் குபேர முத்திரை பற்றி தெரியுமா ?

Kubera muthirai

பஞ்சபூதங்களான நீர், நிலம், காற்றும், ஆகாயம், நெருப்பு ஆகிய ஐந்தையும் ஒருங்கிணைத்து நாம் நினைத்ததை சாதிக்க உதவும் ஒரு முத்திரையை குபேர முத்திரை. எவர் ஒருவர் குபேர முத்திரையில் தியானம் இருக்கிறாரோ அவரின் வாழ்வு செழிப்பாக இருக்கும். துன்பங்கள் பறந்தோடும், கோடீஸ்வர யோகம் உண்டாகும். பஞ்ச பூதங்களின் அருள் கிடைக்கும். அதனாலேயே இந்த முத்திரை குபேர முத்திரை என்ற பெயர் பெற்றது.

Kubera muthirai

மேலே உள்ள படத்தில் நாம் குபேர முத்திரையை பார்க்கலாம். நமது விரலை கொண்டு இந்த முத்திரையில் எப்படி இருப்பது என்று பார்ப்போம் வாருங்கள். பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லக்கூடிய அதிகாலை வேலையில் எழுந்து குளித்துவிட்டு, வீட்டில் விளக்கேற்றி பூஜை அறையில் சப்பணமிட்டு நிமிர்ந்த நிலையில் அமர்ந்துகொண்டு கண்களை மென்மையாக மூடு வேண்டும். பிறகு கட்டை விரைந்த நுனிப்பதுதியில் ஆள் காட்டி விரல் மற்றும் நடுவிரலில் நுனியை சேர்க்க வேண்டும்.

அதன் பிறகு மோதிர விரல் மற்றும் சுண்டு விரலின் நுனியை மடக்கி உள்ளகையில் அழுத்த வேண்டும். இந்த நிலையில் நமது உள்ளங்கையானது கீழ்நோக்கி இல்லாமல் மேல் நோக்கி இருக்க வேண்டும். இதையே நாம் குபேர முத்திரை என்கிறோம். ஆரம்ப நாட்களில் இந்த முத்திரையை செய்ய சிறிது சிரமமாக இருந்தாலும் இரண்டு மூன்று நாட்களில் இது சுலபமாகி விடும்.

Thiyanam

இந்த முத்திரையை நாம் செய்ய துவங்கும் முன்பு நமக்கு எது வேண்டும் என்பதை தீர்மானித்து அதை இறைவனிடம் வேண்டிய வாறு மனதை ஒருமுகப்படுத்தி இந்த முத்திரையில் இருக்க வேண்டும். நம்மால் தொடர்ந்து எவ்வளவு நேரம் இந்த முத்திரையில் இருக்க முடியுமோ அவ்வளவு நேரம் இருக்கலாம். நீண்ட நேரம் இருந்தால் நல்ல பலன் உண்டு.

இந்த முத்திரையில் இருக்கும் சமயத்தில் மனதை ஒருமுகப்படுத்துவது அவசியமாகிறது. ஆனாலும் மனதை ஒருமுகப்படுத்த முடியவில்லை என்றால் கவலை வேண்டாம். தொடர்ந்து ஓர் இரு வாரங்கள் முராய்ச்சித்தால் மனமானது தன்னால் கட்டுக்குள் வரும். செல்வத்தை வேண்டி இந்த முத்திரையில் இருந்தால், செல்வம் கிடைப்பதற்கான அனைத்து வழிகளும் பிறக்கும்.

Thiyanam

இந்த முத்திரையில் ஒருவர் இருக்கும் சமயத்தில் அவர் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் முழுமையாக அழிக்கப்படும் ஆகையால் நேர்மறை திறன் பெருகி அது ஆற்றலாக அவருள் வெளிப்பட துவங்கும். இதனால் எதிரிகள் கூடு நமக்கு வயப்படுவர். இதை தொடர்ந்து முயற்சித்தால் நமது உடலில் உள்ள விசுத்தி மற்றும் ஆக்ஞா சக்கரங்கள் இயங்கத் தொடங்கும். அதன் மூலம் நமது மூளைக்கு ஒரு வித ஆற்றல் கிடைக்கும். அதோடு நமது ஆழ் மனதில் ஒரு வித அமைதி நிலைகொள்ளும். இதனால் நமது உணர்வுகளை நம்மால் எளிதில் கட்டுப்படுத்த முடியும்.

Thiyanam

தினமும் அரைமணி நேரம் என தொடர்ந்து ஒரு மண்டல காலம் இந்த முத்திரையில் இருந்தால் நமது உடலில் உள்ள பல பிரச்சனைகள் விலகும். கண் சம்மந்தமான நோய்கள், மூளை மற்றும் தலை சம்மந்தமான நோய்கள் அகலும். மன அழுத்தத்தில் அல்லது மன நோயில் உள்ளவர்களுக்கு இந்த ஆசனம் ஒரு நல்ல தீர்வாகும்.

Thiyanam

சிலருக்கு மூட்டுவலி காரணமாக சம்மணமிட்டு அமர இயலாது. அது போன்ற சமயங்களில் நாற்காலியில் அமர்ந்தவாறு கூட இதை செய்யலாம். ஆனால் அப்படி செய்கையில் தியான நிலைக்கு செல்வது அவசியம். இல்லையேல் பலன் கிடைக்காது. நீண்ட நாட்களுக்கு முன்பு ஒரு பொருளை தொலைத்திருந்தால் இந்த முத்திரை மூலம் நாம் அதை கண்டு பிடிக்க முடியும். முன்பு கூறியது போல இதனால் நமது மூளையின் ஆற்றல் பெருகும். ஆகையால் நம்முடைய பழைய நினைவுகள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு நாம் பொருளை எங்கு எப்படி எதனால் துளைத்தோம் என்ற ஒரு தெளிவான புரிதல் வரும். நமது பொருளை யார் எடுத்திருப்பார்கள் என்பதை நம்மால் மிக சரியாக யூகிக்க முடியும்.

இதையும் படிக்கலாமே
உங்கள் ராசிக்கான தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2018

செல்வம் சேர்ப்பதற்கு மட்டும் இல்லமால், நாம் எதை நினைத்தாலும் அதை அடைவதற்கு வழி செய்கிறது இந்த ஆசனம். ஆகையால் அனைவரும் இதை தொடர்ந்து முயற்சித்து பயன் பெறலாம்.