உங்கள் வீட்டு பீரோவில் எப்போதும் செல்வம் வற்றாமல் இருந்துகொண்டே இருக்க வேண்டுமா? குபேரன் அருளால் செல்வ சேர்க்கை பெற இந்த வாஸ்து குறிப்புகளை எல்லாம் சரியாக பின்பற்றி வந்தாலே போதும்.

- Advertisement -

தற்காலத்தில் பலருக்கும் வீடு கட்ட சுலபத்தில் கடன் கிடைப்பதால், கடைசி காலம் வரை வாடகை வீட்டில் வசிப்பதை காட்டிலும் சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என விரும்பி தங்களுக்கு என புதிதாக வீடு கட்டிக் கொள்கின்றனர். அப்படி புதிதாக வீடு கட்டிச் செல்லும் பலரும், அந்த புது வீட்டில் தங்களுக்கும், தங்களுக்கு பின்னால் வருகின்ற சந்ததியினருக்கும் நல்ல செல்வ வளம் மிக்க வாழ்வு கிடைக்க மேற்கொள்ள வேண்டிய வாஸ்து குறிப்புகள் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

வடக்கு திசை என்பது செல்வத்தின் அதிபதியான குபேரனுக்குரிய திசையாகும். வாஸ்து சாஸ்திரத்தின் படி ஒரு மனையின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளை குபேர பகவான் ஆள்கிறார். எனவே இந்த வடக்கு மற்றும் வட கிழக்கு பகுதிகளில் வீட்டின் கழிவறை, குளியலறை போன்றவற்றை அமைக்க கூடாது. வீட்டில் இருப்பவர்கள் தாங்கள் தினமும் பயன்படுத்துகின்ற காலணிகளை இந்தப் பகுதியில் வைக்கக் கூடாது. தெய்வீகப் பொருட்கள் விற்கின்ற கடைகளில் குபேர எந்திரம் ஒன்றை வாங்கி ஒரு சுபமுகூர்த்த நாளில் உங்கள் வீட்டின் வடகிழக்கு பகுதியில் மாட்டி வைக்க வேண்டும். இதனால் நீங்கள் வசிக்கின்ற வீட்டில் வளமை பெருகும்.

- Advertisement -

இன்றைய காலத்தில் பெரும்பாலானவர்களின் வீடுகளில் ஓவர் ஹெட் டேங்க் எனப்படும் தண்ணீர் தொட்டியை வீட்டின் மொட்டை மாடியில் அமைத்திருக்கின்றனர். அப்படி மொட்டை மாடியின் மீது தண்ணீர் தொட்டியை அமைக்கும் நபர்கள் அதை வீட்டின் தென்மேற்கு பகுதியில் இருக்குமாறு அமைப்பதால் பொருளாதார நிலை சிறப்பானதாக இருக்கும்.

தண்ணீருக்கும், செல்வத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என வாஸ்து சாஸ்திரம் கூறுகின்றது. எனவே உங்களுக்கு வீண் விரயங்கள் ஏற்படாமல் இருக்கவும், தேவையற்ற செலவுகள் செய்யும் நிலை ஏற்படாமல் தவிர்க்கவும், வீட்டின் சமையலறை, குளியலறை போன்ற அறைகளில் உள்ள குழாய்களில் ஏற்படுகின்ற நீர்கசிவுகளை உடனுக்குடன் சரி செய்து, நீர் சொட்டு சொட்டாக சிந்தி வீணாவதை தடுக்க வேண்டும்.

- Advertisement -

தங்களுக்கு நல்ல செல்வ சேர்க்கை வேண்டும் என நினைப்பவர்கள், தாங்கள் வசிக்கின்ற வீட்டில் இருக்கின்ற வடக்கு பகுதியை வாஸ்து தோஷ குறைபாடுகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக வடக்கு பகுதியில் அழுக்குத் துணிகளை துவைக்கின்ற வாஷிங் மெஷின், குப்பை தொட்டிகள் போன்றவற்றை வைக்கக்கூடாது.

வீட்டின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்க சமையலறையை வீட்டின் தென்கிழக்கு பாகத்தில் அமைக்க வேண்டும். மேலும் அந்த சமையல் அறைக்கு ஆரஞ்சு அல்லது இளஞ்சிவப்பு போன்ற நிறங்களை சுவர்வண்ணமாக தீட்ட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வாஸ்து படி வீட்டில் அதிக பணம் சேர எந்தெந்த பொருட்கள் இருக்கணும்னு தெரியுமா? இதெல்லாம் உங்க வீட்டில் இருக்கா?

உங்களுக்கு மேலும், மேலும் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்க, உங்கள் வீட்டில் பணம் வைக்கும் அலமாரியை தென்கிழக்கு பகுதியில் மட்டுமே வைக்க வேண்டும். ஏனெனில் தென்கிழக்குப் பகுதியில் அலமாரியை வைப்பதால், அலமாரியின் கதவுகள் கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கியவாறு திறக்கும் வகையில் அமையும். இப்படி இருப்பதால் அந்த அலமாரியில் செல்வ சேர்க்கை அதிகரிக்க உதவும். இதற்கு மாறாக மேற்கு அல்லது தெற்கு திசையை நோக்கியவாறு அலமாரிகள் கதவுகள் திறக்கும் நிலையில் இருந்தால், செல்வ சேமிப்பு மிக சீக்கிரத்தில் கரைந்து விடும்.

- Advertisement -