குபேரனுக்கு இந்த கனியை காணிக்கையாக கொடுத்தால் வீட்டில் அள்ள அள்ள குறையாத செல்வம் பெருகுமா?

kuberan-nellikkani
- Advertisement -

நவ நிதிகளுக்கும் அதிபதியாக இருக்கும் இந்த குபேரன் இருக்கும் இல்லங்களில் செல்வத்திற்கு பஞ்சம் இருக்காது என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. வறுமை இல்லாத வாழ்வு நிலைக்கு பேரன் அருள் நிச்சயம் நமக்கு தேவை. குபேரன் கோவிலுக்கு வியாழன் கிழமையில் சென்று வர நல்லதொரு மாற்றம் உங்களுக்கு நீங்களும். அவ்வகையில் குபேரனுக்கு காணிக்கையாக செலுத்த வேண்டிய கனி என்ன? அதனால் உண்டாகும் பலன்கள் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

நவ நிதிகளுக்கும் அதிபதியாக விளங்கும் குபேரன் மகாலட்சுமியுடன் இணைந்து பணி புரிவதால் லக்ஷ்மி குபேரன் என்றும் அழைக்கப்படுகிறார். ஒருவர் செய்த நன்மை, தீமைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும்? எவ்வளவு கொடுக்க கூடாது! என்பது கணக்குப் போட்டு வைத்திருப்பார்கள். அதற்கு ஏற்ப உங்களுக்கு வருமானமும், செல்வமும் பெருகும்.

- Advertisement -

செல்வத்தின் அதிபதி குபேரன் நாடு நகரங்கள் எல்லாம் இழந்த பொழுது நெல்லிக்கனியை நட்டு வளர்த்து வந்தார். சிவனுடைய வாக்கிற்கு இணங்க அவர் வளர்த்த நெல்லிக்கனியை அவர் மீண்டும் இழந்த எல்லாவற்றையும் திரும்பப் பெற்றார் என்கிறது புராணங்கள். நெல்லிக்கனியில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. எனவே குபேரன் படத்தை வைத்து வீட்டில் பூஜித்தாலும், குபேரன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தாலும் நெல்லிக்கனியை எடுத்து செல்லுங்கள்.

காஞ்சிபுரத்தில் இருக்கும் பிரசித்தி பெற்ற ராஜ குபேரர் கோவிலில் நெல்லிக்கனியை பிரசாதமாக வழங்குவார்கள். நமக்கு இருக்கும் பிரச்சனைகளை வேண்டிக் கொண்டு நெல்லிக்கனியை காணிக்கையாக செலுத்தினால் வேண்டிய வேண்டுதல் அப்படியே பலிக்கும் என்கிற நம்பிக்கையும் உண்டு. எனவே வியாழன் கிழமை அன்று குபேரன் கோவிலுக்கு சென்று நெல்லிக்கனியை காணிக்கை செலுத்துவதன் மூலம் உங்களுடைய செல்வமானது மென்மேலும் பெருகும்.

- Advertisement -

குபேரனுக்கு உகந்த வியாழன் கிழமையில் குபேரன் படத்தை வீட்டில் வைத்து, குபேர விளக்கு ஏற்றி பூஜைகள் செய்யலாம். அது மட்டுமல்லாமல் நீங்கள் தினமும் செலவு செய்யும் பணத்தை ஒரு நோட்டுப் புத்தகத்தில் கணக்கு வழக்கு எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அந்த நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு போய் பூஜை அறையில் இருக்கும் குபேரன் சிலைக்கு முன்பு வைத்து குபேரனுக்குரிய ஸ்தோத்திரங்களை உச்சரிப்பு, நாணய அர்ச்சனை செய்யலாம்.

ஐம்பத்தி ஒன்று, நூற்றியெட்டு என்கிற எண்ணிக்கையில் ஐந்து ரூபாய் நாணயங்களை சேகரித்து தனியாக ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். வியாழன் கிழமையில் குபேர விளக்கு ஏற்றி, அந்த நாணயங்களை கொண்டு அர்ச்சித்து குபேர நாமாவளிகளை உச்சரித்து வந்தால் சகல, சௌபாக்கியங்களும் வந்து சேரும் என்பது நம்பிக்கை.

மேலும் குபேரனுக்கு உகந்த நெல்லிக்கனியை வைத்து நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்து வந்தால் செய்யும் செயலில் தடைகள் அகன்று வருமானம் பெருகும். தினசரி பூஜையில் குபேரன் இடம் பெற்றால் உங்களுடைய வாழ்வும் குபேர வாழ்க்கையாக அமையும். மேலும் எல்லா செல்வங்களையும் அருளும் மஹா லட்சுமி மற்றும் குபேரன் ஆகியோரின் திரு உருவம் பதித்த டாலர்கள் அல்லது மோதிரங்கள் செய்து போட்டுக் கொண்டாலும் கையிலும் பணம் வீண் விரயம் ஆகாமல் நிலையாகத் தங்கும். பணம் வைக்கும் பீரோவில் இத்தகைய படங்களை ஒட்டி வைக்கலாம். இவ்வளவு வரங்களை அருளும் குபேரனுக்கு இப்படியும் பூஜித்து அவர் தரும் பலன்களை அனுபவிக்கலாமே!

- Advertisement -