குடும்ப கஷ்டம் நீங்க வழிபாடு

perumal valipadu
- Advertisement -

கஷ்ட நஷ்டங்கள் நிறைந்ததே வாழ்க்கை என்று பலரும் கூறுவார்கள். கஷ்டம் மட்டுமே வாழ்க்கையாக இருந்தால் அதில் எந்த அர்த்தமும் இல்லாமல் சென்று விடும். அதிலும் குறிப்பாக ஒரு குடும்பத்தில் கஷ்டம் மட்டுமே சூழ்ந்திருக்கிறது என்றால் அவர்களால் நிம்மதியாக வாழவே முடியாது. இதற்கு வாழவே தேவையில்லை என்ற எதிர்மறையான எண்ணங்களும் தோற்ற ஆரம்பித்து விடும். அப்படிப்பட்ட இக்கட்டான குடும்ப கஷ்டம் நீங்குவதற்கு பெருமாளை எந்த முறையில் வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

ஒரு குடும்பத்தில் கஷ்டம் ஏற்படுகிறது என்றால் அந்த குடும்பத்தில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களே முக்கியமான காரணமாக திகழ்கிறது. எதிர்மறை ஆற்றல்கள் என்று நாம் கூறும்பொழுது அது பிறரால் ஏற்படக்கூடியது மட்டுமல்லாமல் நம்முடைய செயலாலும் நம்முடைய பழக்கவழக்கங்களினாலும் எதிர்மறை ஆற்றல்கள் உண்டாகும் என்பதுதான் உண்மை. எப்பொழுதும் பிறரை குறை கூறுவதற்கு முன்பாக நம்மிடம் இருக்கக்கூடிய தவறை நாம் உணர்ந்தால் தான் அதிலிருந்து நம்மால் வெளியில் வர முடியும்.

- Advertisement -

எதுவாக இருந்தாலும் பரவாயில்லை குடும்ப கஷ்டம் தாள முடியவில்லை எப்படியாவது அதிலிருந்து வெளியில் வர வேண்டும் என்று நினைப்பவர்கள் பெருமாளின் பாதத்தில் சரணாகதி அடைய வேண்டும். முதலில் தினமும் பிரம்ம முகூர்த்த வேலையில் எழுந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். ஆறு மணிக்கு எழுந்தால் கூட முதலில் எழுந்தவுடன் தெய்வீக பாடல்களை நம் வீட்டில் ஒலிக்கச் செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக விஷ்ணு சஹஸ்ர நாமத்தை அனுதினமும் காலையில் ஒலிக்கச் செய்வதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது.

அதோடு மட்டுமல்லாமல் வெள்ளிக்கிழமை தோறும் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு செல்ல வேண்டும். அங்கு இருக்கும் பெருமாளுக்கு தாமரை பூவை வாங்கி கொடுக்க வேண்டும். தாமரைப்பூ என்பது மகாலட்சுமியின் அம்சம். மகாலட்சுமியை வெள்ளிக்கிழமை அன்று பெருமாளுக்கு நாம் வழங்குவதன் மூலம் பெருமாள் மனம் மகிழ்ந்து நமக்கு வேண்டியவற்றை அருள் புரிவார் என்பது ஒரு ஐதீகம். இதோடு மட்டுமல்லாமல் துளசி மாலையையும் வாங்கி கொடுக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக பெருமாளுக்கு இரண்டு நெய் தீபங்களை ஏற்றி 11 முறை அவரை வலம் வர வேண்டும். பிறகு பெருமாளின் திருவடிகளில் சரணாகதி அடைந்து அவரிடம் மனதார நம்முடைய குறைகள் என்ன நம்முடைய கஷ்டங்கள் என்ன என்பதை கூறி வழிபட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 11 வாரங்கள் பெருமாள் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை தோறும் செல்ல வேண்டும்.

11ஆவது வாரம் சக்கரை பொங்கல், வெண்பொங்கல் அல்லது தயிர் சாதம் இவற்றில் ஏதாவது ஒன்றை பிரசாதமாக வீட்டிலேயே செய்து எடுத்துக் கொண்டு போய் பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்ய வேண்டும். நெய்வேத்தியம் செய்த அந்த பிரசாதத்தை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவதன் மூலம் நம் வாழ்விலும் நம் குடும்பத்திலும் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் பெருமானின் அருளோடு படிப்படியாக விலகும் என்பது நிதர்சனமான உண்மை.

இதையும் படிக்கலாமே: பரீட்சையில் வெற்றி பெற பரிகாரம்

யார் ஒருவர் பெருமாளை தொடர்ந்து வழிபடுகிறார்களோ அவர்களுக்கு திருமகளின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும் என்பதால் மகாலட்சுமியின் அருள் பெற்று வீட்டில் செல்வ செழிப்பு மேலோங்கும்.

- Advertisement -