மறந்தும் கூட கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு வராது. இந்த மரக்குச்சி உங்க வீட்டில் இருந்தால். குடும்பம் பிரியாமல் இருக்க இதை செய்யுங்கள்.

fight
- Advertisement -

குடும்பம் என்றால் கணவன், மனைவி, குழந்தைகள், மாமனார், மாமியார் என்ற ஒற்றுமை இருக்க வேண்டும். சில வீடுகளில் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இல்லாத காரணத்தினால் குடும்பமே பிரிந்து சிதைந்து விடுகிறது. இப்படிப்பட்ட சிதைந்த குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும் ஒரு துளி கூட இருக்காது. முன்கோபத்தில் நாம் செய்யக்கூடிய காரியத்தை பின்னால் யோசித்துப் பார்த்தால் நமக்கே அசிங்கமாக இருக்கும். நாம இப்படி நடந்து கொண்டது என்று. அந்த ஒரு நிமிட கோபம் நம்மை வாழ்க்கையை இருட்டில் தள்ளி இருக்கும். ஆகவே முன்கோபத்தில் முடிவு எடுக்காதீங்க.

கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு வராமல் இருக்காது. வரத்தான் செய்யும். ஆனால் எல்லாவற்றையும் தாண்டி நம் குடும்பத்திற்காக நாம் விட்டுக் கொடுத்து செல்வதில் எந்த தவறும் கிடையாது. கணவன் மனைவிக்குள் வரக்கூடிய சண்டை சச்சரவுகளை குறைக்க கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ இரண்டு குறிப்புகளை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

முதல் குறிப்பாக இந்த விஷயத்தை முடிந்தால் கடைப்பிடித்து பாருங்கள். எந்த ஒரு நல்ல காரியமாக இருந்தாலும், வீட்டில் கணவனும் மனைவியும் சேர்ந்து செய்யுங்கள். கோவிலுக்கு செல்வது, வீட்டில் பூஜை புனஸ்காரங்கள் செய்வது, தான தர்ம காரியங்கள் செய்வது, என்று தம்பதியாக நீங்கள் எல்லா விஷயத்தையும் செய்தாலே உங்களுக்குள் கருத்து வேறுபாடு வராது. உங்களுக்குள் குழப்பம் வராது. தனியாக எங்கேயும் போய் நிக்காதீங்க. ஒரு திருமணம், காதுகுத்து நல்ல விஷயம் என்றால் கணவன் மனைவியை கூப்பிட்டுக்கோங்க. மனைவி கணவனை கூப்பிட்டுக்கோங்க. இது ஒரு சுலபமான வழி தானே எல்லோரும் முயற்சி செய்து பார்க்கலாம்.

அடுத்தபடியாக ஒரு பரிகாரம். இறை நம்பிக்கையோடு செய்ய வேண்டிய பரிகாரம். தினமும் கணவன் மனைவி இரண்டு பேரும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். ‘ஓம் ஐக்கிய தேவியை நமஹ’ இந்த மந்திரத்தை உச்சரித்தால் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். இதோடு சேர்த்து இரண்டு குச்சிகளைக் கொண்டு வந்து ஒன்றாக கட்டி வைக்க வேண்டும். அரசமர குச்சி வேப்பங்குச்சி.

- Advertisement -

அரசன் குச்சி ஆணையும், வேப்பங்குச்சி பெண்ணையும் குறிப்பதாக சொல்லப்பட்டுள்ளது. சின்ன சின்ன இரண்டு குச்சிகளை வீட்டிற்கு கொண்டு வந்து அதன் நடுவே கொஞ்சம் தேன் தடவி இரண்டு குச்சிகளையும் ஒன்றாக வைத்து ஒரு மஞ்சள் நூலை கட்டி பூஜையறையில் எங்கேயாவது ஒரு இடத்தில் வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: இந்த வருடம் கேதார கௌரி விரதம் அக்டோபர் 24? அக்டோபர் 25? சாஸ்திரம் என்ன சொல்கிறது? நோன்பின் முழு பலனை பெற இந்த நாளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்..

48 நாட்கள் கழித்து இந்த குச்சியை கால்படாத இடத்தில் கொண்டு போய் போட்டுவிட்டு, மீண்டும் புதிய குச்சியை கொண்டு வந்து இப்படி கட்டி வீட்டில் வைத்துக் கொள்ளலாம். இந்த சின்ன பரிகாரத்தை செய்தாலும் கணவன் மனைவிக்குள் ஆயசுக்கும் பிரச்சனை வராமல் இருக்கும். அதாவது சண்டை சச்சரவு வரக்கூடாது என்று நாம் நினைப்போம். ஆனால் நம்முடைய தலைவிதி ஜாதக கட்டத்தில் ஏதாவது கோளாறு இருந்து, நம்மை கெட்ட நேரம் ஆட்டி படைத்தாலும் அந்த சமயத்தில் நாம் பிரியாமல் இருக்க இந்த சின்ன பரிகாரம் கை கொடுக்கும் என்ற தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -