வீட்டில் சண்டை வராமல் இருக்க, ஆயுசுக்கும் கணவன் மனைவி பிரியாமல் இணைந்து இல்லற வாழ்க்கையை நடத்த இந்த 1 தாயத்து போதும்.

fight1

இன்று கணவன் மனைவி பிரிவுக்கு காரணமே தேவை இல்லை. ஒன்றுக்கும் உபயோகம் இல்லாத காரணத்தால் கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பார்கள். இந்த சமுதாயத்தில் கௌரவமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் நம்முடைய இல்லறம் இனிமையாக இருக்க வேண்டும். அம்மா, அப்பா, கணவன், மனைவி, குழந்தைகள் என்று ஒற்றுமையாக வாழக்கூடிய குடும்பத்தில் இருக்கும் சந்தோஷம், தனியாக வாழக்கூடிய வாழ்க்கையில் கட்டாயம் கிடைக்கவே கிடைக்காது. ஒற்றுமையை வலியுறுத்தி சிறுவயதிலிருந்து எத்தனையோ கதைகளை படித்து வருகின்றோம். இருப்பினும், ஒற்றுமையின் மகத்துவத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. காரணம் விட்டுக்கொடுக்கும் தன்மை இல்லை. நீ பெரியவரா? நான் பெரியவரா? என்று ஈகோ பிரச்சனை ஒரு பக்கம்.

fight4

விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும் பிரச்சனைகளில் பாதி குறைந்துவிடும். சரி, கணவன் மனைவி ஒற்றுமைக்கும் இல்லத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களின் ஒற்றுமைக்கும் ஆன்மீக ரீதியாக, தாந்திரீக ரீதியாக என்ன பரிகாரத்தை செய்யலாம் என்பதைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

இந்த பரிகாரத்திற்க்கு உங்களுக்கு இரண்டு வேர் இருந்தால் போதும். வாழை மரத்தின் அடியில் இருக்ககும் சிறிய வேர். ஆல விழுது. ஆலமரத்து வேர் கிடையாது. ஆல மரத்தில் இருக்கும் விழுது. இந்த இரண்டு வேரையும் சிறிய அளவில் உங்கள் வீட்டிற்கு எடுத்து வந்து, அதை சுத்தி செய்துகொள்ள வேண்டும். சுத்தி செய்வது என்றால், அந்த 2 வேரையும் முதலில் மஞ்சள் தண்ணீரில் கழுவி, அதன் பின்பு சுத்தமான தண்ணீரில் கழுவி ஈரத்தை உலர வைத்து பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

பித்தளை, செம்பு, வெள்ளி, தங்கம், இப்படி உங்கள் வசதிக்கு ஏற்ப தாயத்தை வாங்கிக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் பிரச்சனை என்றால் இரண்டு தாயத்துகளை வாங்கிக்கொள்ளலாம். குடும்ப உறவினர்களுக்குள் அத்தனை பேருக்கும் சண்டை சச்சரவு பிரச்சனை என்றால் வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்களோ அத்தனை தாயத்து வாங்கி கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றார்போல் வேரையும் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதாவது ஒரு தாயத்துக்குள் ஒரு வாழை மரத்தின் வேர், ஒரு ஆலமரத்து விழுது இரண்டையும் ஜோடியாக வைக்க வேண்டும். பூஜையறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, ஒவ்வொரு தாயத்தாக எடுத்து அதன் உள்ளே இரண்டு வேர்களையும் வைத்து தாயத்தை மூடி போட்டு, ஒரு சிறிய கிண்ணத்தில் தயார் செய்த இந்த தாயத்தை வைத்துவிடுங்கள். வேர் போட்ட தாயத்தை தரையில் வைக்கக்கூடாது.

aala-maram

சிறிய பாத்திரத்தில் இருக்கக்கூடிய தாயத்து உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே மூன்று நாட்கள் இருக்க வேண்டும். உங்களுடைய இஷ்ட தெய்வம் அல்லது குல தெய்வம் எந்த தெய்வத்தை வேண்டுமென்றாலும் மனதார வேண்டிக்கொண்டு, இந்த தாயத்தை தயார் செய்ய வேண்டும். மூன்று நாட்கள் தொடர்ந்து அந்த தாயத்தை பூஜை அறையில் வைத்து தீபம் ஏற்றி, அந்த தாயத்திற்கு தீப தூப ஆராதனை காட்டி வழிபாடு செய்துவிட்டு, அதன் பின்பு அந்த தாயத்தை மூன்றாவது நாள் பூஜை முடிந்ததும் எடுத்து குடும்ப உறுப்பினர்கள் கட்டிக்கொள்ளலாம்.

thayathu-1

சிவப்பு நிற கயிரிலோ அல்லது செயினிலோ கோர்த்து கூட இந்த தாயத்தை அணிந்து கொள்வதில் தவறு கிடையாது. முடிந்தவரை கழுத்தில் அணிந்து கொள்ளுங்கள். கழுத்தில் கட்ட முடியாத பட்சத்தில் இடுப்பில் இந்த தாயத்தை அணிந்து கொள்ளலாம். இந்த தாயத்தை அணிந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கக்கூடிய பிரச்சனை தீரும். கருத்து வேறுபாடுகள் மறையும். முயற்சி செய்து பாருங்கள்.