நிறைய சொந்த பந்தங்கள் இருந்தும் குடும்பத்தில் ஒற்றுமை இல்லையா? பலநாள் பகையையும் ஒரு நாளில் தீர்க்கக்கூடிய சக்தி வாய்ந்த வேர் வழிபாடு!

deepam

இன்றைய சூழ்நிலையில் கூட்டுக் குடும்பம் என்ற கலாச்சாரமே இல்லாமல் போய்விட்டது. நிறைய வீடுகளில் அம்மா அப்பா அண்ணன் தம்பி என்ற சொந்தபந்தங்கள் சூழ்ந்து இருந்தாலும் ஏதோ ஒரு காரணத்தினால் தனி குடித்தன வாழ்க்கையை தான் பெரும்பாலானவர்கள் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள். தனித் தனியாக குடித்தனம் அமைந்திருந்தாலும், சொந்தபந்தங்கள் ஒரு நல்லது கெட்டதிலாவது கூட வேண்டுமல்லவா? அதுவும் இல்லை. ஏதாவது ஒரு பிரச்சனை! சொத்து பிரச்சனை, மரியாதை கொடுப்பதில் பிரச்சனை, நீ பெரியவனா, நான் பெரியவனா என்று சண்டை போட்டு, சொந்தங்களை பிரித்துக் கொள்ள தான் பார்க்கிறார்களே தவிர, சொந்த பந்தங்களுக்கு பாசமான ஒற்றுமை என்பது இன்றைய கால சூழ்நிலையில் குறைந்து விட்டது.

vepanguchi

குடும்ப பந்தங்கள் ஒற்றுமையாக இருந்தால் குடும்பத்தில் உள்ள உறவினர்கள் ஒருவருக்கு ஒருவர் கஷ்ட காலங்களில் கைகொடுத்து, உதவிகரமாக இருந்தால் அந்த வாழ்க்கையில் கிடைக்கும் சுகமே வேறு. உறவினர்களுக்கு இடையே ஆதரவு என்ற ஒன்று நிச்சயம் இருக்க வேண்டும்.

ஆதரவற்ற சூழ்நிலையில் இருப்பவர்களுக்குத் தான் தெரியும் உறவுகளின் அருமையும் பெருமையும். சரி உங்களுடைய குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சண்டை சச்சரவுகள் இருக்கக்கூடாது என்றால் ஆன்மீக ரீதியாக என்ன செய்யலாம் என்பதைப் பற்றி இப்போது தெரிந்துகொள்வோம்.

vazhaimara-ver

முதலில் இதற்கு தேவையான பொருட்கள். வேப்பமரத்தில் இருக்கக்கூடிய குச்சிகள், வாழை மரத்தினுடைய வேர். ஒரு சிறிய சதுர அளவில் மஞ்சள் நிற காட்டன் துணி. வேப்ப மரத்தில் சிறிய சிறிய கிளைகளிலிருந்து சின்ன குச்சிகள் 3 எடுத்துக்கொண்டால் போதும். இதே போல் வாழை மரத்தின் வேரை கத்தரிக்கோலால் வெட்டாமல் கையாலேயே நறுக்கி மூன்று துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

ஒரு வெள்ளிக் கிழமையாக பார்த்து மாலை, வீட்டில் எப்போதும்போல பூஜை செய்து உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய கன்னிப் பெண்ணின் கைகளில் மஞ்சள் துணியையும், வேப்பமரத்து  குச்சியையும் வாழைமர வேரையும் கொடுத்து குலதெய்வத்திடம் நன்றாக வேண்டிக்கொண்டு, அந்த மஞ்சள் துணியில் வைத்து ஒரு சிறிய முடிச்சு போல கட்டி பூஜை அறையில் வைத்து சாதாரணமாக வழிபாடு செய்தாலே போதும்.

manjal-mudichu

உங்களுடைய குடும்ப வாரிசாக இருக்கக்கூடிய பெண் குழந்தைகள், திருமணமாகாத வயது வந்த பெண் குழந்தைகளின் கையால் இந்த பூஜையை செய்வது மிக மிக நல்லது என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த வேரை வைத்து மூன்று வெள்ளிக்கிழமை தொடர்ந்து சாதாரணமாக பூஜை செய்து வாருங்கள். அதன் பின்பு அந்த வேரை எடுத்து கால் படாத இடங்களில் போட்டுவிடலாம் தவறொன்றும் கிடையாது.

praying-god

இந்த இரண்டு வேரை வைத்து வழிபாடு செய்யும் போது குடும்பங்களுக்கு இடையே இருக்கும் கசப்பான அனுபவங்கள் மறைந்து வாழையடி வாழையாக உங்களது, குடும்பம் ஒற்றுமையாக சந்தோஷமாக சண்டை சச்சரவு இல்லாமல், வாழும் என்பது நம்பிக்கை. உங்களுடைய குடும்ப ஒற்றுமையில் உங்களுக்கு அக்கறை இருந்தால் நீங்களும் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.