குடும்ப பிரச்சினை தீர துர்க்கை அம்மன் வழிபாடு

durgai valipadu
- Advertisement -

மகிழ்ச்சியாக வாழ்கிறோம் என்பதற்கு அடையாளமாக திகழ்வதுதான் நம்முடைய குடும்ப வாழ்க்கை. குடும்பத்தில் இருக்கும் நபர்கள் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக வாழ்கிறார்களோ அந்த அளவிற்கு நாமும் மகிழ்ச்சியாக இருப்போம் என்று அனைவருக்கும் தெரியும். குடும்பத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து விட்டது என்றால் கண்டிப்பான முறையில் அந்த குடும்பத்தை சேர்ந்த யாராலும் நிம்மதியாக இருக்க முடியாது.

அந்த பிரச்சினையை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருப்போம். அப்படி குடும்பத்தில் இருக்கக்கூடிய எந்த பிரச்சினையாக இருந்தாலும் அந்த பிரச்சினைகள் அனைத்தையும் தீர்ப்பதற்கு துர்க்கை அம்மனை எந்த முறையில் வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

குடும்பத்தில் இருக்கக்கூடிய நபர்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று நாம் நினைப்போம். இந்த ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக திகழக்கூடியது வருமானம். வருமானம் நிறைவாக இருக்கும் பட்சத்தில் அவர்களுடைய வாழ்வாதாரம் அதிகரிக்கும். அதனால் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். வருமானம் அதிகரிப்பது, கடன் பிரச்சினை இல்லாமல் வாழ்வது, நோய் நொடியற்ற வாழ்க்கை வாழ்வது, குடும்பத்தில் எந்தவித சண்டை சச்சரவுகளும் இல்லாமல் இருப்பது, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்த அனுசரித்து செல்வது, இவை அனைத்தும் சேர்ந்ததுதான் ஒரு மகிழ்ச்சியான குடும்பமாக திகழும். இந்த மகிழ்ச்சியான குடும்பத்தை பெறுவதற்கு துர்க்கை அம்மனை வழிபடும் முறையை பற்றி பார்ப்போம்.

பொதுவாக துர்க்கை அம்மனை வழிபடுவது என்பது செவ்வாய் வெள்ளிக்கிழமையில் ராகு காலத்தில் பெண்கள் மேற்கொள்வார்கள். இந்த ராகுகால வழிபாட்டை நாம் மேற்கொள்ளும் பொழுது ஒரு சில விஷயங்களை கடைப்பிடித்தால் கண்டிப்பான முறையில் குடும்பத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். செவ்வாய்க்கிழமை அன்று ராகு காலத்தில் அருகில் இருக்கக்கூடிய துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். ராகு காலத்தின் கடைசி அரை மணி நேரத்தில் துர்க்கை அம்மனை நாம் வழிபட்டோம் என்றால் நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும்.

- Advertisement -

அவ்வாறு நாம் வேண்டுதலை வைக்கும் பொழுது நல்ல நெல்லிக்கனிகளாக பார்த்து வாங்கி 11, 21, 31 என்ற எண்ணிக்கையில் மாலையாக கோர்த்து துர்க்கை அம்மனுக்கு சாற்ற வேண்டும். பிறகு துர்க்கை அம்மனுக்கு தாழம்பூ குங்குமத்தை வாங்கி தந்துவிட்டு அகல் விளக்கில் இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து வழிபட வேண்டும். வழிபாட்டை நிறைவு செய்த பிறகு அம்மனுக்கு சாற்றிய நெல்லிக்கனி மாலையை திரும்பவும் வாங்கி அங்கு இருக்கக்கூடிய பக்தர்களுக்கு நெல்லிக்கனிகளை தானமாக தந்து விட வேண்டும். ஒரு நெல்லிக்கனியை கூட திரும்ப வீட்டிற்கு எடுத்து வரக்கூடாது.

இந்த முறையில் நாம் தொடர்ந்து நெல்லிக்கனியை மாலையாக சாற்றி அங்கு வரும் பக்தர்களுக்கு தானமாக தருவதன் மூலம் குடும்பத்தில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியான நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும்.

இதையும் படிக்கலாமே: நாளை அசோகா அஷ்டமி வழிபாடு
முழு நம்பிக்கையுடன் துர்க்கை அம்மனை இந்த முறையில் வழிபட நம் குடும்பத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கும்.

- Advertisement -