- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகுடும்ப சண்டை விலக ஞாயிற்றுக்கிழமை பரிகாரம்

குடும்ப சண்டை விலக ஞாயிற்றுக்கிழமை பரிகாரம்

- Advertisement -

சந்தோஷமாக நிம்மதியாக இருக்கும் குடும்பத்தில், திடீரென ஏதோ ஒரு காரணத்தை வைத்து ஒரு சண்டை வரும். அந்த சண்டை ஒரு சில மணி நேரங்களில் பெரிய பூகம்பமாக மாறும். அதன் பின்பு குடும்பத்தில் இருப்பவர்களுக்கு வாக்குவாதம், மனஸ்தாபம் ஏற்படும். தேவையற்ற மன கசப்புகளும் உண்டாகும். சின்னதாக வந்த சண்டையால் பிரிந்த குடும்பங்கள் எல்லாம் எத்தனையோ இருக்கிறது.

இதெல்லாம் எதனால் வந்தது என்று சற்று சிந்தித்துப் பார்த்தால். நமக்கு எதுவும் புரியாது. நம் வீட்டில் தங்கியிருக்கும் எதிர்மறை ஆற்றல், கண் திருஷ்டி, கெட்ட சக்தியின் ஆட்டம் தான் இது. அந்த பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டும் என்றால் நாம் ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரத்தில் இறைவழிபாடு செய்ய வேண்டும். உங்கள் மனதிற்கு பிடித்த இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை ராகுகால வழிபாடு

அந்த இஷ்ட தெய்வம் உக்கிர தெய்வங்களாக இருக்க வேண்டும். பிரித்திங்கரா, நரசிம்மர், அங்காள பரமேஸ்வரி, காளி, வாராஹி இப்படி எந்த உக்கிர தெய்வங்களாக இருந்தாலும் சரி, இவர்களில் யாராவது ஒருவரை வழிபாட்டிற்காக நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். முதல் வாரம் ஞாயிற்றுக்கிழமை இவர்களை நினைத்து செய்ய துவங்கும் பரிகாரத்தை, தொடர்ந்து ஒன்பது வாரம் ஞாயிற்றுக்கிழமையும் செய்ய வேண்டும். இடையே மாதவிடாய் நாட்கள் வந்தால் அந்த வாரத்தை தவிர்த்துக் கொள்ளலாம். தவறு கிடையாது.

ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை ராகுகால நேரம். அந்த நேரத்தில் முதலில் உங்கள் வீட்டை துடைக்க வேண்டும். அரை பக்கெட் தண்ணீரில் கொஞ்சமாக பச்சை கற்பூரம், அருகம்புல் பொடி, வெட்டிவேர் பொடி, சேர்த்து கரைத்து, இந்த தண்ணீரை கொண்டு மூளை முடுக்குகள் முதற்கொண்டு, வீட்டை துடைக்க வேண்டும். கட்டில் சோஃபாவுக்கு அடியில் என்று எல்லா இடத்தையும் சுத்தம் செய்யணும். வாஷிங் மெஷின் அடியில், மூளை முடுக்குகளிலும் பொருட்களின் அடியிலும் துடைக்காமல் விடக்கூடாது. எல்லா இடத்தையும் முதலில் துடைத்து வீட்டை முதலில் சுத்தம் செய்து விட வேண்டும்.

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரத்தில் ஒரு மண் அகல் விளக்கு ஏற்றி, வரவேற்பு அறையில் வைக்க வேண்டும். மண் அகல் விளக்கை ஏற்றி வைக்கும் போது, நீங்கள் மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் அந்த உக்கிர தெய்வத்தின் நாமத்தை 27 முறை சொல்ல வேண்டும். அப்போது நீங்கள் சொல்லும் அந்த பெயர், நீங்கள் உச்சரிக்கப்பட்ட அந்த தெய்வம் வந்து அந்த தீபச்சுடரில் அமர்ந்து, அந்த தீபச்சுடரிலிருந்து வெளிவரும் சூட்டில் உங்கள் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகளை பொசிக்கி விடும் என்பதுதான் இதில் மறைந்திருக்கும் நம்பிக்கை.

உதாரணத்திற்கு நரசிம்மரை நினைத்து இந்த விளக்கை ஏற்றினால், ‘நரசிம்ம மூர்த்தியே  எங்கள் வீட்டில் அவதரித்து, வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியை அழித்து நிம்மதியை தர வேண்டும். சண்டை வராமல் பாதுகாக்க வேண்டும்’. என்று பிரார்த்தனை செய்து விளக்கு ஏற்றுங்கள். விளக்கு ஏற்றி வைத்துவிட்டு ‘ஓம் நரசிம்மரே போற்றி போற்றி’ என்ற மந்திரத்தை சொல்லுங்கள்.

இதையும் படிக்கலாமே: பண தேவை பூர்த்தி அடைய அமாவாசை வழிபாடு

வாய் விட்டு இந்த மந்திரத்தை சொன்னாலும் தவறு கிடையாது. நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த பரிகாரம் நிம்மதியான சண்டையில்லாத குடும்ப சூழ்நிலையை உருவாக்கித் தரும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து 9 வாரம் செய்யும்போது நினைத்துப் பார்க்க முடியாத நல்லது வீட்டில் நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்