குடும்பம் நிம்மதியாக வாழ பௌர்ணமி அன்று செய்ய வேண்டியது

sivan sad lady
- Advertisement -

ஒவ்வொருவரும் தினம் தினம் பாடுபடுவது நேரம் பகல் பாராமல் உழைப்பது இவை எல்லாமே தன்னுடைய குடும்பத்தின் நலனுக்காக மட்டும் தான். அப்படியான குடும்பத்தில் எப்போதும் நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்து இருக்க வேண்டும். அது இல்லாது போனால் நாம் செய்யும் அனைத்துமே வீண் தான்.ஆனால் இன்று பெரும்பாலான குடும்பங்கள் நிம்மதி இழந்து தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

ஒரு புறம் பணப்பிரச்சனை இருந்தாலும் இன்னொரு புறம் மனப்பிரச்சனைகள், சுற்றி இருப்பவர்களின் தொல்லைகள், வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை, நம்முடைய கர்மாக்கள், கிரக சூழ்நிலை என ஏதாவது ஒன்றில் மனிதன் உழன்று துன்பப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறான். இவற்றையெல்லாம் சரி செய்யக் கூடிய ஒரு எளிமையான வழிமுறையை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

குடும்பம் சந்தோஷமாக வாழ பௌர்ணமி அன்று செய்ய வேண்டியது

பௌர்ணமி என்றாலே அது பல தெய்வங்களின் வழிபாட்டுக்குரிய நாள். குறிப்பாக அன்றைய தினத்தில் சிவ வழிபாடு மிகவும் சிறந்ததாக சொல்லப்படுகிறது. அதைப் போல் முருகர், அம்மன் போன்ற தெய்வங்களுக்கெல்லாம் கூட பௌர்ணமி தின வழிபாடு சிறந்தது. இவை அனைத்தையும் விட அன்றைய தினத்தில் குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

அப்படியான அந்த தினத்தில் நாம் வழிபாடுகள் ஏதும் செய்யவில்லை என்றாலும் இந்த மூன்று காரியங்களை செய்பவர்கள் இல்லத்தில் என்றென்றும் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்திருக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று பார்க்கலாம். முதலில் செய்ய வேண்டியது பசு மாட்டிற்கு அன்றைய தினத்தில் அகத்திக்கீரை கொடுக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

பசு மாட்டிற்கு அமாவாசை தினத்தில் தான் இதை செய்வார்கள் இது அனைவருக்கும் தெரியும். ஆனால் பௌர்ணமி தினத்திலும் இதை செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் இருக்கும் தோஷங்கள் எல்லாம் நிவர்த்தி ஆகி நிம்மதி பெருகும் என்று சொல்லப்படுகிறது. காரிய தடைகள் அனைத்தும் நிவர்த்தி ஆகும்.

அடுத்ததாக அன்றைய தினத்தில் சிவாலயத்திற்கு அபிஷேகத்திற்கு பால் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது . இதன் மூலம் குடும்பத்தில் உள்ள வறுமை நீங்கி விடும் என்பதோடு, பண வரவும் அதிகரிக்கும். பணவரவு தாராளமாக இருந்தாலே பல பிரச்சனைகள் சரியாகி விடும். இத்துடன் குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியம் சீராக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இவைகளை செய்வதோடு மட்டுமின்றி அன்றைய தினத்தில் யாரேனும் ஒருவருக்காவது உணவு தானம் செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இந்த மூன்று விஷயங்களில் இது தான் மிகவும் முக்கியமானதாக சொல்லப்படுகிறது.

அன்றைய தினத்தில் நாம் செய்யக் கூடிய தானமானது நம் குடும்பத்தில் உள்ள கர்மாக்கள், தோஷங்கள் என அனைத்தையும் நீக்கி குடும்பம் என்றென்றைக்கும் செல்வ செழிப்புடன் வாழ வழிவகுக்கும். இந்த மூன்று காரியங்களையும் அன்றைய தினம் செய்வது நம்முடைய வாழ்வை வளமாக்கிக் கொள்ள நாம் செய்யும் காரியமாக சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: கடன் அடைய கோதுமை பரிகாரம்

இவை அனைத்தையும் செய்ய முடியாது என்பவர்கள் அல்லது வசதி இல்லை என்பவர்கள் ஏதேனும் ஒன்றையாவது அன்றைய தினத்தில் செய்வது சிறந்ததாக சொல்லப்படுகிறது. இந்த முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நாளைய தினத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -