பெண்கள் மனதில் நினைக்கவே கூடாத விஷயங்களில் இதுவும் ஒன்று. இப்படி நினைப்பவர்களுடைய குடும்பத்திற்கு கஷ்டம் வருவதை யாராலும் தடுக்க முடியாது.

women
- Advertisement -

பெண்களின் மனதிற்குள் நினைக்க கூடாத விஷயம் என்றால் எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. சில எதிர்மறையான விஷயங்களை பெண்கள் எப்போதும் தங்களுடைய மனதில் நினைக்கவே கூடாது. நேர்மறை எண்ணத்தோடு எந்த வீட்டில் ஒரு பெண் சந்தோஷமாக இல்லறத்தை நடத்தி செல்கின்றாளோ, அந்த வீடு சுபிட்சம் அடையும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான். குழப்பமான மனநிலையில் உள்ள பெண்கள் இருக்கும் வீடும், குழம்பி போய் தான் இருக்கும் என்பதில், ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. வீட்டில் இருக்கும் பெண்கள் தங்களுடைய மனதில் நினைக்கவே கூடாத விஷயங்களில் இதற்கு முதலிடம் உண்டு, என்று சொன்னாலும் அது மிகையாகாது. அது என்ன? என்பதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

women8

பொதுவாகவே, ஆண்களை விட பெண்களுக்கு இளகிய மனம் உண்டு. கஷ்டப்படுபவர்களை பார்த்து விட்டால், அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கட்டாயம் பெண்களுக்கு வரும். இது இயல்புதான். இப்படியாக கஷ்டப்படுபவர்களை பார்த்து, அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று, ஒரு பெண்ணின் மனதிற்குள் எண்ணம் வந்தால் அது நல்லதே.

- Advertisement -

ஆனால், எப்போதுமே கஷ்டப்படுபவர்களை பார்த்து ‘ஐயோ பாவம்’ என்று தங்களுடைய மனதிற்குள் பெண்கள் நினைக்கவே கூடாது என்று சொல்ல பட்டுள்ளது. ஆண்களும் நினைக்கக்கூடாது தான். அது ஒரு பக்கம் இருக்கட்டும். இருப்பினும் பெண்கள் மனதில் அடுத்தவர்களை பார்த்து ‘பாவம் பாவம்’ என்று நினைத்துக் கொண்டே இருந்தால் அது பெண்களுடைய ஆழ்மனதில், ஆழமாக பதிய, நிறையவே வாய்ப்பு உள்ளது.

pichai-thanam

அந்த காலத்திலெல்லாம் முன்னோர்கள் சொல்லுவார்கள்! ‘அடுத்தவர்களைப் பார்த்து பாவம் என்ற வார்த்தையை உச்சரித்தால், பாவம் வந்து நம்மைத் தொற்றிக் கொள்ளுமாம்.’ அப்படி என்றால் என்ன அர்த்தம்? அவர்களுடைய பாவம் நம்மை வந்து சேரப் போகிறது என்ன? அவர்கள் படக்கூடிய கஷ்டம் நமக்கு வரப்போகிறதா என்ன? கட்டாயம் இல்லை. அந்த எதிர்மறை சிந்தனை நமக்குள் ஆழமாக பதிந்து, நம்முடைய வாழ்க்கையில் கஷ்டம் வர ஆரம்பித்து விடும் என்பதற்காக சொல்லப்பட்டுள்ள கூற்றுதான் அது.

- Advertisement -

ஆக யாரைப் பார்த்தும் பாவ படும் பழக்கத்தை இனி வைத்துக் கொள்ளாதீர்கள். கஷ்டப்படுபவர்களை பார்த்து அவர்களுக்கு உதவி செய்யும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். சரி, உங்களால் அடுத்தவர்களை பார்த்து பாவ படாமல் இருக்கவே முடியவில்லை. ரோட்டில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்களை பார்க்கும் போது கூட, இவர்கள் எவ்வளவு பாவம் என்று உங்களுடைய மனதில் தோன்றி விடுமா?

annathanam

கவலைப்படாதீங்க! இப்படிப்பட்ட எண்ணம் உங்களுடைய மனதிற்குள் எழுந்து விட்டால், அன்றைய தினம் உங்களால் எப்போது முடியுமோ, அப்போது ஒரு கோவிலுக்கு சென்று விட்டு, வீடு திரும்பும் வழியில், இயலாத யாராவது ஒருவருக்கேனும் சாப்பாடு வாங்கி கொடுத்து விடுங்கள். அப்போது உங்களுக்கு எந்த வித தோஷமும் ஏற்படாது. எந்தவித எதிர்மறை எண்ணமும் மனதிற்குள் பதியாது. மனது லேசாகி விடும்.

- Advertisement -

kuruvi

இதோடு மட்டுமல்லாமல் பெண்கள் தினமும் காலையில் சிட்டுக்குருவிகளுக்கு உணவு வைக்கும் பழக்கத்தினை கொண்டு வரவேண்டும். காலையில் கொஞ்சம் தானியத்தை எடுத்து மொட்டை மாடியிலோ உங்கள் வீட்டின் வெளி பக்கத்திலே ஏதாவது ஒரு இடத்தில் தினம்தோறும், அதே இடத்தில் உணவுப் வைக்கும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும்.

kuruvi

அப்போது தினமும் சிட்டுக்குருவிகள் அங்கு வருகை தந்து உங்களது உணவை சாப்பிடப் பழகிவிடும். நீங்கள் உணவு போட மறந்து விட்டாலும், அந்தக் குருவிகளே உங்கள் வீடு தேடி வந்து கீச் கீச் என்ற சத்தம் போட்டு உங்களிடம் உணவை கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு, நிலைமை மாறி விடும். இந்த பழக்கத்தை உங்கள் வீட்டில் கொண்டு வாருங்கள். உங்கள் வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக தங்க இதுவும் ஒரு நல்ல வழி என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
குலதெய்வத்தை வீட்டிற்கு வரவழைக்கும் ‘அரகஜா’ வேறு எந்த தெய்வங்களுக்கு எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா? தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்பட்டு போவீர்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -