குலதெய்வம் வீடு தேடி வர நிலை வாசல் பரிகாரம்

amman nilaivasal
- Advertisement -

ஒரு குடும்பத்திற்கு குலதெய்வ வழிபாடு எத்தனை முக்கியமானது என்பதை யாரும் சொல்லி தெரிய வேண்டியது கிடையாது. ஒரு குலம் தழைக்க வேண்டும் எனில் அங்கு நிச்சயம் குலதெய்வ அருள் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். குலதெய்வ அருள் இல்லாது போனால் நம்முடைய வாழ்க்கையில் எந்தவிதமான ஏற்றங்களையும் பெற முடியாது.

அத்தகைய குலதெய்வத்தின் அருளானது அனைவருக்கும் எளிதில் கிடைத்து விடாது. அதற்கு குலதெய்வ வழிபாட்டை முறையாக செய்ய வேண்டும். இந்த குலதெய்வ வழிபாட்டுடன் நாம் செய்யக் கூடிய இந்த ஒரு எளிய வழிப்பாட்டு முறையில் குலதெய்வத்தை நம் வீட்டிற்கு கூட்டி வரலாம் என்று சொல்லப்படுகிறது. அது என்ன வழிபாடு என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

குலதெய்வம் வீடு தேடி வர

இந்த வழிபாட்டை நீங்கள் வளர்பிறையில் வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை என்றாலே அம்மன் வழிபாட்டிற்கு உரிய நாள். அதே போல் குலதெய்வ வழிபாட்டிற்கும் இந்த நாள் உகந்ததாக சொல்லப்படுகிறது. உங்கள் குலதெய்வத்திற்கான வழிபாடு நாள் எதுவாக இருந்தாலும் இந்த வழிபாட்டை வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று செய்யுங்கள்.

இந்த வழிபாடு வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்ய வேண்டும். ஆகையால் முதல் நாளே அதற்கான பொருட்களை தயாராக வைத்து விடுங்கள். இதற்கு ஒரு வெள்ளை நிறத்தில் சிறிய துணியை எடுத்து பன்னீரில் நனைத்து காய வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதே போல் புள்ளிகள் இல்லாத நல்லதாக எலுமிச்சை பழத்தை வாங்கிக் கொள்ளுங்கள். அடுத்து மூன்று ஒரு ரூபாய் நாணயம், ஒரு பச்சை நிற நூல் ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை அன்று காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு பூஜை அறையில் குலதெய்வத்தை நினைத்து முதலில் தீபம் ஏற்றி வைத்து விடுங்கள்.

அதன் பிறகு நீங்கள் காய வைத்திருக்கும் அந்த வெள்ளை நிற துணியில் ரூபாய் நாணயம், எலுமிச்சை வைத்து அதை பச்சை நிற நூலால் ஒரு முடிச்சாக கட்டுங்கள். கட்டும் போது ஓம் குலதெய்வய நமக என்ற நமத்தை சொல்லுங்கள். இத்துடன் உங்கள் குலதெய்வ பெயரையும் சேர்த்து சொல்லலாம். இப்படி குலதெய்வத்தை நினைத்து 21 முறை அல்லது 54 முறை மந்திரத்தை சொல்லி இந்த மூட்டையை கட்டுங்கள்.

- Advertisement -

இதை கட்டும் போது குலதெய்வம் உங்கள் வீட்டில் வந்து உங்களுக்கு அருள் புரிய வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த முடிச்சை உங்கள் வீட்டு நிலை வாசலில் கட்டி விடுங்கள் வீட்டிற்கு வெளியில் தெரிவது போல கட்ட வேண்டும். இந்த முடிச்சை மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாற்றுங்கள்.

இதை மாற்றும் போது எலுமிச்சை பழத்தை மட்டும் கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள்.இந்த நாணயத்தை எடுத்து குலதெய்வத்திற்காக தனியாக வைத்து விடுங்கள். புதிதாக மூன்று நாணயங்களையும் எலுமிச்சை பழத்தையும் வைத்து அதே துணியில் கூட மூட்டை கட்டலாம்.

நீங்கள் எப்போது குலதெய்வ ஆலயத்திற்கு செல்கிறீர்களோ அப்போது எடுத்து வைத்திருக்கும் நாணயத்தை குலதெய்வத்திற்கு காணிக்கையாக செலுத்தி விடுங்கள். நீங்கள் இது போல தொடர்ந்து குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்து வரும் போது இதுவரை வராமல் இருந்த குலதெய்வம் கூட உங்கள் வீடு தேடி நிச்சயமாக வரும்.

இதையும் படிக்கலாமே: பிரதோஷ நாளில் செய்ய வேண்டிய திருஷ்டி பரிகாரம்

குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருந்து நம்பிக்கையுடன் செய்து பலன் பெறலாம்.

- Advertisement -