குலதெய்வத்தின் அருள் கிடைக்க

kula dheivam banana
- Advertisement -

நம்முடைய வழிபாட்டு முறைகளில் முக்கியமானதாக கருதப்படுவது குலதெய்வ வழிபாடு தான். குலதெய்வம் என்றாலே நம்முடைய குலத்தை காப்பது தானே. அப்படியான தெய்வத்திற்கு தான் நம் வழிபாடுகளில் முதன்மையானதாகவும் கருதப்படுகிறது. அந்த குல தெய்வத்தின் அருள் எப்பொழுதும் நமக்கு கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

குலதெய்வம் அருள் கிடைக்க
இந்த குலதெய்வ வழிபாட்டை நாம் அனைவரும் கட்டாயமாக செய்ய வேண்டும். அது மட்டும் இன்றி வருடத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும் . அருகில் இருந்தால் வாதம் ஒரு முறை கூட செல்லலாம் தவறில்லை. குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் இந்த வழிமுறைகள் உங்கள் குலதெய்வத்தை வழிபட்டுக் கொள்ளலாம்.

- Advertisement -

இதற்கு நீங்கள் குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது ஒரு கைப்பிடி அளவு மண்ணை கொண்டு வர வேண்டும். அந்த மண்ணை ஒரு வெள்ளை நிற துணியில் போட்டு முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு பித்தளை சொம்பை வாங்கி மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து பிறகு அதில் இந்த மூட்டையை போட வேண்டும்.

அதன் பிறகு சொம்பின் மீது ஒரு தட்டு வைத்து மூடி அதன் மீது ஒரு அகல் விளக்கை வைத்து தினமும் குலதெய்வத்தை நினைத்து ஏற்றுங்கள். குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக உங்கள் குடும்பத்திற்கு எப்போதுமே கிடைக்கும். இத்துடன் வாழைப்பூவை பசு மாட்டிற்கு தானமாக தரும் பொழுதும் குலதெய்வ அருள் கிடைக்கும். ஏனெனில் வாழை மரத்திற்கும் குலதெய்வத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

- Advertisement -

அடுத்து செய்ய வேண்டிய ஒரு முக்கியமான வழிபாடு வாழைப்பழ தானம். இதற்கு வாதத்தில் ஏதாவது ஒரு நாளை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த நாளில் வாழைப்பழத்தை வாங்கி பூஜறையில் குலதெய்வத்தை நினைத்து வைத்து வணங்க வேண்டும். அதன் பிறகு இந்த வாழைப்பழத்தை தானமாக நாம் பிறருக்கு தர வேண்டும். இந்த தானத்தை ஆறு மாதங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் மாதங்களில் செய்ய முடியாதவர்கள் வாராவாரம் செய்யலாம்.

அதே போல் வீட்டில் மாதத்திற்கு ஒருமுறை உங்கள் குலதெய்வத்திற்கு எந்த நாள் உகந்ததோ அன்றைய தினத்தில் சர்க்கரைப் பொங்கல் படைத்து வணங்க வேண்டும். இதுவும் குலதெய்வத்தில் அருளை நமக்கு முழுவதுமாக பெற்று தரும் அது மட்டும் இன்றி குல தெய்வத்தின் பெயர் அடிக்கடி வீட்டில் உச்சரித்து பழகுங்கள் குலதெய்வம் எப்பொழுதும் உங்களை விட்டு நீங்காமல் உங்களுடனே இருக்கும்.

இதையும் படிக்கலாமே: பணம் சேர ஜாதிக்காய் தீபம்

இந்த முறைகளில் குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் கூட மனதார வேண்டிக் கொண்டு இதை செய்யலாம் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் அவர்களுக்கும் குலதெய்வம் எதுவென்று அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -