குலதெய்வ கோவிலுக்கு செல்லும் பொழுது வீட்டில் இருக்கும் இந்த இரண்டு பொருளை மறக்காமல் கொண்டு செல்லுங்கள். நீங்கள் திரும்பி வரும் போது குலதெய்வம் நிச்சயம் உங்களுடனே வீட்டுக்கு வந்து விடும்.

- Advertisement -

நம்முடைய வழிபாட்டு பழக்கத்தில் குலதெய்வ வழிபாடு என்பது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை பற்றி தனியாக சொல்ல வேண்டியது இல்லை. ஒரு குடும்பத்திற்கு குல தெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைத்து விட்டால் அந்த குடும்பத்தை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. இதன் காரணமாகவே அனைவரும் குலதெய்வ வழிபாட்டை மிகவும் சிரத்தையுடன் செய்வார்கள்.

குல தெய்வம் வீட்டிற்கு வர என்ன செய்ய வேண்டும்
இன்றைய கால சூழ்நிலையில் ஒவ்வொரு குடும்பத்திலும் பெருமளவு பிரச்சனைகள் வருவதும் அது தொடர் கதையாக சென்று கொண்டு இருப்பதும் குலதெய்வ வழிபாட்டை மறந்ததே ஒரு முக்கியமான காரணம் என்றே சொல்லலாம். நாம் எத்தனை கோவில் குளம் தெய்வம் பூஜை புனஸ்காரம் என செய்து கொண்டே இருந்தாலும் குலதெய்வ வழிபாட்டை முறையாக செய்ய விட்டால் நம்முடைய வழிபாடுகளில் எந்த பலனையும் நம்மால் பெறவே முடியாது.

- Advertisement -

அப்பேர்ப்பட்ட குலதெய்வம் நம் வீட்டிற்கு வர நாம் இது வரை பல பூஜைகளையும் பரிகாரங்களையும் பார்த்திருப்போம். ஆனால் குலதெய்வ கோவிலுக்கு செல்லும் பொழுது நம் வீட்டில் இருக்கும் இந்த இரண்டு பொருள்களை கொண்டு சென்று வழிப்பட்டால் நிச்சயம் குலதெய்வம் மனம் மகிழ்ந்து நம்முடன் வீட்டிற்கு வந்து விடும் என்று சொல்லப்படுகிறது.

நாம் இருக்கும் இடத்துக்கு அருகில் குலதெய்வம் இருந்தால் நிச்சயம் மாதம் ஒரு முறையோ அல்லது நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்று அவர்களுக்கான வழிபாட்டை முறைப்படி செய்து வர வேண்டும் வெகு தொலைவில் உள்ளது என்றால் கண்டிப்பாக வருடத்தில் ஒரு முறையாவது குலதெய்வ ஆலயம் சென்று அங்கு வழிபாட்டை செய்ய வேண்டும். இதை தவறாமல் செய்தால் தான் நாம் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும்.

- Advertisement -

அப்படி குலதெய்வ கோவிலுக்கு செல்லக் கூடிய வேளையில் உங்கள் குலதெய்வத்திற்கான பொருட்கள் அனைத்தையும் முடிந்த வரையில் நீங்களே இங்கிருந்து கொண்டு செல்ல முயற்சி செய்யுங்கள். பெரும்பாலானோர் அங்கு சென்று வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். இது பயணத்தின் சிரமத்தை தவிர்ப்பதற்காகவும் இருக்கலாம். ஆனாலும் குலதெய்வ கோவிலை பொறுத்த வரையில் நம் கையால் வாங்கி நம் வீட்டில் வைத்த பிறகு கொண்டு செல்லும் பொழுது அதற்கான பலனே தனி தான்.

அந்த வகையில் குலதெய்வ கோவிலுக்கு செல்லும் பொழுது நாம் வீட்டில் உள்ள அரிசி பானையில் இருந்து ஒரு கைப்பிடியும், கல்லுப்பிலிருந்து அதை ஒரு கைப்பிடியும் எடுத்து வெள்ளை துணியை மஞ்சளில் நினைத்து பிறகு காய வைத்து அந்த துணியில் அரிசியும் கல் உப்பையும் தனித்தனியாக மூட்டையாக கட்டி அந்த மூட்டையை கொண்டு குலதெய்வத்திற்கு நீங்கள் படைக்கும் படையலுடன் வைத்து வழிபட வேண்டும்.

இதையும் படிக்காலமே: வெள்ளிக்கிழமை இந்த 3 பொருட்களை ஒன்றாக சேர்த்து மகாலட்சுமி பாதங்களில் வைத்தால் வீட்டில், அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும்.

இந்த அரிசி உப்பு மூட்டையை நீங்கள் வைத்து வணங்கிய பிறகு குலதெய்வமே மனம் மகிழ்ந்து உங்களுடைய வேண்டுதலை ஏற்றுக் கொண்டு உங்களின் வேண்டுதலை நிறைவேற்ற உங்களுடனே வீட்டிற்கு திரும்பி வரும் என்றும் சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் இனி குலதெய்வ கோவிலுக்கு செல்லும் பொழுது இந்த இரண்டு பொருட்களை தவறாமல் கொண்டு சென்று குல தெய்வத்தை வீட்டிற்கு அழைத்துக் கொள்ளலாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -