போகி அன்று செய்ய வேண்டிய குலதெய்வ வழிபாடு

amman pray sombhu
- Advertisement -

பொதுவாக போகி பண்டிகை என்றால் வீட்டில் உள்ள பழைய வற்றை எல்லாம் எரிக்க வேண்டும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. போகி என்றாலே பழையவற்றை போட்டி புதியவற்றை புகுத்தல் என்பது தான் இதற்கு நம் மனதில் உள்ள தீய எண்ணங்கள் கெட்ட புத்திகள் அனைத்தையும் ஒதுக்கி நல்ல சிந்தனை நல்ல எண்ணங்களை புதுப்பிக்க வேண்டும்என்பது தான் இதனுடைய அர்த்தம்.

இத்தகைய நல்ல நாளில் நம் குலதெய்வத்தை நினைத்து வழிபாடு தவறாமல் செய்ய வேண்டும். இதை காலம் காலமாக பின்பற்றி வரும் வழிப்பாட்டு முறைகளில் ஒன்றுதான் இந்த வகையில் இந்த போகி அன்று குலதெய்வத்தை இந்த முறையில் வழிபட்டால் போதும். குலதெய்வம் நம் உடன் வருந்து நம்மை காக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த வழிபாட்டை குறித்து இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

போகி அன்று செய்ய வேண்டிய குலதெய்வ வழிபாடு

இந்த வழிபாடு செய்வதற்காக நேரத்தை குறித்து பார்க்கலாம் இந்த வழிபாட்டை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம் அல்லது 6 மணியிருந்து 7.30 வரை செய்ய வேண்டும். தவறினால் மாலை 5.30 மணிக்கு மேல் இரவு 10.30 மணிக்குள்ளாக இந்த வழிபாட்டை செய்து விடுங்கள்.

இந்த வழிபாட்டிற்கு நமக்கு தேவையானது ஒரு சொம்பு நிறைய சுத்தமான தண்ணீர். சிறிய அளவிலான குடம் இருந்தால் அதையும் வைத்து வழிபடலாம். இந்த தண்ணீரை கொஞ்சம் வேப்ப இலை, துளசி இலை, மஞ்சள் மூன்றையும் கலந்து வைத்து விடுங்கள். அதன் பிறகு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து சோம்பின் வாய் பகுதியில் நல்ல வாசம் மிக்க மலர்களை வைத்து கட்டி விடுங்கள்.

- Advertisement -

இப்போது சோம்பில் உங்கள் குலதெய்வம் வந்து அமர்ந்து விட்டது என்று அர்த்தம்.. இதை உங்கள் பூஜை அறையில் வைத்து விடுங்கள். அதன் பிறகு குலதெய்வ வழிபாட்டை நீங்கள் எந்த விதமாக செய்வீர்களோ அது போல வெற்றிலை பாக்கு பூ பழம் தேங்காய் குறிப்பாக இளநீர் பன்னீர் போன்றவற்றை வாங்கி வைத்து விடுங்கள்.

இந்த வழிபாட்டிற்கு நெய்வேத்தியமாக வடை பாயாசத்துடன் நல்ல விருந்து சாப்பாடு தயார் செய்யுங்கள். இதில் முக்கியமாக துள்ளு மாவு தயார் செய்ய வேண்டும். இது மிகவும் அவசியமான ஒன்று. இவையெல்லாம் செய்து நீங்கள் பூஜை அறையில் வைத்திருக்கும் கலசத்திற்கு முன்பாக வாழை இலை போட்டு நெய்வேத்தியத்தை வைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த நேரத்தில் உங்கள் குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொள்ளுங்கள். குலதெய்வம் தெரியாதவர்கள் கூட இந்த வழிபாட்டை செய்யலாம். அவர்களும் குலதெய்வத்தை நினைத்துக் கொள்ளுங்கள். குலதெய்வத்திற்கு உங்களை நிச்சயமாக தெரியும். இத்துடன் இந்த பூஜை செய்யும் வேளையில் வீடு நல்ல சாம்பிராணி மணத்துடன் இருக்க வேண்டும் அதையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

குலதெய்வ மந்திரம் தெரிந்தவர்கள் மந்திரத்தை சொல்லலாம். மந்திரம் தெரியாதவர்கள் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை சொன்ன பிறகு உங்கள் குலதெய்வத்தின் பெயரை சொல்லுங்கள். குலதெய்வமே தெரியாதவர்கள் ஓம் என்று மட்டும் சொன்னால் போதும். இதை மந்திரத்தை 27 முறை சொல்லிய பிறகு கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

பூஜை நிறைவு செய்த பிறகு நீங்கள் தயார் செய்து வைத்த துள்ளு மாவை உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் ஏதேனும் சிறிய பெண் குழந்தைக்கு அல்லது சுமங்கலி பெண்ணுக்கு கொடுத்து விட்டு அதன் பிறகு வீட்டில் உள்ளவர்கள் இந்த பிரசாதங்களையும் படையல் சாதத்தையும் சாப்பிடுங்கள். இந்த முறையில் வழிபட்டால் இதுவரை வராத குலதெய்வம் நிச்சயம் உங்கள் வீடு தேடி வரும்.

இதையும் படிக்கலாமே: கடனடைய ஆஞ்சநேயர் பரிகாரம்

குலதெய்வம் நம் வீட்டிற்குள் வந்து விட்டால் அதைவிட பெரிய விஷயம் எதுவுமே கிடையாது. குலதெய்வத்தின் அருளிருந்தால் நம்மால் அனைத்தையும் சாதித்து விட முடியும். எந்த துன்பமும் நம்மை அத்தனை சீக்கிரத்தில் நெருங்கி விட முடியாது. அத்தகைய சக்தி வாய்ந்த தெய்வத்தை நினைத்து செய்யக் கூடிய இந்த பூஜை முறையில் நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -