அனுபவித்த துயர்கள் நீங்க, நினைத்தது நடக்க, ஆசைகள் நிறைவேற மகாலட்சுமிக்கு ஏற்ற வேண்டிய தீபம் என்ன தெரியுமா? இந்த தீபம் ஏற்றினால் இவ்வளவு பலன்களா!

jala-deepam-lakshmi
- Advertisement -

இன்பமும், துன்பமும் சேர்ந்தது தான் வாழ்க்கை. மனித வாழ்க்கையில் ஏற்படக் கூடிய இன்பங்களை கண்டு மெய்சிலிர்க்கவும் கூடாது, அதே சமயம் துன்பங்களை கண்டு அதிகம் வருத்தம் கொள்ளவும் கூடாது. இரண்டையுமே கடந்து தான் ஆக வேண்டும். மனதில் தன்னம்பிக்கையும், வைராக்கியமும் இருந்தால் நினைத்ததை அடைய முடியும். அதே சமயத்தில் மகாலட்சுமியின் அருளும் இருந்தால், எண்ணிய எண்ணங்கள் அப்படியே ஈடேறும். நாம் நினைத்ததை அடைவதற்கு மகாலட்சுமிக்கு ஏற்ற வேண்டிய சக்தி வாய்ந்த தீபம் என்ன? என்பதை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த குறிப்புகளின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

மகாலட்சுமிக்கு பொதுவாக ஐந்து முக குத்து விளக்கு அல்லது காமாட்சி அம்மன் விளக்கு, அகல் விளக்கு கூட ஏற்றி வழிபடுவது உண்டு. ஆனால் இந்த முறையில் நீங்கள் விளக்கு ஏற்றும் பொழுது நினைத்ததை உடனடியாக நிறைவேற்றி கொடுப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அப்படியான தீபம் என்ன? அதை எப்படி ஏற்ற வேண்டும்? என்று தொடர்ந்து காண்போம்.

- Advertisement -

பொதுவாக மகாலட்சுமிக்கு வெள்ளி மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். அப்படி வெள்ளிக்கிழமையன்று தீபம் ஏற்றும் பொழுது மகாலட்சுமிக்கு தனியே ஒரு தாம்பூல தட்டு வைத்து அதில் நடுவில் செம்பருத்தி இலைகளால் அல்லது தாமரை இதழ்களால் மாக்கோலம் போட்டது போல அலங்கரிக்க வேண்டும். நடுவில் இலைகளின் மீது நீங்கள் விளக்கு ஏற்றுவதற்கு ஒரு ஸ்டாண்ட் போல ஏதாவது ஒன்றை கவிழ்த்தி வையுங்கள்.

சந்தன கிண்ணங்கள் இருந்தால் அதையும் கவிழ்த்து வைக்கலாம். பின்னர் தாம்பூலம் நிறைய தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீரின் மீது மற்ற ரோஜா அல்லது சாமந்தி போன்றவற்றால் சுற்றிலும் அலங்கரிக்க வேண்டும். பூக்கள் மிதக்க ஆரம்பிக்கும். இப்பொழுது தாம்பூல தட்டின் முனைப் பகுதியில் இதே போல இலைகளைக் கொண்டு அலங்கரித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் நீங்கள் கவிழ்த்து வைத்த ஸ்டாண்ட் அல்லது கிண்ணத்தின் மீது வெள்ளி காமாட்சி அம்மன் விளக்கு அல்லது பித்தளை காமாட்சி அம்மன் விளக்கு ஒன்றை வையுங்கள். ஜலத்தின் மீது அதாவது மிதக்கும் தண்ணீரின் மீது ஏற்றக் கூடிய இந்த விளக்கை ஜல தீபம் என்பார்கள். சாதாரணமாகவே ஒரு பாத்திரத்தில் ஜலத்தை நிரப்பி அதன் மீது பூக்களால் அலங்கரித்து, அகல் விளக்குகளை ஏற்றி வைப்பார்கள். இதையும் ஜல தீபம் எனப்படுவது உண்டு. இதற்கு நிறையவே சக்தி வாய்ந்த பலன்கள் இருக்கின்றன.

இதையும் படிக்கலாமே:
கண்ணா பின்னான்னு கண்ணை மூடிக்கிட்டு கைநீட்டி வாங்கி இருக்கும் கடனுக்கு, ஒரு சமாதி கட்ட சரியான பரிகாரம் இதுதான்.

பின்னர் மகாலட்சுமியை வாசம் மிகுந்த மலர்களால் அலங்கரித்து இந்த தாம்பூலத்தின் மீது வைத்துள்ள விளக்கில் நெய் அல்லது சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றி இரண்டு திரிகளை ஒன்றாக முறுக்கி திரித்துக் கொள்ள வேண்டும். பின்னர் எண்ணெயில் திரியை போட்டு தீபம் ஏற்றி மகாலட்சுமியுடைய சக்தி வாய்ந்த மந்திரங்கள் அல்லது மூல மந்திரங்கள், போற்றிகள் போன்றவற்றை உச்சரித்துவிட்டு மனதார வழிபட வேண்டும். இது போல ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் தொடர்ந்து ஜலதீபம் ஏற்றி வர எண்ணியது எண்ணியபடி ஈடேறும் என்பது ஐதீகம். வந்த துன்பங்கள் எல்லாம் இந்த தீபம் ஏற்றுவதால் ஓடோடி சென்றுவிடும். வரக்கூடிய துன்பங்களை எல்லாம் மகாலட்சுமியின் அனுக்கிரகம் இருப்பதால் அவள் ஏற்றுக் கொள்வாள் என்பது நம்பிக்கை.

- Advertisement -