மன நிறைவோடு, சந்தோஷமாக இருக்கும் நேரங்களில் குலதெய்வத்தை இப்படி நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் சந்தோஷம் இன்னும் பல மடங்காக இரட்டிப்பாகும்.

- Advertisement -

கஷ்டம் வரும் போது, பிரச்சினைகள் வரும்போது, துன்பங்கள் துயரங்கள் வரும்போதுதான், தெய்வங்கள் நினைவிற்கு வரும். சந்தோஷம் வரும் சமயத்தில் கடவுளை மறந்து விடுகின்றோம். மனநிறைவோடு சந்தோஷமாக இருக்க கூடிய நேரத்தில் கூட இறைவனை நினைத்து, இறைவனுக்கு மன நிறைவான சிறிய நன்றியை சொல்லலாம். இப்படி சந்தோசத்தில் இறைவனை நினைக்கும் போது, உங்களுடைய சந்தோஷம் மேலும் மேலும் இன்னும் பலமடங்கு இரட்டிப்பாகும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. இன்றைக்கு வேகவேகமாக இயங்கிக் கொண்டிருக்க கூடிய இந்த உலகத்தில் நிறைய பேர் கோவில் பக்கம் காலடி எடுத்து வைத்தே பல நாட்கள் ஆகியிருக்கும். நல்ல நாள் விசேஷம் என்று வந்தால் கூட வேலை பளு காரணமாக இறைவழிபாடு செய்வதையே மறந்திருப்பார்கள்.

vilakku-praying

ஏதோ ஒரு சூழ்நிலையில் எதிர்பாராத ஒரு கஷ்டம், பணக்கஷ்டம் மனக்கஷ்டம், வேலையில் பிரச்சனை, குடும்பத்தில் பிரச்சனை என்று வந்திருக்கும். அப்போது அப்போதுதான் சுவாமியை தேடி போய், வணங்கி விழுந்து விழுந்து கும்பிடுவார்கள். கஷ்டத்தில் மட்டும் ஓடிப்போய் இறைவனின் காலை பிடிப்பதும், சந்தோஷம் வரும் போது, உங்களுக்கு அந்த சந்தோசத்தை கொடுத்த தெய்வத்தை மறுப்பதும் சரியா? சந்தோஷத்திலும் இறைவனுக்கு நன்றி சொல்வது எப்படி?

- Advertisement -

உங்கள் குல தெய்வத்திற்கு உகந்த நாளில் இந்த பூஜையை குடும்பத்தோடு வீட்டில் செய்யுங்கள். பூஜையறையில் குலதெய்வ திருவுருவப் படத்திற்கு முன்பு ஒரு மண் அகல் விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, குல தெய்வத்திற்கு உகந்த நிவேதனம் செய்து வைத்து, ஒரு பித்தளை சொம்பு நிறைய மஞ்சள் தண்ணீரை நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும்.

poojai

உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் குலதெய்வ படத்திற்கு முன்பாக அமர்ந்து கொள்ளுங்கள். ஒரு சிறிய மஞ்சள் துணியை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தை உங்கள் கையில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் குடும்ப உறுப்பினர் யார் கையில் வேண்டுமென்றாலும் இந்த எலுமிச்சம்பழம் இருக்கலாம். ஒரே ஒரு எலுமிச்சம் பழம் தான். ஒருவர் கையில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன்பின்பு குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை உச்சரித்து, எலுமிச்சம்பழத்தை மஞ்சள் துணியில் வைத்து விடுங்கள். இந்த எலுமிச்சம் பழத்துடன் சிறிதளவு மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி, பச்சை கற்பூரம், இந்த ஐந்து பொருட்களை சேர்த்து வைத்து ஒரு முடிச்சு போட்டு கட்டி உங்கள் குலதெய்வத்தின் பாதத்தில் வைத்து விடுங்கள். உங்கள் குலதெய்வம் உங்கள் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள உங்கள் வீட்டில் வந்து இந்த எண் எலுமிச்சம்பழத்தில் அமர்ந்து விடும்.

elumichai-palam

அதன் பின்பு குலதெய்வத்தை மனதார நினைத்து, ‘எங்களுடைய குடும்பம் சந்தோஷமாக உள்ளது. நிறைவான சந்தோஷத்தை கொடுத்த குலதெய்வத்திற்கு நன்றி!’ என்று உங்கள் குலதெய்வத்தின் பெயரை உச்சரித்து மனதார உங்கள் சந்தோஷத்தை உங்கள் குல தெய்வத்திடம் பகிர்ந்து, தீப தூப கற்பூர ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இதேபோல் சந்தோஷம் எங்களுக்கு மட்டுமல்லாமல், அடுத்தடுத்து வரக்கூடிய தலைமுறைக்கும் கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலை இறைவனிடம் வையுங்கள்.

kuladheivam

அந்த முடிச்சு உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே இருக்கட்டும். குலதெய்வ கோவிலுக்கு செல்லும்போது, குலதெய்வ கோவிலுக்கு அந்த முடிச்சை எடுத்து சென்று அங்கு இருக்கும் மரத்தடியில் போட்டுவிடலாம். அப்படி முடியாதவர்கள் உங்கள் வீட்டின் அருகில் ஓடும் தண்ணீர் இருந்தால் அதில் இந்த முடிச்சை கொண்டுபோய் அமாவாசை தினத்தில் போட்டு விடலாம். எதுவுமே முடியவில்லை என்றால் பூஜை செய்து 30 நாட்கள் கழித்து அந்த முடிச்சை அவிழ்த்து உள்ளே இருக்கும் எலுமிச்சம்பழத்தை உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் செடிகளில் போட்டுவிடுங்கள். எலுமிச்சை பழம் சிலநாட்களிலேயே மக்கி உங்கள் வீட்டில் இருக்கும் மண்ணோடு மண்ணாக மாறிவிடும்.

kula-dheivam

நமக்கு கஷ்டத்தைக் கொடுக்கும் போது இறைவனை திட்டுவதற்கு நமக்கு எந்த அளவிற்கு உரிமை உள்ளதோ, அதே அளவிற்குத் தான் சந்தோஷம் வரும் போது, நம்முடைய நன்றியையும் மனதார அந்த இறைவனுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -