குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாமல் தொடர்ச்சியாக தடைகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறதா? ஒருமுறை இதை செய்தால் போதும். தடைகள் விலகி குலதெய்வத்தை தரிசிக்கலாம்.

Kuladeivam
- Advertisement -

குலதெய்வ வழிபாடு என்பது நமது முன்னோர்கள் காலத்தில் இருந்து தொன்றுதொட்டு வரக்கூடிய ஒரு வழிபாட்டு முறையாகும். வருடத்திற்கு ஒருமுறையேனும் குலதெய்வ கோவிலுக்கு சென்று நாம் நமது வழக்கப்படி குலதெய்வத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தே ஆகவேண்டும். தொடர்ச்சியாக ஒருவர் குலதெய்வ வழிபாட்டை முறையாக செய்யாத பட்சத்தில் அவரின் வம்சத்திற்கே குலதெய்வ சாம்பல் என்பது ஏற்படும். சந்ததிகளின் ஜாதக கட்டங்களிலும் அந்த சாபம் குறித்த அறிகுறிகள் தென்படும்.

இது ஒருபுறம் இருக்க, சிலரால் எவ்வளவு முயற்சித்தாலும் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாமல் ஏதாவது தடை அல்லது தடங்கல் ஏற்பட்டு கொண்டே இருக்கும். இதற்க்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், குலதெய்வத்தின் கோவமே அதற்க்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த நிலையில் நமக்கான தடைகள் விலகி குலதெய்வ கோவிலுக்கு செல்ல வழிவகை செய்ய ஒரு எளிமையான பரிகாரம் உள்ளது. அது குறித்து இப்போது பார்ப்போம்.

- Advertisement -

நாம் குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்கு முன் காஞ்சிபுரத்தில் இருக்கும் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று அம்பிகையை தரிசித்து, நாம் குல தெய்வ கோவிலுக்கு செல்ல முடியாமல் இருக்கும் தடைகள் அனைத்தும் விலகி விரைவில் குலதெய்வத்தை தரிசிக்க அருள்புரிய வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு அம்மனுக்கு ஒன்பது தீபங்கள் ஏற்ற வேண்டும். பிறகு அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து, தாமரை பூ மாலையை சாற்ற வேண்டும்.

பிறகு அம்மனின் பாதத்தில் இருக்கும் ஸ்ரீ சக்கரத்தை தரிசனம் செய்ய வேண்டும். இவற்றை பௌர்ணமி தினத்தில் செய்வது மேலும் சிறப்பு சேர்க்கும். இப்படி செய்வதன் மூலம் விரைவில் குலதெய்வத்தை தரிசிக்க நமக்கு வழிபிறக்கும். பிறகு குலதெய்வ கோவிலுக்கு செல்ல வளர்பிறையில் ஒரு நல்ல நாளை குறித்து, நாம் குறித்த நாளில் குலதெய்வத்தை தரிசித்து நாம் செய்ய வேண்டிய முறைகளை செய்ய வேண்டும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: நினைத்தது அப்படியே நடக்க, பல கோடி புண்ணியம் கிடைக்க பாணலிங்கம் வழிபாடு

இவ்வாறு செய்வதன் மூலம் அதுவரை நமது வாழ்வில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் விலகி மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். சேராத குடும்பம் சேரும். பிரிந்த தம்பதிகள் ஒன்று கூடுவர். தடையுற்ற விஷயங்கள் அனைத்தும் தடையில்லாமல் நடைபெறும். மேலும் பூர்வீக சொத்துக்களில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விடும். நன்மைகள் பல கூடி வரும்.

- Advertisement -