குலதெய்வ கோவிலுக்கு போகும் பொழுது கொண்டு செல்ல வேண்டிய ஒரு முக்கியமான பொருள் என்ன? தவறியும் இந்த பொருளை அந்த ஊரில் வாங்காதீங்க!

kuladheivam-cash
- Advertisement -

குலத்தை காக்கும் குலதெய்வ அருள் என்றுமே நம்முடன் இருப்பது நல்லது என்று நம் முன்னோர்கள் கூறி வைத்துள்ளனர். குலதெய்வ அருள் இருந்தால் தான், நமக்கு சுப காரிய தடைகள் நிகழாது. இத்தகைய குலதெய்வ கோவிலுக்கு செல்லும் பொழுது, நீங்கள் கண்டிப்பாக வாங்கி செல்ல வேண்டிய ஒரு பொருள் என்ன? இதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? தவறியும் குலதெய்வ கோவிலில் வாங்க கூடாத பொருள் என்ன? என்பது போன்ற ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் இனி அறிந்துகொள்ள இருக்கிறோம்.

வருடா வருடம் தவறாமல் குலதெய்வ கோவிலுக்கு சென்று வந்தால் அந்த குடும்பத்தில் எந்த விதமான பிரச்சனைகளும், துன்பங்களும் நெருங்குவது கிடையாது. ஆனால் இன்று இருக்கும் பலருக்கு அவர்களுடைய குலதெய்வம் எது? என்றே தெரியாது நிலைமையில் இருக்கிறார்கள். குலதெய்வத்தை முதலில் அறிந்து கொள்ளுங்கள். குலதெய்வத்தை அறிய வீட்டில் பூஜை அறையில் குலதெய்வ படம் இல்லாவிட்டாலும், குலதெய்வமாக நினைத்து ஒரு செம்பு அல்லது பித்தளை கலசம் ஒன்றை வைத்ததில் தண்ணீரை நிரப்பி கொஞ்சம் மஞ்சள் தூளை போட்டு வைக்க வேண்டும். மஞ்சள் கலந்த இந்த செம்பு நீரில் குலதெய்வம் ஆவாஹணம் ஆவதாக ஒரு ஐதீகம் உண்டு.

- Advertisement -

இதனால் உங்களுடைய குலதெய்வம் யார்? என்பது தானாகவே தெரியவரும் என்கிற நம்பிக்கை நிலவுகிறது. தினமும் இந்த கலசத்திற்கு தூபம், தீபம் காண்பித்து மஞ்சள், குங்குமம் வைத்து வழிபட்டு வர வேண்டும். குலதெய்வ கோவிலுக்கு எப்பொழுதும் ஒரு ரூபாய் நாணயத்தை முடிந்து வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு வருடம் நீங்கள் செல்லும் பொழுது, காணிக்கை காசை உண்டியலில் செலுத்த வேண்டும். இதனால் வேண்டியது நிறைவேறும் என்பது நம்பிக்கை. இப்படி செல்லும் பொழுது கூடவே குலதெய்வ கோவிலுக்கு சமர்ப்பிக்க வெல்லத்தை வாங்கி கொடுக்க வேண்டும்.

வெல்லம் இனிப்பான ஒரு பொருளாக இருக்கிறது மட்டும் அல்லாமல் இது குலதெய்வத்திற்கு விருப்பமான பொருளும் ஆகும். எனவே உங்களுடைய குலதெய்வ கோவிலுக்கு செல்லும் பொழுது உங்களுடைய ஊரிலிருந்து நீங்கள் மறக்காமல் கொண்டு செல்ல வேண்டிய ஒரு பொருள் வெல்லம் ஆகும். அதே போல குலதெய்வம் இருக்கும் இடத்தில் அந்த ஊரில் நீங்கள் வெல்லத்தை வாங்கவே கூடாது.

- Advertisement -

குலதெய்வ கோவில் அமைந்திருக்கும் ஊரில் வெல்லம் வாங்கினால் நன்மை கிடையாது என்ற சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. எனவே உங்களுடைய ஊரில் வெல்லத்தை வாங்காதீர்கள். வெல்லத்தை இங்கிருந்தே கொண்டு செல்லுங்கள். அது போல இந்த வெல்லத்தை தானம் செய்ய வேண்டும். இதனால் ஏராளமான நன்மைகள் நடக்கும் என்றும் குறிப்பிடப்படுகிறது. குடும்பத்தில் இனிப்பான செய்திகள் கிடைக்க வெல்லத்தை தானம் செய்து வாருங்கள்.

இதையும் படிக்கலாமே:
எலுமிச்சை பழத்தை வீட்டு வாசலில் வெட்டி வைப்பது உண்மையில் திருஷ்டியை போக்குமா? அதை முறையாக வைப்பது எப்படி?

வெல்லம் கலந்த உணவை பசுக்களுக்கு தானம் கொடுப்பதால் பித்ரு தோஷம் தொலையும் என்றும் நம்பிக்கை உண்டு. அது போல எறும்புகளுக்கு வெல்லம் போடுவதால் சகல விதமான தோஷங்களும் நீங்குவதாகவும் ஐதீகம் உண்டு. வெல்லத்தை கோவிலுக்கு தானம் செய்வதால் செல்வ வளம் பெருகும் என்ற ஆன்மீக சிந்தனையும் உண்டு. இப்படி வெல்லத்தை வைத்து ஏராளமான ஆன்மீக குறிப்புகள் உண்டு. அதில் குலதெய்வத்திற்கு விருப்பமான இந்த வெல்லத்தை வீட்டிலிருந்து கொண்டு செல்லுங்கள். உங்களுடைய குடும்பத்திலும் வெல்லம் போன்ற இனிப்பான நிகழ்வுகள் நடக்கும்.

- Advertisement -