தொழிலில் இருக்கும் பிரச்சனைகள் நீங்க விநாயகர் வழிபாடு

vinayagar thengai
- Advertisement -

வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி உயர்ந்து நிலையை அடைய வேண்டும் என்று விருப்பம் இருப்பவர்கள் பிறரிடம் வேலை செய்யாமல் பிறருக்கு வேலை கொடுப்பார்கள். அப்படி வேலை கொடுப்பதற்காக மேற்கொள்ளும் தொழில் முயற்சியில் எடுத்த உடனேயே லாபம் கிடைத்து விடாது. பல கஷ்டங்களையும் சங்கடங்களையும் சந்தித்து பல முயற்சிகளுக்குப் பிறகு தான் அவர்களுக்கு லாபமும் தொழிலில் நல்ல வளர்ச்சியும் கிடைக்கும்.

இப்படி தொழிலில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் அனைத்தும் தங்களின் சுய முயற்சியால் தீர்த்து தொழில் வளர்ச்சி அடைய அவர்களின் முயற்சியோடு மட்டுமல்லாமல் தெய்வீக வழிபாடும் உதவி செய்யும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தொழில் ரீதியாக ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் தீருவதற்கு விநாயகப் பெருமானை சங்கடஹர சதுர்த்தி அன்று எந்த முறையில் வழிபட வேண்டும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

கருணை கடலாக திகழக்கூடிய விநாயகப் பெருமானை நாம் முழுமனதோடு வழிபடும் பொழுது நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய சங்கடங்கள் அனைத்தையுமே தீர்ப்பதற்காகவே விநாயகப் பெருமானுக்குரிய சங்கர ஹர சதுர்த்தி அன்று நாம் விநாயகப் பெருமானை வழிபட வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். எப்பேர்ப்பட்ட சங்கடமாக இருந்தாலும் அந்த சங்கடம் நிவர்த்தியாக வேண்டும் என்றால் சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானை வழிபட வேண்டும். இயன்றவர்கள் விரதம் இருந்து வழிபடலாம். இயலாதவர்கள் சாதாரணமாக வழிப்பட்டாலே அதற்குரிய பலனை விநாயகப் பெருமான் தருவார். சரி தொழில் ரீதியான பிரச்சினை தீர்வதற்கு எந்த முறையில் வழிபட வேண்டும் என்று பார்ப்போம்.

தொழிலில் வளர்ச்சி இல்லை, முடக்கம் ஏற்பட்டு விட்டது, தொழிலை மேற்கொள்வதற்காக வாங்கிய கடனை அடைக்க முடியாத சூழ்நிலை வந்துவிட்டது, தொழிலில் மறைமுக எதிரிகளால் பல பிரச்சினைகள் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது என்று இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சங்கடஹர சதுர்த்தி அன்று காலையிலேயே சுத்தமாக எழுந்து குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் விநாயகரின் படத்தை சுத்தம் செய்து அவருக்கு மலர்களை சாற்றி வழிபட வேண்டும்.

- Advertisement -

பிறகு அன்றைய தினம் விரதம் இருக்க இயன்றவர்கள் விரதம் இருக்கலாம். அன்று மாலை சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெறும் பொழுது அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். தங்களால் இயன்ற அபிஷேக பொருட்களை வாங்கி தர வேண்டும். இதோடு ஒரு தட்டில் 11 தேங்காய்களை எடுத்துக்கொள்ளுங்கள். விநாயகருக்கு பூஜை முடிந்த பிறகு அலங்காரம் நடக்கும் அல்லவா? அப்பொழுது அவருக்கு முன்பாக இந்த 11 தேங்காயையும் தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அலங்காரம் முடிந்து திரை விலகி கற்பூர தீபாரதனை காட்டிய பிறகு விநாயகரை மூன்று முறை வலம் வர வேண்டும். பிறகு விநாயகருக்கு முன்பாக வைத்திருந்த தேங்காய்களை எடுத்துக்கொண்டு போய் சிதறு தேங்காயாக உடைத்து விட வேண்டும். இப்படி தொடர்ந்து மூன்று சங்கடஹர சதுர்த்தி தினத்தில் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் தொழிலில் ஏற்பட்டிருக்கக் கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி தொழில் நல்ல லாபகரமாக நடைபெறும்.

இதையும் படிக்கலாமே: நினைத்தது நிறைவேற விநாயகர் வழிபாடு

மிகவும் சக்தி வாய்ந்த அதேசமயம் எளிமையான இந்த வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுடைய தொழிலில் நல்ல முன்னேற்றத்தை விநாயகப் பெருமான் அருள்வார்.

- Advertisement -