எலுமிச்சை பழத்தை வீட்டு வாசலில் வெட்டி வைப்பது உண்மையில் திருஷ்டியை போக்குமா? அதை முறையாக வைப்பது எப்படி?

vasal-lakshmi-lemon
- Advertisement -

பெரும்பாலும் கிராமப்புறங்களில் வீட்டு வாசலில் பார்த்தால் இரண்டு புறமும் எலுமிச்சை பழங்களை காண முடியும். இது கண் திருஷ்டியை போக்க வல்லதாக அவர்களுடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது. இப்படி எலுமிச்சை பழத்தை வீட்டு வாசலில் வைப்பதால் உண்மையில் திருஷ்டி நீங்குமா? இதனை முறையாக வைப்பது எப்படி? என்கிற ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

கிராமப்புறங்களில் மட்டும் அல்லாமல் இப்பொழுது நகர்புறங்களிலும் பெரும்பாலான இல்லங்களில் இதுபோன்று எலுமிச்சை பழத்தை வெட்டி வைப்பது உண்டு. அதை முறையாக வைக்கும் பொழுது ஏராளமான நற்பலன்கள் கிடைப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. எலுமிச்சை கனியை ஆன்மீக ரீதியாக பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருவதால், இதில் இருக்கக்கூடிய மகத்துவங்கள் ஏராளம்! எல்லா வகையான விஷேச காரியங்களுக்கும் எலுமிச்சை பழங்களை பயன்படுத்துவது உண்டு. இந்த எலுமிச்சை பழம் எத்தகைய எதிர்மறை ஆற்றல்களையும் கிரகிக்கும் தன்மை கொண்டுள்ளது.

- Advertisement -

எதிர்மறை ஆற்றல்களை விரட்டியடிக்க கூடிய தன்மை இதற்கு உண்டு என்பதால் தான் எலுமிச்சை கனியை பலியாக கொடுப்பதும் உண்டு. எலுமிச்சை என்பது சாதாரண கனியாக இல்லை! அதற்கு உயிர் உள்ளது என்று நம்பப்பட்டு வருகிறது. அதனால் தான் அதனை பலி கொடுத்து விட்டு மற்ற வேலைகளை துவங்குகிறோம். உதாரணத்திற்கு ஒரு வண்டி வாகனம் புதிதாக வாங்குகிறோம் என்றால் முதலில் எலுமிச்சை கனியை பலி கொடுத்து விட்டு தான் அந்த வண்டியை ஓட்டத் துவங்குவார்கள்.

இத்தகைய எலுமிச்சை கனியை வீடு, வாகனம், அலுவலகம், தொழில் செய்யும் இடம், வியாபாரம் செய்யும் இடம் என்று எல்லா இடங்களிலும் திருஷ்டிக்காக கட்டி தொங்க விடப்படுகிறது. அமாவாசைகளில் அல்லது ஞாயிற்றுக் கிழமைகளில் எலுமிச்சையை சுற்றி போட்டு குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் திருஷ்டி கழிக்கின்றனர்.

- Advertisement -

இத்தகைய எலுமிச்சை கனியை புள்ளிகள் எதுவும் இல்லாமல் நன்றாக பார்த்து வாங்கிக் கொள்ள வேண்டும். எலுமிச்சை பழம் அழுகி போய் இருக்கக் கூடாது. இந்த எலுமிச்சை கனியை இரண்டாக சரிபாதி ஆக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாதியில் மஞ்சளும், ஒரு பாதையில் குங்குமமும் வைத்து வாசலில் உள்ளிருந்து வெளிப்புறமாக வலது பக்கத்தில் மஞ்சளும், இடது பக்கத்தில் குங்குமமும் கொண்ட எலுமிச்சை கனியை வைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
வேலை கிடைக்காமல் திண்டாடி வருபவர்கள், இந்த ஒரு விளக்கை ஏற்றினால் போதும். கை நிறைய சம்பளத்தோடு, நாலு பேர் மதிக்கும் அளவுக்கு வேலை கிடைக்கும்.

இப்படி வைக்கும் பொழுது வீட்டை எவ்விதமான தீய சக்திகளும் நெருங்காது என்று கூறப்படுகிறது. மேலும் துர் தேவதைகளும், பில்லி, சூனியம், ஏவல் போன்ற செய்வினைகளும் இதனைக் கண்டாலே ஓடிவிடுமாம். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இதனை வைக்கலாம். அடுத்த வாரம் வரை அதை அப்படியே விட்டு விடுங்கள். நன்கு காய்ந்ததும் அடுத்த வாரத்தில் மீண்டும் மாற்றிக் கொள்ளலாம். இது போல தொடர்ந்து ஒரு எலுமிச்சை பழத்தை வீட்டு வாசலில் வைப்பதால் குடும்பத்திற்கும், அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் எந்த விதமான பிரச்சனைகளும் இல்லாமல், திருஷ்டிகளும் இல்லாமல், காத்து கருப்பு அண்டாமல் பாதுகாப்பாக இருக்கலாம் என்பது சாஸ்திரங்கள் சொல்லும் வழி முறையாகும். இவற்றை காலம் காலமாக கடைபிடித்து வருகின்றனர். நாம் முறையாக இதே போல கடைப்பிடித்து பலன் பெறலாமே!

- Advertisement -