குலதெய்வத்தின் சாபம் நீங்கி, நம்முடனே குலதெய்வம் இருந்து, அருள் புரிய வேண்டுமா? உங்கள் வீட்டு பூஜை அறையில், இந்த தீபத்தை, இன்றே ஏற்றி வையுங்கள்!

kula dheivam
- Advertisement -

ஒரு குடும்பத்திற்கு குலதெய்வத்தின் ஆசிர்வாதம் மிகவும் முக்கியம். எந்த ஒரு குடும்பமும், குலதெய்வத்தை மறந்து, மற்ற வழிபாடுகளை செய்தாலும், அது பலன் தராது, என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயமாக இருக்கலாம். இருப்பினும், நீங்கள் தொடர்ச்சியாக குலதெய்வத்தை நினைத்து, இந்த முறையில் வழிபாடு செய்யும் பட்சத்தில், குலதெய்வத்தின் மனம் மகிழ்ச்சி அடைந்து உங்களுடைய கஷ்டங்கள், உடனடியாக தீர்வதற்கு அதிகமாகவே வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. குலதெய்வத்தை எந்த முறையில் எப்படி வழிபட வேண்டும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kuladheivam 1

பொதுவாகவே, ஒருவருடைய வீட்டில் குலதெய்வம், அந்த வீட்டினுடைய நில வாசப்படியில் அமர்ந்து, அந்த வீட்டை பாதுகாப்பதாக சொல்லப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு நல்ல காரியத்திற்கு வீட்டைவிட்டு நீங்கள் வெளியே கிளம்புவதாக இருந்தால், ஒரு நொடி! நீங்கள், உங்கள் வீட்டு வாசல் படியை தாண்டும் அந்த சமயத்தில், உங்கள் வீட்டு குல தெய்வத்தை வேண்டி, குலதெய்வத்தின் பெயரை மனதார உச்சரித்து, ‘நான் செல்லக்கூடிய இந்த காரியம் நல்லபடியாக முடிய நீயே துணை!’ என்று மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.

- Advertisement -

சென்ற காரியம் நல்லபடியாக கட்டாயம் முடிந்துவிடும். திரும்பவும் வீட்டிற்குள் நுழையும் போது, உங்கள் வீட்டு வாசல் படியை தாண்டி, வீட்டிற்குள் வரும்போது, ‘சென்ற காரியம் நன்றாக நடந்தது’. குலதெய்வத்திற்கு நன்றி. என்ற ஒரு வார்த்தையை சொல்லி விட்டு வீட்டிற்குள் நுழைந்து பாருங்கள்! இதில் கிடைக்கக்கூடிய மன திருப்தியை யார் சொல்லியும் உங்களால் உணர முடியாது. நீங்கள் இதை செய்து பார்த்தால் தான் உங்களுக்கு இதன் அருமை புரியும்.

vilakku-deepam

நீங்கள் உங்களுடைய வீட்டில் தினம்தோறும் காமாட்சி அம்மன் விளக்கு தீபத்தை ஏற்றினாலும், தினம்தோறும் ஒரு மண் அகல் தீபத்தை ஏற்ற வேண்டும். அந்த மண் அகல் தீபமானது, உங்களுடைய குல தெய்வத்திற்கு என்று சொல்லி, குலதெய்வத்தின் திருவுருவப் படத்திற்கு முன்பாக வைத்து ஏற்ற வேண்டும். சிறிதளவு பசு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி குலதெய்வத்தின் பெயரைச் சொல்லி ஏற்றும் பட்சத்தில், நம் குல தெய்வத்தை மறக்கவில்லை என்பதை உணர்த்துகின்றது.

- Advertisement -

பொதுவாகவே, தூரமாக இருக்கும் குல தெய்வக் கோயிலாக இருந்தால், கட்டாயம் ஒரு குடும்பம், வருடத்திற்கு ஒரு முறையாவது அந்த குலதெய்வத்தை போய் தரிசனம் செய்துவிட்டு வரவேண்டும். கட்டாயம் இப்படித்தான் எல்லோரது குடும்பத்திலும் கடைபிடிப்பார்கள். இருப்பினும், சில சமயங்களில், ஏதாவது ஒரு சூழ்நிலை வந்து,  குலதெய்வ கோவிலுக்கு செல்ல விடாமல் தடுக்கும். அப்படி, இருக்கும் பட்சத்தில், அவர்களது குடும்பத்திற்கு குலதெய்வ கட்டு இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. அதாவது குலதெய்வம், இவர்களுக்கு உதவி செய்யக் கூடாது என்பதற்காக கூட, யாராவது சில கெட்ட சக்திகளை ஏவி விடுவதற்காக, குலதெய்வத்தை கட்டி வைத்திருப்பார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

Ayyanar3

ஒருவேளை, சூழ்நிலை உங்களால் பல வருடங்களாக குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றால், உங்கள் வீட்டில் முதலில் ஒரு ரூபாய் நாணயத்தை, மஞ்சள் துணியில் முடிந்து குலதெய்வத்தை நினைத்து, கட்டி வையுங்கள். ‘கூடிய விரைவில் நான் உன் சந்ததிக்கும் வரவேண்டும். வரும்போது இந்த முடிசினை உண்டியலில் சேர்க்க வேண்டும்’ என்று பிரார்த்தனை வைக்கலாம்.

- Advertisement -

உங்களுடைய குலதெய்வத்திற்கு மாவிளக்குப் போடும் பழக்கம் இருந்தால், வீட்டிலேயே மாவிளக்கு தீபம் தாராளமாக ஏற்றலாம். பச்சரிசி மாவு அரைத்து, சிறிது வெல்லம் சேர்த்து, பிசைந்து, விளக்கு செய்து, பசு நெய் ஊற்றி தீபம் ஏற்றிவைத்து, குலதெய்வத்தின் பெயரை மனதார சொல்லி வீட்டிலேயே குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். 11 வாரம் வெள்ளிக்கிழமை இதை தொடர்ந்து செய்து வருவது மிகவும் நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது.

mavilakku

அமாவாசை தினங்களும், பௌர்ணமி தினங்களிலும் உங்களது வீட்டின் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று, குலதெய்வத்தை நினைத்து நல்லெண்ணை தீபம் ஏற்றுவது, மிகவும் நல்லது. உங்களது குலதெய்வம் முருகர், அம்மன், பெருமாள் இப்படி எதுவாக இருந்தாலும் சரி. பழனி முருகர் என்றால், நினைத்தவுடன் தூரம் இருப்பவர்கள் அங்கு செல்லமுடியாது. திருப்பதிக்குச் செல்ல வேண்டும் என்றால் நினைத்த உடன் அங்கு செல்லமுடியாது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருப்பவர்கள் உங்கள் வீட்டுப் பக்கத்தில் இருக்கும் முருகர் கோவிலுக்கு, பெருமாள் கோவிலுக்கு, அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யுங்கள். இப்படியாக, உங்களது குலதெய்வம் இருக்கும், வேறு கோவில்களுக்கு சென்று வழிபட்டாலும் அதில் அதிகப்படியான பலனை நம்மால் பெற முடியும்..

muruga

குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை அமைந்து விட்டாலும், தொடர்ந்து நீங்களும் உங்களது குலதெய்வத்தை  நினைத்துக்கொண்டே, வேறு எந்த முறையிலாவது, தரிசனம் செய்து கொண்டே இருந்தால், கூடிய விரைவில் குலதெய்வ கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. எந்த சூழ்நிலையிலும், எதற்காகவும், யாருக்காகவும், யாரும் குலதெய்வத்தை மறக்க வேண்டாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
குளிகையில் எதை செய்கிறீர்களோ இல்லையோ இத மட்டும் செஞ்சிருங்க! அப்பறம் உங்களுக்கு அதிர்ஷ்டம் தான்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kula deivam arul pera Tamil. Kula deivam pariharam. Kula deivam pooja Tamil. Kula deivam vazhipadu.

- Advertisement -