குளிகையில் எதை செய்கிறீர்களோ இல்லையோ இத மட்டும் செஞ்சிருங்க! அப்பறம் உங்களுக்கு அதிர்ஷ்டம் தான்.

kuligai-sani

குளிகை நேரம் என்பது அதிர்ஷ்டமான நேரமாக பார்க்கப்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே! சனிபகவானின் மைந்தனாகிய குளிகன் இந்நேரத்திற்கு ஆதிக்கம் செலுத்துபவனாக இருக்கிறான். அதனால் தான் குளிகை என்ற பெயர் வந்தது. இந்த நேரத்தில் நீங்கள் எதை செய்தாலும் அது திரும்பத் திரும்ப பன்மடங்காக வளரும் என்பது ஐதீகமாக உள்ளது. எந்த ஒரு செயல் திரும்பத் திரும்ப நடைபெற வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ! அந்த செயலை குளிகை நேரத்தில் நீங்கள் துவங்கினால் நினைத்தது வெற்றியடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எந்த செயல் திரும்ப திரும்ப நடைபெறக் கூடாது என்று இருக்கிறதோ! அந்த செயலை குளிகை நேரத்தில் கட்டாயம் செய்யவே கூடாது. இதனால் தான் திருமணங்கள் குளிகை நேரத்தில் செய்யப்படுவதில்லை.

marraige-picture

குளிகையில் திருமணம் செய்தால் அந்த மணவாழ்க்கை அவ்வளவு சிறப்பானதாக இருக்காது. விவாக ரத்து நேரும். மீண்டும் திருமணம் செய்யும் நிலை வரலாம். இதனால் அந்த நேரத்தில் திருமணம் தவிர்க்கப்படுகின்றன. இந்த நேரத்தில் தங்க நகையை அடமானம் வைப்பது, கடன் வாங்குவது, இறந்தவர்களின் உடலை எடுப்பது போன்ற காரியங்களை செய்யக்கூடாது அப்படி செய்தால் அந்த விஷயங்கள் அனைத்தும் திரும்ப திரும்ப நடைபெறும் என்று நம்பப்படுகிறது. இப்போது உங்களுக்கே தெரிந்திருக்கும் எந்த மாதிரியான விஷயங்களை குளிகையில் தவிர்க்கலாம் என்று அல்லவா? எனில் குளிகையில் என்ன செய்தால் அதிர்ஷ்டம் உண்டாகும் என்று இப்பதிவில் பார்ப்போமா?

ராகு காலம், எமகண்டம் போன்ற நேரங்களில் எப்படி நல்ல விஷயங்களை தவிர்க்கிறோமோ! அதேபோல் குளிகை நேரத்தில் நல்ல காரியங்கள் செய்யப்படமாட்டாது. இந்த நேரத்தில் தங்க நகை வாங்கலாம். இந்த நேரத்தில் வாங்கப்படும் தங்க நகையானது பன்மடங்காக உங்கள் வீட்டில் பெருகும் என்பது ஐதீகம். குளிகை நேரத்தில் கடன் வாங்கினால் தானே பிரச்சனை? திரும்ப கொடுக்கலாம் அல்லவா? அவ்வாறு கொடுத்தால் உங்களுக்கு பணவரவு அதிகம் உண்டாகி கடனை திரும்ப கொடுத்து அந்த கடன் முழுவதும் அடைபடும்படி செய்து விடும். இப்போது கூறுங்கள் குளிகை அதிர்ஷ்டமான நேரம் தானே?

money

இந்த அதிர்ஷ்ட நேரத்தில் நீங்கள் இந்த விஷயத்தை செய்தால் பணம் கொழிக்கும் என்று நம்பப்பட்டு வருகிறது. சிலர் உண்மை என்றும் கூறக் கேட்டிருப்போம். நாமும் முயன்று பலன் அடையலாமே! என்ன செய்யலாம் என்று இப்போது பார்த்து விடுவோம். பணத்தை ஈர்க்கும் சக்தி சிகப்பு நிறத்திற்கு உண்டு. நீங்கள் குளிகையில் ஒரு கண்ணாடி பௌலில் சிகப்பு பட்டு துணியை விரித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களது படுக்கை அறையில் அல்லது யாரும் அடிக்கடி வராத இடங்களில் இதை வைத்துவிட்டு அதில் உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணத்தை தினமும் சேமித்து வரலாம்.

- Advertisement -

குடும்பத்தில் இருக்கும் நபர்களோ அல்லது நீங்களோ அல்லது உங்கள் குழந்தைகளோ, யாராக இருந்தாலும் சரி அந்த சிகப்பு பட்டு துணியின் மீது குளிகை நேரத்தில் தினமும் ரூபாய் நோட்டுகளை சேமித்து வருவதன் மூலம் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை பெற முடியும். நாள், நட்சத்திரம், நேரம் பார்ப்பது எல்லாம் சாதாரண விஷயம் இல்லை. ஒவ்வொரு நேரத்திற்கும் ஒவ்வொரு அதிர்ஷ்டம் தரும் யோகமுண்டு இதை நம்புபவர்கள் பலர் இருந்தாலும், ஒரு சிலர் நம்புவது இல்லை. நம்பாதவர்களுக்கு என்ன சொன்னாலும் புரிய போவதுமில்லை. நேரம் என்பது மனிதனின் வாழ்க்கையை மாற்றக்கூடிய சக்தி படைத்தது. இவ்வாறு நீங்கள் குளிகை நேரத்தில் சேமித்து கொண்டே வரும் பணத்தை தினசரி உபயோகத்திற்கு பயன்படுத்தக்கூடாது.

home

நீங்கள் சேமித்த இந்த பணத்தை கொண்டு நல்ல விஷயங்கள் செய்யலாம். உங்கள் வாழ்வில் ஏற்பட இருக்கும் மிகப்பெரிய காரியத்திற்காக கூட பயன்படுத்திக் கொள்ளலாம். வீடு கட்டப் போகிறீர்கள் என்றால் அதில் இந்த தொகையை சேர்த்துக் கொள்ளலாம். தொழில் துவங்கப் போகிறீர்களா? வியாபாரம் செய்யப்போகிறீரகளா? வண்டி, வாகனம் வாங்க போகிறீர்களா? நிலம் வாங்கப் போகிறீர்களா? இது போன்ற மிகப்பெரிய விஷயத்திற்கு இந்த பணத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் நீங்கள் செய்ய இருக்கும் காரியங்கள் தடையின்றி சிறப்புடன் நடைபெறும். குளிகையில் சேமிக்கப்படும் பணம் ஆனது பன்மடங்காகப் பெருகும் ஆற்றலுடையது. பிறகென்ன உங்களுக்கு அதிர்ஷ்ட மழை தான் பெய்யப் போகிறது என்று எடுத்துக் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.

இதையும் படிக்கலாமே
இந்த ஒரே 1 பொருளை தானம் கொடுத்து வந்தால், உங்கள் வீட்டில் எப்போதும் லக்ஷ்மி கடாட்சம் நிறைந்து இருக்கும். தடையின்றி பணவரவு இருக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kuligai neram is good or bad in Tamil. Kuligai neram palan. Kuligai neram Tamil. Kuligai neram benefits. Kuligai neram is good or bad.