குலதெய்வம் வீட்டில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள பரிகாரம்

sulam
- Advertisement -

குடும்பத்தில் தீர்க்க முடியாத கஷ்டம் வந்துவிட்டால் முதலில் வீட்டில் இருப்பவர்களுடைய மனதில் எழும் கேள்வி இதுதான். குலதெய்வம் நம் வீட்டில் தான் இருக்கிறதா. இல்லை குலதெய்வம் நம் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டதா. எதனால் குடும்பத்தில் இவ்வளவு பிரச்சினை வருகிறது என்றுதான் யோசிப்பார்கள். உங்களுடைய குலதெய்வம் உங்கள் வீட்டில் இருக்கிறதா இல்லையா, என்பதை நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

அதற்கு உண்டான எளிமையான ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். குலதெய்வத்தின் மீது சந்தேகப்பட்டு இந்த பரிகாரத்தை செய்யப் போவது கிடையாது. குலதெய்வம் நம்முடன் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவே இந்த பரிகாரத்தை செய்கின்றோம்.

- Advertisement -

குலதெய்வ பரிகாரம்

இந்த வழிபாட்டை தொடங்க ஒரு வெள்ளிக்கிழமையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். வீட்டை சுத்தம் செய்து விடுங்கள். ஒரு பித்தளை சொம்பு இதற்கு தேவை. கலசம் நிறுத்தி வைக்க. சின்ன சைஸில் பித்தளை சொம்பு வீட்டில் இருந்தாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லை புதுசாக ஒன்று வாங்கிக் கொள்ளுங்கள்.

சுத்தம் செய்த பித்தளை சொம்புக்கு மேலே மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்துக் கொள்ளுங்கள், அல்லது கலசசொம்புக்கு நூல் சுற்ற தெரியும் என்றால், நூல் கூட சுற்றிக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம். இந்த கலச சொம்புக்குள்ளே குடிக்கின்ற சுத்தமான நல்ல தண்ணீரை ஊற்றி, 3 ஏலக்காய், 3 கிராம்பு, 2 துண்டு வெட்டிவேர், கொஞ்சம் பச்சை கற்பூரம், வேப்ப இலை, மா இலை, துளசி இலை, இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள், பிறகு ஒரே ஒரு மஞ்சள் நிறத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் இல்லாத எலுமிச்சம் பழத்தை இந்த தண்ணீரில் போட்டு விடவும்.

- Advertisement -

கையில் எலுமிச்சம் பழத்தை வைத்து குலதெய்வத்தின் பெயரை 27 முறை சொல்லி அந்த எலுமிச்சம் பழத்தை தண்ணீரில் போடுங்க க்ஷஸபிறகு ஒரு தேங்காய் சுற்றி மஞ்சள் தடவி, குங்குமப்பொட்டு வைத்து, இந்த கலச சொம்பின் வாயில் வைத்து விட வேண்டும். இந்த கலசத்தை அப்படியே பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

தினமும் குலதெய்வத்தை நினைத்து விளக்கு ஏற்றி ‘குலதெய்வமே நீ இந்த வீட்டில் தான் இருக்கின்றாயா, என்று எங்களுக்கு காட்டிக்கொடு, நிம்மதி இல்லாத குடும்பத்தில் நிம்மதியை கொடு, ஒரு வேலை இந்த வீட்டில் நீ குடி இல்லை என்றாலும் இந்த கலச சோம்பல் வந்து அமர்ந்து எங்கள் குடும்பத்தை பாதுகாக்க வேண்டும்’. என்ற படி பிரார்த்தனையை வைத்து, கற்பூர ஆரத்தி காண்பித்து இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

- Advertisement -

தொடர்ந்து 48 நாள் இந்த வழிபாட்டை செய்து முடியுங்கள். 48 வது நாள் அந்த தேங்காயை எடுத்து, கலச சொம்புக்கு உள்ளே இருக்கும் எலுமிச்சம் பழத்தை எடுத்துப் பாருங்கள். எலுமிச்சம்பழம் அழுகாமல் அப்படியே இருந்தால் உங்கள் வீட்டு குலதெய்வம் உங்களோடுதான் இருக்கிறது என்று அர்த்தம். இந்த எலுமிச்சம் பழத்தை கொண்டு போய் குலதெய்வ கோவிலில் மரத்துக்கு அடியில் போடலாம். சொம்பில் இருக்கும் தீர்த்தத்தை கால்படாத இடத்தில் கொட்டலாம்.

தேங்காயை உடைத்து நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படியே குலதெய்வத்திற்கு நீங்கள் முறையாக செய்ய வேண்டிய உங்க குடும்ப வழக்கப்படி வழிபாட்டு முறைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த எளிமையான வழிபாடு உங்கள் குலதெய்வம் உங்களோடு தான் இருப்பதை உறுதி செய்யும். எலுமிச்சம்பழம் அழுகிவிட்டால் கவலைப்படாதீங்க.

அழுகிய எலுமிச்சம் பழத்தை எடுத்து கல்படாத இடத்தில் போட்டு விட்டு, தினமும் குலதெய்வத்தை நினைத்து வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி குலதெய்வம் வீட்டிற்குள் வரவேண்டும் என்று பிரார்த்தனை வைக்கவும். மீண்டும் மூன்று மாதம் கழித்து, அல்லது ஆறு மாதம் கழித்து இதே போல 48 நாள் கலச வழிபாட்டை செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே: செல்வ மழையில் நனைய செய்ய வேண்டிய பரிகாரம்

நிச்சயம் உங்களுடைய எலுமிச்சம்பழம் அழுகி போகாமல் வாடாமல் இருக்கும். நம்பிக்கையோடு செய்தால் நன்மையே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -