இந்த தவறை செய்தாலும் குலதெய்வ கோபத்திற்கு ஆளாக கூடிய சூழ்நிலை ஏற்படும். குடும்ப கஷ்டம் தீர இதையும் கொஞ்சம் தெரிஞ்சு வச்சுக்கோங்க.

pithru-kuladheivam
- Advertisement -

சில பேர் வீடுகளில் என்னதான் முயற்சி எடுத்தாலும் குலதெய்வ வழிபாட்டை செய்ய முடியாது. குலதெய்வ வழிபாட்டுக்கு செல்ல வேண்டும் என்று சொந்த பந்தங்கள் எல்லாம் சேர்ந்து கிளம்புவார்கள். ஆனால் அந்த பயணம் தடைபடும். அல்லது குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற பேச்சு வார்த்தையை எடுத்தாலே குடும்பத்தில் சண்டை சச்சரவு வரும். சில இடங்களில் குலதெய்வ கோவிலுக்கு சென்று வந்த பிறகு பெரிய அளவில் பிரச்சனைகள் வெடித்து சண்டைகள் வந்துவிடும். இப்படியெல்லாம் பிரச்சனைகள் வருவதற்கு என்ன காரணமாக இருக்கும். ஏதோ வகையில் குலதெய்வத்தின் கோபத்திற்கு நம்முடைய குடும்பம் ஆளாக இருக்கின்றது.

பொதுவாக தெய்வங்கள் தங்களை நம்பி வழிபாடு செய்யும் பக்தர்களை தண்டிக்காது என்று சொல்லுவார்கள். நாம் செய்த தவறை உணர்த்துவதற்காக சில கஷ்டங்களை நமக்கு கொடுக்கும். அந்த வரிசையில் உங்களுடைய வீட்டில் இப்படி குலதெய்வ வழிபாட்டிற்கு தடை ஏற்பட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்து சரி செய்வது, இப்படி குலதெய்வ கோபத்திற்கு ஆளாகும்படி நாம் செய்யக்கூடிய தவறுகள் என்னென்ன என்பதை பற்றிய சில ஆன்மீக ரீதியான தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

முதலில் நம்முடைய குலதெய்வம் என்பது எது என்று தெரிந்து கொள்வோம். காலம் காலமாக நம்முடைய முன்னோர்கள் வழிபாடு செய்து வந்த தெய்வத்தை தான் நம் குலதெய்வம் என்று சொல்லுவோம். அந்த குலதெய்வ ரூபத்தில் தான் நம்முடைய முன்னோர்களும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இப்படி மறைந்த நம்முடைய முன்னோர்களையும் நம் வீட்டு குலதெய்வத்தோடு சேர்த்து தான் நாம் பார்க்க வேண்டும்.

தெய்வத்திற்கு சமமான, நம்மை விட்டு மறைந்த முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி தர்ப்பண காரியங்களை சரியாக செய்யாத குடும்பத்திற்கு குலதெய்வ சாபம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது உங்களுடைய வீட்டில் வாழ்ந்த முன்னோர்களின் ஆத்மா சந்தோஷமாக இல்லை என்றால் உங்கள் வீட்டு குலதெய்வம் உங்களை ஆசீர்வதிக்காது. இறந்த முன்னோர்களை நினைத்து உங்கள் வீட்டு வழக்கப்படி நீங்கள் என்ன செய்வீர்களோ அதை வருடம் தோறும் தவறாமல் செய்துவிட வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் முன்னோர்களுக்கு செய்யக்கூடிய திரி தர்ப்பணம் வழிபாட்டை நிறுத்தாதீங்க. (இதோட சேர்த்து அகால மரணம் அடைந்தவர்கள், சிறுவயதில் இறந்தவர்கள் என்று நம்முடைய குடும்பத்தில் யாராவது இருந்தால் அவர்களை நினைத்து வழிபாடு செய்வது மிக மிக அவசியம்.)

- Advertisement -

இப்படி நாம் செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்யாமல் விட்டு விட்டால், குலதெய்வக் கோபத்திற்கு நம்முடைய குடும்பம் ஆளாகி விட்டது என்றால், நம்முடைய குடும்பத்திற்கு எப்படிப்பட்ட பிரச்சனைகள் வரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்காது. சந்தோஷம் இருக்காது. மன நிம்மதி இருக்காது அடுத்தடுத்த கெடுதல்கள் நம்மை தேடி வரும். சுலபமாக அடுத்தவர்களால் ஏவி விடப்படும் கெட்ட சக்திகள் உதாரணத்திற்கு செய்வினை ஏவல் பில்லி சூனியம் போன்ற பிரச்சனைகள் நம் குடும்பத்தை சுலபமாக தாக்கி விடும். ஏனென்றால் நம்முடைய குடும்பத்திற்கு குலதெய்வ பாதுகாப்பு இருக்காது.

நம்முடைய குடும்பத்திற்கு கெடுதல் நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ‘இந்த குடும்பத்திற்கு குலதெய்வம் ஆசிர்வாதம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை பார்ப்பார்களாம்’. இப்படிப்பட்ட செய்வினை காரியங்களில் ஈடுபடுபவர்களால், மாந்திரீக ரீதியாக கண்டுபிடித்து விட முடியும். இந்த குடும்பத்திற்கு குலதெய்வ கட்டு இருக்கிறதா இல்லையா என்று. குலதெய்வத்தின் ஆசிர்வாதம் இல்லை என்று தெரிந்து விட்டால் நம்முடைய குடும்பத்தை எதிரிகள் சுலபமாக அழித்து விட முடியும்.

ஆக குடும்பம் எப்போதும் ஒரு பாதுகாப்பு வட்டத்தில் இருக்க வேண்டும் என்றால் குலதெய்வத்தின் ஆசிர்வாதத்தை ஒவ்வொரு நாளும் பெற வேண்டும். வீட்டில் குலதெய்வ வழிபாட்டில் தடை இருந்தால் எப்பாடு பட்டாவது அந்த தடையை உடைத்து குலதெய்வ கோவிலுக்கு அங்காளி பங்காளிகளுடன் சென்று மண்டியிட்டு, முன்னோர்களையும் குலதெய்வத்தையும் மனதார நினைத்து மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள்.

உங்களால் முடிந்த போதெல்லாம் எரும்புகளுக்கு உணவளித்துக் கொண்டே வாருங்கள். குறிப்பாக கோவில்களில் மரத்தடியில் இருக்கக்கூடிய எறும்புக்கு தினமும் பச்சரிசி வெல்லம் சேர்த்த உணவை உங்கள் கையால் அன்னதானம் செய்ய வேண்டும். முடியும்போதெல்லாம் பசியால் கஷ்டப்படுபவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். கோடான கோடி புண்ணியம் உங்களை வந்து சேரும்போது தானாக குலதெய்வ சாபம் படிப்படியாக குறையும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -