தெரியாத குலதெய்வத்தை கண்டுபிடிக்க தீப வழிபாடு

amman7
- Advertisement -

நிறைய பேர் குடும்பத்தில் குலதெய்வம் எது என்றே தெரியாது. பல தலைமுறைகளாக குலதெய்வம் தெரியாமல் இவர்களாகவே ஒரு தெய்வத்தை தேர்ந்தெடுத்து, அந்த தெய்வத்தையே இவர்கள் குலதெய்வமாக ஏற்றுக் கொண்டு, வழிபாடு செய்து வந்து கொண்டிருப்பார்கள். ஆனால், நம் குடும்பத்திற்கு குலதெய்வம் இதுதான் என்று தெரியாமல் நாம் செய்யக்கூடிய வழிபாடு நமக்கு முழுமையான பலனை தராது.

நீங்களாகவே ஒரு தெய்வத்தை தேர்ந்தெடுத்து அதை குல சாமியாக, வழிபாடு செஞ்சிட்டு வரீங்க. ஆனால் அந்த தெய்வம் உங்க குல தெய்வமாக இல்லை எனும் பட்சத்தில், அந்த இறையருள் உங்களுக்கு கிடைத்தாலும், குலதெய்வத்தை வழிபாடு செய்த பரிபூரண அருளை பெற முடியாது. ஆகவே குலதெய்வத்தை தெரிந்து கொள்வதற்கு உண்டான ஒரு எளிய ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை இன்று தான் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

குலதெய்வத்தை தெரிந்து கொள்ள விளக்கு பரிகாரம்

இந்த வழிபாடு செய்ய சின்னதாக ஒரு பித்தளை சொம்பு அல்லது செம்பு செம்பு தேவை. அஷ்டலட்சுமிகளின் புகைப்படங்கள் போட்டு கடைகளில் விற்கிறது. அதை வாங்கிக் கொள்ளுங்கள். வாங்கிய இந்த சொம்பில் 1 கைப்பிடி நெல், 1 கைப்பிடி நவதானியம், 1 விரலி மஞ்சள், 1 ஜாதிக்காய், 1 மாசிக்காய், போட்டு தயார் செய்து கொள்ளுங்கள்.

உங்களுடைய ஊரின் எல்லைசாமி இருக்கும். அந்த எல்லை சாமி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து விட்டு அந்த கோவிலில் இருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து ஒரு மஞ்சள் துணியில் வைத்து கட்டிக் கொண்டு வாங்க. அதை கொண்டு வந்து இந்த கலச சோம்பல் போடுங்க. இந்த கலச சொம்புக்கு மேலே ஒரு மட்டை தேங்காயை நிற்க வைக்க வேண்டும்.

- Advertisement -

இந்த கலச சொம்பை பூஜை அறையில் வைத்து இந்த சொம்புக்கு முன்பாக ஒரு மண் அகல் விளக்கில் தொடர்ந்து 48 நாள் விளக்கு ஏற்ற வேண்டும். மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்யுங்கள். எங்கள் வீட்டு குலதெய்வம் எது என்று தெரியாது. எங்கள் வீட்டு தெரியாத குல தெய்வமே நீ யார் என்பதை எனக்கு காட்டிக் கொடு என்று மனம் உருகி பிரார்த்தனை வைத்தால், 48 நாளில் ஏதாவது ஒரு ரூபத்தில் உங்களுடைய குலதெய்வத்தை நீங்கள் கண்டுபிடித்து விடலாம்.

குலதெய்வம் தெரிய வரவில்லை 48 நாள் கழித்தும் எந்த நல்ல செய்தியும் இல்லை. ஆனால் வீட்டில் சுபகாரியங்கள் நடப்பதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்கிறீர்கள். வீட்டில் அடுத்தடுத்து நல்ல காரியம் நடக்குது எனும்போது, தெரியாத குலதெய்வம் உங்களுக்கு ஆசிர்வாதத்தை வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் செவ்வாய் கிழமை பரிகாரம்

கலச சோம்பல் இருந்த பொருட்களை எல்லாம் ஒரு பையில் போட்டு ஓடுகின்ற தண்ணீரில் அல்லது கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். பிறகு இதுநாள் வரை நீங்கள் எந்த தெய்வத்தை, குல தெய்வமாக நினைத்து வழிபாடு செய்து வந்தீர்களோ, அதே தெய்வத்தை குலசாமியாக நினைத்து வழிபாடு செய்யுங்கள். நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -