3 வெள்ளிக்கிழமைகள் வீட்டில், இந்த 3 விளக்கை ஏற்றினால் போதும். வாசலில் நிற்கும் தெய்வம் கூட உங்கள் வீட்டிற்குள் வந்து, உங்கள் சந்ததியினரை வாழ்த்தும்.

kuladheivam
- Advertisement -

சந்தோஷமாக இருந்த குடும்பத்தில் திடீரென்று பூகம்பம் வெடித்தது போல பிரச்சனைகள் வரத்தொடங்கும். பிரச்சனைக்கு காரணம் என்னவென்றே தெரியாது. ஜாதகத்தில் கிரக கோளாறாக இருக்குமா, அல்லது கெட்ட நேரம் நடக்கிறதா, என்று ஜோசியரிடம் சென்று கேட்டிருப்போம். எல்லாம் சரியாகத்தான் உள்ளது. ஆனால் உங்கள் வீட்டில் தெய்வங்கள் வாசம் செய்யவில்லை என்று சொல்லுவார்கள்‌. தெய்வங்கள் நம்முடைய வீட்டில் வாசம் செய்யாமல் போவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். கண்ணுக்கு தெரியாத எத்தனையோ எதிர்மறை விஷயங்கள் நம்முடைய தெய்வங்களை கட்டிப்போட்டு இருக்கலாம். நம் வாசலில் நின்று கொண்டிருக்கும் தெய்வத்தை வீட்டிற்குள் அழைக்க என்ன செய்வது.

சுலபமான ஒரு பரிகாரம் உள்ளது. 3 வெள்ளிக்கிழமைகள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். வீட்டுப் பெண்களின் கையால் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். வெள்ளிக் கிழமை காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு வாசலில் கோலம் போட்டு, நிலைவாசலை துடைத்து பொட்டு வைத்து விடுங்கள். அதன் பின்பு பூஜை அறையை அலங்காரம் செய்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டு குல தெய்வத்தின் திரு உருவப்படம் உங்கள் வீட்டில் இருந்தால் அந்த படத்திற்கு முன்பாக ஒரு சிறிய சொம்பில் தண்ணீர் ஊற்றி, அதில் இரண்டு துளசி இலைகளை போட்டு வைத்து விடுங்கள். இந்த தீர்த்தம் குலத்திற்காக மட்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு அகலமான தாம்பூலத் தட்டில் பச்சரிசியை நிரப்பி விட்டு அதன் மேலே 3 மண் அகல் விளக்குகளை வைத்து, அதில் ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய், இரண்டாவது அகல் விளக்கில் நெய், மூன்றாவது அகல் விளக்கில் இலுப்பெண்ணை, இப்படியாக ஊற்றி மூன்று விலங்குகளிலும் திரிபோட்டு தீபம் ஏற்றி பூஜை அறையில் வைத்து விட வேண்டும்.

நீங்களும் பூஜை அறையில் அமர்ந்து கொண்டு உங்கள் வீட்டு குலதெய்வம் வீட்டிற்கு உள்ளே வர வேண்டும் என்று அழைக்க வேண்டும். முடிந்தால் இந்த பிரார்த்தனை செய்யும்போது வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அமர்ந்து குலதெய்வத்தை வீட்டிற்கு அழைப்பது மிகவும் சிறப்பு. குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை உச்சரித்து விட்டு வீட்டிற்குள் அழைக்க வேண்டும். பிரார்த்தனையை முடித்துக் கொண்டு உங்களால் முடிந்த நிவேதனத்தை சுவாமிக்கு படைத்து தீபாராதனை காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொண்டு, குடும்பத்தோடு சேர்ந்து குலதெய்வத்திடம் நமஸ்காரம் செய்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதேபோல மூன்று வெள்ளிக்கிழமைகள் இந்த பூஜையை வீட்டில் செய்து வரவேண்டும். மூன்றாவது வெள்ளிக்கிழமை இந்த பூஜை நிறைவு அடைந்த பின்பு, ஒரு முறை குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு சென்று உங்கள் குல வழக்கப்படி குல தெய்வத்திற்கு என்ன செய்வீர்களோ அபிஷேகம் செய்வது, பொங்கல் வைப்பது, மாவிளக்கு போடுவது போன்ற முறையான வழிபாட்டை மேற்கொண்டு வீட்டிற்கு திரும்ப வேண்டும்.

இப்படி செய்ய உங்களுடைய வீட்டில் திடீரென்று எதிர்பாராது வந்த கஷ்டங்கள் உடனடியாக சரியாகிவிடும். குடும்பத்தில் ஏதேனும் நீண்ட நாட்களாக குறை இருந்தால் கூட அந்தக் குறை நிவர்த்தி ஆகிவிடும். தெய்வம் வீட்டிற்குள் வந்து இருக்கும். இந்த பூஜையைச் செய்துவிட்டு அப்படியே குல தெய்வத்தை மறந்து விடக்கூடாது. தினமும் காலையில் குலதெய்வ திருவுருவப் படத்திற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீரில் துளசி இலையைப் போட்டு தீர்த்தம் வைத்து ஒரு மண் அகல் விளக்கை ஏற்றி வைத்து குலதெய்வத்தை வணங்க வேண்டும். இப்படி செய்து வந்தாலே போதும். (குலதெய்வத்திற்கு முன்பு வைத்த தீர்த்தத்தை தினம்தோறும் எடுத்து கால் படாத இடத்தில் ஊற்றிவிட்டு புதியதாக தீர்த்தம் வைக்க வேண்டும்.) குடும்பத்தில் கஷ்டம் என்பதே இருக்காது. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -