குலதெய்வத்தின் அருளை பெற உதவும் தீபம்.

kuladheiva deepam
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் கஷ்ட நஷ்டங்கள் என்று இருக்கும். இந்த கஷ்ட நஷ்டங்களை தீர்ப்பதற்காக நாம் பல வழிகளில் முயற்சி செய்வோம். அதோடு சேர்த்து தெய்வ வழிபாட்டையும் மேற்கொள்வோம். அவ்வாறு நாம் தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது முதலிடம் வகிக்கக்கூடிய தெய்வமாக குலதெய்வம் இருக்கிறது. ஒவ்வொருவருடைய குலத்தையும் காக்கக்கூடிய தெய்வமாக இந்த குலதெய்வம் விளங்குவதால் எந்த தெய்வத்தை வணங்குகிறோமோ இல்லையோ குலதெய்வத்தை கண்டிப்பான முறையில் வணங்க வேண்டும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் குலதெய்வத்தின் அருளை பரிபூரணமாக பெற எந்த முறையில் தீபம் ஏற்ற வேண்டும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

குலதெய்வத்தின் அருள் எவர் ஒருவருக்கு பரிபூரணமாக இருக்கிறதோ அவருக்கு தான் மற்ற தெய்வங்களின் அருளும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஒரு வழிபாட்டையோ, பரிகாரத்தையோ, தானதையோ, தர்மத்தையோ எதை நாம் செய்தாலும் அதனால் நமக்கு பலன் ஏற்பட வேண்டும் என்றால் முதலில் குலதெய்வத்தை வழிபட்டு அவர்களின் அருளை பெற வேண்டும். அப்படிப்பட்ட குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கு வீட்டிலேயே நாம் ஏற்றக்கூடிய தீபத்தை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

பொதுவாக குலதெய்வ வழிபாடு என்பது பலரும் பின்பற்றி தான் வருகிறார்கள். இருந்தாலும் சிலர் அதை செய்வதில்லை என்றுதான் கூற வேண்டும். வருடத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வது மிகவும் நன்மை தரும். இயலாதவர்கள் வீட்டில் குலதெய்வத்தின் புகைப்படத்தை வைத்து வழிபடலாம். குலதெய்வத்தின் புகைப்படம் இல்லாதவர்கள் ஒரு விளக்கை குலதெய்வமாகவே நினைத்து பாவித்து வழிபாடு செய்யலாம். சரி இப்பொழுது பதிவிற்கு வருவோம்.

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய பொருளான அரகஜா தேவைப்படுகிறது. அரகஜாவை நாம் வீட்டில் உபயோகப்படுத்தும் பொழுது கண்டிப்பாக முறையில் குலதெய்வத்தின் அருள் நமக்கு கிடைக்கும். குலதெய்வத்தை வசியம் செய்யக்கூடிய சக்தி இந்த அரகஜாவிற்கு இருக்கிறது. சாதாரணமாக தீபம் ஏற்றுவதற்கு ஒரு தட்டு பிறகு விளக்கு எடுத்துக் கொள்வோம்.அதை சுத்தம் செய்து அதில் மஞ்சள் குங்குமம் வைப்போம் அல்லவா?

- Advertisement -

அப்படி மஞ்சளை பன்னீர் ஊற்றி குழைக்கும் பொழுது அதனுடன் சிறிது அரகஜாவையும் சேர்த்து குழைத்து அந்த தாம்பாளத்திற்கும் விளக்கிற்கு பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக தாம்பாளத்தில் குங்குமத்தை பரப்பிவிட்டு அதில் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைய வேண்டும். ஸ்வஸ்திக் சின்னத்தின் நடுவில் சிறிது அச்சதை அதாவது மஞ்சள் கலந்த பச்சரிசியை போட்டு அதற்கு மேல் அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை நாம் தினமும் ஏற்றலாம். தினமும் ஏற்ற இயலாதவர்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மட்டுமாவது ஏற்ற வேண்டும்.

இதையும் படிக்கலாமே: குழந்தை பேரு இல்லாதவர்கள் நாளை அன்னாபிஷேகத்தின் போது இதை செய்தால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

இந்த முறையில் நாம் தீபம் ஏற்றி வழிபட்டோம் என்றால் குலதெய்வத்தின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். குலதெய்வத்தின் அருளால் நல்ல, நிம்மதியான, மகிழ்ச்சிகரமான வாழ்க்கையும் அமையும்.

- Advertisement -