வெளிநாட்டு மைதானங்களிலும் சிறப்பாக பந்து வீசி எதிரணியை நிலைகுலைப்பவர் இவரே – ரவி சாஸ்திரி

ravi

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரை வெற்றிகரமாக கைப்பற்றி, அந்த அணியுடனான டி20 தொடரில் இன்று மோத உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி வெலிங்டனில் இன்னும் சில மணி நேரத்தில் துவங்க உள்ளது.

rohith

இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இணையத்தில் கருத்து ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : கடந்த பல வெளிநாட்டு தொடர்களாக இந்திய அணி அனைத்து அணிகளையும் வீழ்த்தி வருகிறது.

குறிப்பாக பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து என அனைத்து தொடர்களையும் கைப்பற்றியது. இதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் பேட்டிங்க்கு சமமான பவுலிங் யூனிட்

kuldeep

அதிலும், குறிப்பாக குலதீப் யாதவ் அனைத்து வெளிநாட்டு தொடர்களிலும் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை அள்ளி வருகிறார். அவரின் சிறந்த பந்துவீச்சு அனைத்தும் வெளிநாட்டு மைதானங்களில் எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது என்று ரவி சாஸ்திரி பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்கலாமே : உலகக்கோப்பை தொடரில் இந்த பவுலரே இந்திய அணியின் சொத்து – சச்சின்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்